ஷண்முக சுப்பையா/வாழ்க்கை

பந்தல் கட்டி
படரவிட்டேன்
கொடியொன்றை நான்.
அது
படர்ந்து பந்தளித்து
காயொன்றை ஈன்றிட
ஆனந்தம் மேலிட்டு
வளையவளைய வந்தேன்
அதைச் சுற்றி.
வந்ததுதான்
மிச்சம் எனும்படி
பந்தலதுவும்
படுத்ததொருநாள்.
அதை
எப்பாடு பட்டேனும்
எடுத்து நிறுத்திடலாம்
என்றாலோ
எல்லாம் ஒரே சிக்கல்
அதனால்
எப்படியோ போகட்டும்
என்றிப் பொழுது
என்பாட்டிற்கு
அதன் மூட்டில்
என்னால் முடிந்தமட்டும்
நீரை மட்டும்
கொட்டுகின்றேன்.

One Comment on “ஷண்முக சுப்பையா/வாழ்க்கை”

Comments are closed.