
1993 ம் ஆண்டில் தெற்கு சூடானில் கடும் பஞ்சம். நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஒருவர் அது பற்றிய செய்தி திரட்ட சூடான் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பசியால் வாடிய, மெலிந்த தோற்றம் கொண்ட ஒரு குழந்தையை புகைப்படம் எடுத்தார். அது எப்போது சாகும், அதை உண்ணலாம் என்று காத்திருக்கும் கழுகு ஒன்றும் அந்தக் குழந்தையின் அருகில். படம் பத்திரிகையில் வெளியானது. படத்தின் தலைப்பு `கழுகும் சிறு பெண்ணும்’ (அது ஆண் குழந்தை என்று பின்னர் சொன்னார்கள்). அவன் உடம்பில் சக்தி இல்லாததால் இலவச உணவு தரும் அருகாமை இடம் கூட போக முடியவில்லை என்றும் செய்தியில் சொன்னார். அந்தப் படம் பிரபலம் ஆகி நிருபருக்கு 1994 இன் புலிட்சர் விருது பெற்றுத் தந்தது. அது சம்பந்தமான ஒரு கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.”அந்தக் குழந்தை பின்னர் என்ன ஆயிற்று?”
புகைப்பட நிருபர் உண்மையைச் சொன்னார். “தெரியலை. நான் வேற வேலை இருந்ததால் விமானம் பிடிக்கற அவசரத்தில் வந்துட்டேன்.” கேள்வி கேட்டவர் ஏமாற்றத்துடன் சொன்னார். “சரிதான். அப்ப அங்க இருந்தது ஒன்று அல்ல, இரண்டு கழுகுகள். “
இந்த விமர்சனமும் தொடர்ந்த வாதங்களும் அவரை வெகுவாகப் பாதித்தன. பரிசு வாங்கிய நான்காம் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பெற வேண்டிய புகழ் அவர் கண்ணை மறைத்தது. மனிதாபிமானம், பொறுப்பு மறைந்தது. ஆகவே இன்ஸ்டாகிராம், facebook likes க்காக சதா ஏங்கும் மனிதர்களே, உங்கள் ஒவ்வொரு பதிவின் போதும் இந்த தற்கொலையை நினைவு கூறுங்கள்.

One Comment on “தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கழுகாக அல்ல, மனிதனாக இருங்கள்”
Comments are closed.