பிஸ்ரீ/தேசபக்த இரட்டையர்

முக்கியமாகச் சிதம்பரம் பிள்ளையும் அவர் தோழர் சுப்பிரமணியசிவமும் திருநெல்வேலியில் தோற்றுவித்த தேசிய உணர்ச்சி – வெள்ளத்தை இன்று நினைத்தும் பார்க்கும் போது, “அந்த இளமை எவ்வளவு ஆனந்தமா இருந்தது!” எனத் தோன்றுகிறது. அந்த இளமையனுபவம் என் தீண்ட வாழ்க்கையின் ஆழ்ந்தகன்ற அடிப்படையாக அமைந்து விட்டது. ஏன், தமிழகத்தின் உறுதியான தேசீய ந்திர அடிப்படையும் இந்தத் தேசபக்த வீர இரட்டையரின் திருப்பணிதானே?
திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகே தாமிரபருணி ஆற்றில் தண்ணீர் குறைந்து போயிற்று. அந்த நீரோட்டத் திக்கு அப்பாலும் இப்பாலும் பரந்து கிடக்கும் ஆற்று பரப்பை மாணாக்கராகிய நாங்கள், ”எங்கள் குளக்கரை, கடற்கரை” என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டோம். அந்தக் ‘கடற்கரை” மண்டபங்களில் ஒன்று தப்பூச மண்டபம். அதில் நின்று கொண்டு இருவர், நாற்புறமும் குழுமியிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி, மழை கொட்டுவது போல், தமிழ்ச்சொற்பொழிவுகள் செய்து கொண்டிருந்தனர். நானும் சில இளைஞர்களும் அந்த மழையைக் குற்றாலச் சாரல் மழைபோல் இன்பமாக அனுபவிக்கத் தொடங்கினோம்.
சுப்பிரமணியசிவமும் சிதம்பரனாரும் தங்கள் குருமூர்த்திகளான திலகர், பாலர் (விபின சந்திர பாலர்) முதலானவரின் தீவிரக் கொள்கைகளை அதிதீவிரமாக்கி திருநெல்வேலிக் காரசாரம் ஏற்றிப் பரிமாறிக் கொண்டிருந்தனர். என் உள்ளத்தில் சற்றுக் குழப்பம், ”அது விருந்தா, மழையா வெள்ளமா?” என்பதாக, இந்த நிலையில் நான் முழுக்கவன த்துடன் இச்சொற்பொழிவுகளைக் கேட்டேன் என்று சொல்லவும் முடியாது. சிறை புகுந்த விபினசந்திரபாலரின் விடுதலைத் திருநாள் வைபவக் கொண்டாட்டத்தை முன் னிட்டு நிகழ்ந்த சிறப்புச் சொற்பொழிவுகள் அவை.

சுப்பிரமணிய சிவம் அங்கு மொய்த்திருந்த மக்களை நோக்குவதற்காக நாலுதிசைகளிலும் திரும்பித் திரும்பி ஆடி அபிநயித்துப் பேசிக் கொண்டிருந்தார். இவரது சொற்பொழிவைக் கேட்க வேண்டும் என்றே தூரத்திலுள்ள நாட்டுப்புறங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். தன்னந்தனியே ஊரூராகச் சென்று ஏற்கெனவே தேசியப் பிரசாரம் செய்திருந்தவர். பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வேதாந்தத்தைத் மெருகு கொடுத்துப் புதிய தேசிய ஆவேசத்தை மூட்டி வந்தவர். சுமார் 23 அல்லது 24 வயதுள்ள இளைஞர்.
இவரது துறவிக்கோலமும் துடி துடிப்புப் பேச்சும், வேதாந்தத்தைத் தேசிய வீரக்கனலாக்கிய அதிசயத்திறனும் துணிவும், இவர் சொற்களை ஆவலாய் அமுதமாய்ப் பருகி வெறி கொள்ளுமாறு மக்களைப் பக்குவப்படுத்தியிருந்தன.
