கலாவதி பாஸ்கரன்/காலை குறும் செய்தி

அதிகாலை ஐந்து மணிக்கு
பரபரப்பாக எழுந்து,
வாட்ஸ் அப், வளை தளம் துழாவி,
காலை வணக்க குறும் செய்தியை
வழக்கம் போல
அனைவருக்கும் அனுப்பி,
பின் காபி குடித்தார்அன்பர் !
அவர் அனுப்பிய
அரும் குறும் தகவல் கண்டு,
அவரை அழைத்து
மிக நன்றாக உள்ளது,
அதைப் பின்பற்ற ஆவல், என
என் எண்ணத்தை வெளிப்படுத்த,
“எந்த செய்தியை பற்றி
சொல்கிறாய்?
நிறைய தினம் அனுப்புகிறேன்.
என் நினைவில் இல்லை”
அன்பர் சொன்னது
அதிர்ச்சி அளித்தது.
அன்பர் அவர் அனுப்பும் செய்திகளை
கசடற கற்பதும் இல்லை!
அதற்குத் தக நிற்பதும் இல்லை!
வெற்று பொழுது போக்கு!