தொகுப்பு ஸ்ரீதர் சாமா /பகவத் தியானம்

நீதிபதி கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார் சுவாமி ஞானானந்தரை ஒருமுறை பார்த்த போது கேட்டார்: “சுவாமி, இந்த ஜென்மாவிலே நாம அனுபவிக்கிற புண்ய பாவம் பூர்வத்தில் நாம செஞ்ச எந்த புண்ய பாவத்தால கிடைக்கிறதுன்னு ஏதாவது கணக்கு இருக்கா?”
சுவாமி ஞானானந்தா: “அதை விடுங்க குப்பை. இன்னைக்கு காலைல நாலரை மணிக்கு எழுந்தோமா?”
“ஆமா”
“தபோவன பிராகார வலம் வந்தோமா?”
“வாஸ்தவம்”
“அப்ப சமையல் அறையிலிருந்து சூடா ஒரு கப் காபி கிடைச்சுதா?”
“உண்மை”
“சரியா அஞ்சரை மணிக்கு பரிசாரகர் இன்னொரு ஜக்குல காபி கொண்டு வந்தாரா?”
“ஆமா”
“அப்பறம் பாராயணம். அப்பறம் மறுபடி காப்பியா?”
“ஆமா”
“அப்பத்தான் கவனிச்சோம். மேல வெள்ளை அங்கவஸ்திரத்துல காப்பி கறை. எந்த காப்பி கறைன்னு யோசனை. கூட இருந்த நண்பர் சொல்லறார். “என்னய்யா பெரிய யோசனை? எந்த காப்பியா இருந்தா என்ன? கறை போகணும். அதுதானே முக்கியம்? தண்ணி விட்டு சோப்பு போட்டு கசக்கி பிழிஞ்சு உலர்த்தினால் போதாதா?”
“புரியுது சுவாமி.”
“ஆமா. 84 லட்சம் யோனிகள். எந்த யோனியில் எந்த பாபமோ புண்ணியமோ …பகவத் த்யான சோப்பு போட்டு கறையைக் கரைச்சுட்டு போயிட்டே இருக்கணுமா, இதெல்லாம் யோசிக்கணுமா?”

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருட்கடல் பகவான் – விருட்சம் நாளிதழ்

One Comment on “தொகுப்பு ஸ்ரீதர் சாமா /பகவத் தியானம்”

Comments are closed.