பிரசங்கமாகவா அன்று மக்கள் கேட்டார்கள்? கடுங்காற்றும் பெருமழையும் கலந்து கொண்டன. வானம் இருண் மின்னல் மின்னியது. இடிஇடித்தது! நான் பாதி நனவிலும் பாதி கனவிலுமாக ஊசலாடும் உள்ளத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஏதோ சில மழைத்துளிகளுடன் தொடங்கிய தூறல் ‘ஹோஹோ’ என்று இரைச்சலிட்ட காற்றுக்கிடையே பேய் மழையாகி விட்டது. ”நாம் எல்லோரும் சேர்ந்து மூச்சு விட்டால் போதுமே; அந்தக் காற்றில் பறந்து போகாதா பகையரசு? ஆனால் அப்படிச் சேர்ந்து மூச்சுவிடத் தெரியுமா உங்களுக்கு?” என்பது போன்ற வாக்கியங்கள் தமிழ்த் தென்றலாகவா வீசின?
புயல்காற்றும் மழையும் செய்த பூசலுக்கிடையே, ஆற்று வெள்ளம் சீறிப் பொங்கி வருகிறதோ!” என்றுகூடப் பிரமித்துப் போனேன். சுப்பிரமணிய சிவத்தின் குரலையும் பேச்சையும் கேட்டதும் அந்த வெள்ளம் தைப்பூச மண்ட பத்தைத் தொட்டுப் போயிற்று; முட்டிச் சுற்றிப் பெருகியது. சுப்பலோட்டிய தமிழரின் அந்தக் கப்பலிலேயே வெள்ளையர் மூட்டை முடிச்சுகளுடன் விடைகொண்டு ஏறிப் போவதாகவும் தோன்றியது ஒரு கணம். சிவமோ, ‘போடு மூட்டை களை; போட்டு விட்டுப் போ!” என்று கண்டிப்பாகக்கட்டளை மிட்டதாய்த் தோன்றியது மறுகணம்.
வெள்ளம் தைப்பூச மண்டபத்தை மூழ்கடித்துத் தலைக்கு மேலே போய் விட்டது. நான் அஞ்சி விழித்துக் கொண் டேன்.எனினும், “இந்தப் புதுவெள்ளம் காண எத்தவம் செய்தோமோ!” என்று அந்த நாளில் என் இதயத்தில் ஏற்பட்ட பரபரப்பென்ன, துடிதுடிப்பென்ன? இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும் ஓர் அற்புதத் திருப்பத்தை, இதயப் புரட்சியை, விளைவித்துவிட்ட து. சிவமும் சிதம்பரனாரும் சிறைப்பட்டனர். ஆனால் நாடு விடுதலை பெறுவதற்குஇன்றி யமையாத தேசீய இயக்கம்’உரம்பெற்று நிலைபெறலாயிற்று.
‘தென்னகத்தின் பாரிஸால் ஆக்குவோம் இந்த தூத்துக்குடி நகரை!” என்று சிவம் கூறியதைக் கேட்டிருக்கிறேன். பாரிஸால் நகரம் அந்த நாளில் அசுவினிகுமார் என்பவரின் தலைமையில் வங்க நாட்டிலே தேசீய ஊற்றுக் கண்ணாக இருந்தது. அங்கே அன்னிய நாட்டுத் துணி கிடைப்பதற்கு அசுவினி குமாரின் தயவு தேவைப்பட்டது. அந்த அளவிற்குச் சுதேசி விரதத்தையும் அன்னிய விலக்கு விரதத்தையும் தூத்துக்குடித் துறைமுகப்பட்டினமும் மேற்கொள்ள வேண்டும். என்று உழைத்து வந்தனர் சுப்பிரமணிய சிவமும் சிதம்பரனாரும்.
