
“செல்லம்மா! நான் சித்த கோயில் வரை போயிட்டு வரேன் மனசே சரியில்லை. நீ எதை
பற்றியும் யோசிக்காதே .நான் சீக்கிரம் வந்துட்டேறேன்..” என்று மேஜர்
சுந்தர்ராஜன் போல் தோற்றம் கொண்ட பஞ்சாபகேசன் துண்டை தோளில்
போட்டு கொண்டு வீட்டை விட்டு போனார்.
“இப்படி சொல்லிட்டு போய் வருஷம் பத்து ஆச்சு. அவரை இன்னும்
காணோமே? வந்து விடுவேன்னு தானே சொன்னார்”! என்று
பெருமூச்சுடன் நினைத்தாள் செல்லம்மா. ..
சங்கரி மட்டும் அன்றைக்கு அதை பண்ணாமல் இருந்து இருந்தா
இவர் மனசு ஒடைந்து போயி இருக்க மாட்டார் ..செல்லம்மா மனசில்
சொல்லி கொண்டே …கரண்டியை கையில் வைத்து கொண்டு நிற்க..
“சீக்கிரமே, ஆகட்டும் செல்லம்மா , அங்கே முகூர்த்தம் முடியும் முன்
சமையலை முடி. .அடுத்தது பந்தி பரிமாறுவது தான்” என்றாள் கோதை ..
மண்டபத்தில் பொண்ணாத்துகாராளுக்கு பொறுப்பு எடுத்தவர் கிட்ட
ஏதோ கேட்க வந்த கோதை அங்கு கல்யாண மேடையில் மேஜர்
சுந்தர்ராஜன் தோற்றத்தில் ஒரு வயதானவர், ஜரிகை வேஷ்டியும் தங்க
ஃப்ரேம் கண்ணாடியுமாக கல்யாண பெண்ணை தனது மடியில் உக்காத்தி
கன்னிகாதானம் செய்ய போற காட்சியை பார்த்தாள் …
தன் கண்ணயே நம்ப முடியாமல் உடனே சமையல்கட்டுக்கு போய் “டீ
செல்லம்மா! இங்கே சித்த வாயேன்” என்று கத்தினாள். செல்லம்மா &qதோ
வந்துடேன்க்கா! என்னாச்சு ரொம்ப பதட்டமா இருக்கேள்” என்ற கேக்க,
கோதை மண்டபத்தை பார்க்கும்படி கையை காட்டினாள். அந்த காட்சியை
பார்த்து விட்டு செல்லம்மாளுக்கு ஒரே அதிர்ச்சி. “இவர்ர்ர்!!!
நம்மாத்துகாரர் பஞசாபகேசன் னா! இங்கே என்ன பண்றார்? கல்யாண
2
பொண்ணுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்? நம்மளை ஏமாத்திடாரா!”
என்றெல்லாம் யோசித்து முகூர்த்த மேடை அருகில் ஓடினாள்.
அந்த மேஜர் சுந்தரராஜன் வடிவத்தில் இருந்த ஆளிடம் “ஏன்னா என்ன
பண்ணறேள் இங்க? எங்க போயிருந்தேள் இத்தன வருஷமா?
கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போனேள். எப்படின்னா இப்படி
பண்ண உங்களுக்கு மனசு வந்தது? சங்கரி நம்ம பொண்ணு தானே. அவ
ஏதோ தெரியாம உங்களை அவமரியாதை பண்ணி பேசிட்டாளேன்னு
நீங்களும் அதே மாதிரி பண்ணிருக்கேளே! துரோகம் பண்ணிடேளே
நேக்கு”! என்றெல்லாம் புலம்பினாள்.
மண்டபத்தில் ஒரே அமைதி. கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருத்தராக கிசு கிசு
என்று பேச ஆரம்பித்தார்கள். அந்த கல்யாண பொண்ணை
கன்னிகாதானம் பண்ணற ஆள் ஒரு சலனமும் இல்லாமல் உட்கார்ந்து
இருந்தார். அதற்குள் அங்கு பொண்ணோட அப்பா ஒருத்தரை கூட்டி
வந்தார். அந்த ஆள் செல்லம்மாளை சமாதான படுத்தி கேட்டார். “இவரை
உங்களுக்கு தெரியுமா”?
“இவர் தான் என் கணவர் பஞ்சாபகேசன்”! பத்து வருஷம் முன்னாடி நடந்த
மனஸ்தாபத்தினால் வீட்டை விட்டு போனவரை இன்று தான் மறுபடியும்
பார்க்கிறேன்.”
இதையெல்லாம் கேட்டு விட்டு அந்த மனிதர் பேச ஆரம்பித்தார். “இதோ
பாரும்மா! நான் ஒரு மனநல மருத்துவர். என் பெயர் டாக்டர்
கார்த்திகேயன். பொண்ணோட அம்மாவுக்கு சொந்தம். இவரை, அதாவது
உங்க கணவரை கல்யாண பொண்ணோட அப்பா, தினகரன், கோவிலில்
பார்த்தாராம். இவர் ஏதேதோ புலம்புவதை பார்த்து இவரிடம் பேச
முயன்றார். அதற்கு உங்க பொண்ணு சங்கரியின் பேரை அடிக்கடி
சொல்லி அழ ஆரம்பித்தாராம்.
“இரண்டு மூணு முறை கேட்டும் அதேமாதிரி இருக்க உடனே யார் என்ன
என்று அறிய முயற்சி செய்தார். அவரால் ஒண்ணும் பேச முடியலை.
பாவமாக தோன்றி உங்க கணவரை தன் வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறார்.
