தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கவலை வேண்டாம் . கலை வேண்டும்.

காஞ்சிபுரத்தில் ஒரு முறை ஆகம சில்ப சதஸ் நடந்தது. நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கலந்துகொண்டார். முன்னிலை காஞ்சி மஹான். ஆறுமுகம் பாடுகையில் ஒரு பக்கம் காஞ்சி காமாட்சியும் மறுபுறம் மகானும் அமர்ந்து அவர் பாட்டை கூர்ந்து கவனிப்பதாக நினைத்தே பாடினார் . “காமாக்ஷி தாயே. எல்லோரும் உனக்கு என்னென்னவோ சமர்ப்பணம் செய்கிறார்கள். நானோ பேச்சின்றி உன் இடது கால் பாத அழகில் தான் மயங்கிக் கிடக்கிறேன். அதற்குத் தான் அபார சக்தி உண்டாயிற்றே. அதைக் கொண்டு உன் இடது கால் பெரு விரலுக்குக் கீழே விழுந்து கிடக்கும் இந்த அடிமையின் கவலை' யின் நடு எழுத்தை அழித்து எனக்குக்கலை’ யை மட்டும் கொடு” என்று சுப்பு ஆறுமுகம் வேண்டினார். மறுநாள் மஹானைப் பார்க்க மடம் வந்தால் பெரியவா உற்சாகமாக “சுப்பு .. உன் வேண்டுகோளை அம்பாள் கேட்டுட்டாடா. நடு எழுத்தை அவ அழிச்சுட்டா.
உனக்கு இனி கவலை கிடையாது. கலை மட்டும் உன் மூச்சாக இருக்கும்.” என்றார்.

சுப்பு ஆறுமுகம் பூரித்துப் போனார். “போ. கோவில் இருக்கிற இடம், இல்லாத இடம், எல்லா இடத்திலேயும் பாடு. கோவில் இல்லாத ஊரில் நீ பாடினால் கோவில் வந்துடும்.” என்று பெரியவர் ஆசி வழங்கினார் .

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கழுகாக அல்ல, மனிதனாக இருங்கள் – விருட்சம் நாளிதழ்