நம்மவருள் தேசிய விரோதிகளையும் அன்னியராகமதித்து விலக்கி ஒதுக்கி வைக்கவும் துணிந்தனர் பொது மக்களும் தொழிலாளர்களும், தூத்துக்குடி வக்கீல் ஒருவர் ‘சவரம் செய்து கொண்டிருந்தார். அத்தொழிலாளி அவரை நோக்கி “சாமி! நீங்கள் சுதேசி விரதத்திற்கு ஆதரவு காட்டவில்லை என்று ஊரில் ஒரே பேச்சாக இருக்கிறதே” என்றான். அந்த விரதத்தை இகழ்ந்து பேசினார் வழக்குரைஞர். அவன்உடனே கத்தியை மடக்கிப் பையில் வைத்துக்கொண்டான்; அவரை அரைகுறைச் சவரத்தில் அலங்கோலமாக விட்டுவிட்டான். அவர் அன்று இரவே போலீஸ் காவலுடன் ரயிலேறித் திருநெல்வேலிக்கோ, மதுரைக்கோ போய்த்தான் தம் சிகை அலங்காரத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியதாயிற்று!
இத்தகைய அன்னிய விலக்கையும் சுதேசி விரதத்தின் இன்றியமையாத பகுதியாக்கிக் கொண்டனர் சிவமும் சிதம்பரனாரும். இப்படித் தேசியத்தை ஒரு புரட்சி இயக்கமாய் வளர்த்து வந்தவர்களை அன்னிய அரசு மிகவும் கொடுமை யாகத் தண்டித்ததுகூட ஆச்சரியமில்லை. அநாகரிகக்கொடுந் தண்டனைகளால் பிரிட்டிஷ் மகாராஜ்யத்தின் அஸ்திவாரம் உறுதிப்படும். இந்தியரின் ராஜபக்தி நிலைபெறும் என்று அன்றைய வெள்ளை அதிகாரிகள் நம்பியதுதான் ஆச்சரியத்திற்கும் மேலான ஆச்சரியம்!

தமிழ்ப் பணி

சுப்பிரகணிய சிவத்துடன் நான் நெருங்கிப் பழகியதில்லை. சிறைவாசத்திற்குப்பின் சிதம்பரம் பிள்ளை ஜஸ்டிஸ் கட்சியை அபிமானித்து மறுபடியும் வழக்குரைஞராகிக் கோயில்பட்டியில் இருந்தபோது, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறைக் கோட்டத்திலும் இயன்றவரை தமிழ்த்தொண்டு ஆற்றிவந்தார். உலகப் பொது மறையான திருக்குறளின் ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட் டார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு உரையாசிரிய ர் இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் ஒரு பகுதியையும் வெளியிட்டிருக்கிறார். வேறு தமிழ்ப் பணிகளில் கவனம் செலுத்தியதையும் நான் அறிந்திருக்கிறேன். தேசிய வர லாற்றில் ஒரு பெரும் பெயராக இருப்பதுடன், இவர் பெயர் தமிழிலக்கிய வரலாற்றிலும் இடம் பெறும், இடம் பெற வேண்டும்.
சுப்பிரமணிய சிவத்தின் தமிழ்ப்பணி பெரும்பாலும் வேதாந்தத்துடனும் சமய நூல்களுடனும் நின்றுவிட்டது என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை இவர் எழுதிய ஸ்ரீ ராமாநுஜர் வரலாறு அன்றைய தமிழுக்கு அணியாக இயற்றப்பட்டிருக்கிறது;பேச்சுத்தமிழை
ஒட்டிய நல்ல நடையில் எழுதப்பெற்றிருக்கிறது. தமிழ் தெரிந்தவர்களெல்லாம் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற பெருநோக்குடன் ஆசிரியரின் தேசிய உள்ளம் இந்நூலை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தின் விடுதலைக்கு மட்டுமா? பண்டிதர் பிடிப்பிலிருந்து தமிழின் விடுதலைக்காகவும் இத்தேச பக்த இரட்டையர் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். இருவரும் தூய தமிழர்கள். கலப்பில்லாத தனித்தமிழில் எழுதவில்லை . பிறமொழிக்
; ஆனால் தமிழர்களின் நெஞ்சிலும் நாவிலும் பழகி வளரும் அழகுத் தமிழை, ஆண்மைத் தமிழை இரு வரும் பயன்படுத்திக் கொண்டார். வழிவழி வந்த தமிழ்ப் பண்பாட்டில் ஊன்றிக் கனிந்த, கள்ளங் கவடற்ற, இவர்கள் உள்ளத்தைத் தூயதமிழ் உள்ளம் என்றே சொல்லத் தோன்றுகிறது.