
சரியாகநூறாண்டுகளுக்கு முன்பே . லண்டன் நகரத்து தெருக்களைப் பற்றி யும் அங்கே சீரழிந்து கொண்டிருக்கும் மானிடக் கலாச்சாரத்தைப் பற்றியும் நோபல் பரிசு பெற்ற டி.எஸ். எலியட் என்னும் மகாகவிஞன் எழுதிய குறியீட்டுக் கவிதை இது. நானகு பாகங்களாக பிரித்து எழுதப்பட் முன்னுரை என்ற . இக்கவிதையின் முதல் பாகத்தை தற்போது மொழி பெயர்த்திருக்கிறேன்.
முன்னுரை ( முதல் பாகம் இரவு ஆரம்பம்)
நடைபாதையில் சமைக்கப்படும்
மாட்டிறைச்சியின் வாசம் பிடிக்க
வந்து கவிந்து விட்டது
இன்றைய மாலைப் பொழுது
மணி ஆறு
உறிஞ்சிப் போட்ட சிகரெட் துண்டுகளாக
அங்காங்கே சிதறிக் கிடக்கின்றன
முடிவுற்ற இன்றைய பொழுதுகள்
ஒரு தடித்த தூறல் வந்து
கால்களைச் சுற்றி
காய்ந்து கிடக்கும் சருகுகளையும்
வெற்றிட மெங்கும் சிதறிக் கிடக்கும்
செய்தி தாள்களையும்
ஒரு கரும் போர்வையென போர்த்திவிட்டது
வலுத்த மழைத்துளிகளோ வந்து
அழிவுறும்புகைக் கூண்டுகளையும்
உடைந்து போன கைப் பிடிச் சுவர்களையும்
காரணமற்றுச் சிதைத்து கொண்டிருகின்றன
தெருமுனையில்
வண்டியில் பூட்டப்பட்டிருக்கும்
துணையற்ற குதிரை ஒன்று
தனிமை பீடிக்க
கால்களை உதைத்துக் கொண்டே
கனைத்துக் கொண்டிருக்கிறது
