
புராதனத்தின் கனம்தூக்கி
கழுத்துச் சுளுக்கு
எனக்கு
விசையிழந்த இரும்பு இலைத்தகடு
முதுகெலும்பு
கண்சுழலும் வட்டத்தில்
கிழட்டுக் கரும்பாசி
கால்
புதையுண்டிருக்கிறது
பழம் சேற்றில்
வெளிவெளிச்சம் –
இளகிய தாரின்
கருத்த கம்பிகளாய்
கண்ணுக்கு வலைபின்னி
மறைத்துவிட்டது
புதுமைக் குரல்கள்
எரியும் மெழுகுவர்த்தியின்
திவலைகளாய்
ஒழுகி வழிந்து
காதில் குறும்பையாய்க் காய்ந்து
அடைத்துவிட்டது
மருத்துவரே !
என்னை மீட்பீரா ?
‘ ( 1972)
தி.சோ. வேணுகோபாலன்/மழை – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
