
தேசத்தின் விடுதலைக்குப்பின்
தொழில்மயம் உன்னால் உன்னதமானது.
அறத்திற்கும் …தரத்திற்கும்
உன்மேல் நம்பிக்கையிருந்தது.
உனக்குப்பின்னால் வந்தவர்கள்…
பணத்தால் உன்னை முந்தியிருக்கலாம்
பண்பில் நீ தான் முதலென்று
பாரதம் அறியும்.
தொட்டதுறையில் எல்லாம்…
கொடிகட்டிப்பறந்தாய் உந்தன்
தொழில் நேர்மையால்.
ஆடம்பரத்தில்
உன்னை அறிந்தவர்கள் இல்லை…
நீ கொடுத்த அறம் உன்னை முன்
நிறுத்தி நிற்கிறது.
போய்வா தொழில் இமயமே!
இமயம் நிலைப்பதுபோல் உன்
பெயரும் நிலைக்கும் இப்புவியில்.
இரத்தன் டாடாவே! பாரதத்தாயின்
மணிமகுடத்தில் இரத்தினமாய்
என்றும் ஔிவீசிக்கொண்டிருப்பாய்.
♦
