கலாவதி பாஸ்கரன்/தொங்கட்டான்

பெண் பிள்ளை இல்லை
அந்த பெண்மணிக்கு!
பிறந்த இரண்டும் ஆண்கள்
ஆசை பட்டு சின்னவனுக்கு
வாங்கி போட்டாள் காதில்
ஒரு தொங்கட்டான்!
அம்மா செல்லம் அவன்.
பையனை பால்வாடிக்கு அனுப்பினாள்!
பால் வாடி அலுத்து போய்,
டீச்சருக்கு டிமிக்கி கொடுத்து
வீட்டுக்கு வரலாம் என்றால்,
அம்மா வைய்வாளே!
அருகில் உள்ள பார்க்கில்
அமர்ந்து வேடிக்கை பார்த்தான்.
மாவு அரைக்க சென்ற
அடுத்த வீட்டு மாமி கண்ணில்
இவன் பட, வைத்தாள் வத்தி,
பாலுவை பார்க்கில் பார்த்தேன்
தொங்கட்டான் போட்டிருக்கிறான்.
பத்திரம் மாமி !
மறு நாள் அதே பார்க்
அதே மாமி
பாலுவும் இருக்கிறான்
ஆனால் தொங்கட்டான் இல்லை
அம்மா கழற்றி விட்டாள் !

3 Comments on “கலாவதி பாஸ்கரன்/தொங்கட்டான்”

Comments are closed.