உடனே என்னை தொடர்பு கொண்டு இவரை பற்றி சொன்னார். நான்
3
அவரை பரிசோதித்து பார்த்ததில் இவருக்கு டெமன்ஷியா, அதாவது
ஞாபகமறதி வியாதி வந்திருக்கு என்று புரிந்து கொண்டேன். இது சில
பேருக்கு முதுமையில் வரும். அதிக அதிர்ச்சி அல்லது மனஅழுத்தம்
காரணமாக கூட வரும். அவருக்கு தான் யார், எங்கு இருக்கிறார்
என்றெல்லாம் தெரியவில்லை.
“அப்படியே விட்டால் என்ன வேணா விபரீதம் நடக்கலாம். அவருக்கு
திடீரென பழசெல்லாம் ஞாபகம் வரலாம், வராமலும் போகலாம். இந்த
நிலையில் அவரை தனியாக விட முடியாதென்று பொண்ணோட அப்பா,
அதாவது தினகரன் தன் வீட்டிலேயே தங்க வைத்தார். அவரை அவர்
போக்கிலயே விட்டோம். நானும் அவருக்கு மருத்துவ உதவி செய்து
கொண்டிருந்தேன்.
அவர் பேச்சிலேந்து உங்க பொண்ணு கல்யாண விஷயமாக தான் ஏதோ
வாக்குவாதம் நடந்திருக்கிறது என்று தெரிந்தது”. உடனே செல்லமா “
ஆமாம்! எங்க பொண்ணு சங்கரிக்கு தகுதிக்கு மீறிய வரன் பார்த்தார்
இவர். ஆனால் சங்கரி ஏற்கனவே ஏதோ ஒரு பையனை காதலிப்பதாக
சொல்லவும் இவர் எல்லா அப்பாகளை மாதிரி கோபம் வந்து அவளை
நன்றாக திட்டினார். அவளும் சும்மா இருக்காமல் அவ அப்பாவை
எதிர்த்து பேசினாள்.
அது இவரை மிகவும் பாதித்தது. மேலும் நாங்க சம்மதிக்கவில்லை
என்றால் வீட்டை விட்டு போய் தான் காதலிக்கும் பையனை மணப்பேன்
என்று சொல்லவே. அன்று அவளோடு அந்த செய்கையால் மிகவும் மனம்
வருந்தி கோவிலுக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போனவரை
இன்னிக்கி தான் பாக்கறேன்”. என்று கூறி முடித்தாள்.
“ நீங்க சொல்வதெல்லாம் சரி. இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க.
முகூர்த்தம் முடியட்டும். நாம் உக்காந்து பேசலாம்” என்று டாக்டர்
சொல்லவே. “ ஆனால் தம்பதி சகிதமாக தானே கன்னிகாதானம்
பண்ணனும் டாக்டர் சார்? இவர் எப்படி தனியாக ? என்று கேட்ட
செல்லம்மாவிடம் டாக்டர் சொன்னார்.” “பஞ்சாபகேசனுக்கு ஒன்றுமே
ஞாபகம் இல்லாததால் அவர் உடல் நிலை கருதி அவரை மண மேடையில்
4
உக்கார வைத்தோம். மற்றபடி பொண்ணின் நிஜ அம்மா அப்பா தான்
கன்னிகாதானம் பண்ணுவா.”
முகூர்த்தம் நல்லபடியாக நடந்தது. மற்ற சடங்கெல்லாம் நடக்க
ஆரம்பித்தவுடன் மஞ்சாபகேசனை கல்யாண பெண்ணின் அப்பா
கைபிடித்து கூட்டி போய் ஒரு ரூமில் விட்டு வந்தார். பஞ்சாபகேசன்
“சங்கரி! இப்ப உனக்கு சந்தோஷம் தானே மா? நீ ஆசைப்பட்டவனுக்கே
உன்னை கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன். என்னை மன்னிச்சுடு”!
என்று புலம்பி கொண்டே போனார். இதையெல்லாம் பார்த்து
செல்லம்மாளால் அழுகையை அடக்க முடியவில்லை.
டாக்டர் கார்த்திகேயன் செல்லம்மாவை கூட்டிட்டு பக்கத்திலிருந்த
அறைக்கு சென்றார். கூடவே கல்யாண பெண்ணின் அப்பா தினகரனும்
வந்தார். “ தோ பாருங்க செல்லம்மா! உங்க கணவர் பஞ்சாபகேசனின்
உடல்நிலை பற்றி விவரமாக சொல்லி விட்டேன். இனி உங்கள் முடிவு.
அவரை உங்க வீட்டுக்கு திருப்பி கூட்டிட்டு போகணுமா இல்லை
இங்கயே இருக்கடுமா என்று. இப்ப உங்க பொண்ணு சங்கரி எங்க
இருக்கா! என்ன பண்றா?”
“அவ கடைசியில் கல்யாணமே பண்ணிக்கலை! அந்த பையன்
தப்பானவன் என்று தெரிந்தது. உடனே அவனின் சகவாசத்தையெல்லாம்
விட்டு இப்ப ஒரு ஸ்கூலில் டீச்சர் வேலை பாக்கிறா. இவர் வீட்டை வீட்டு
போய் திரும்பவில்லை எங்கே தேடியும் கிடைக்கவில்லை, அதுவும்
அவளால தான் இது நடந்தது என்று தெரிந்தது சங்கரி வருத்தப்படாத
நாளே இல்லை. இன்னும் அந்த குற்றணர்வுலியே இருக்கா.
“அவள் வருமானம் மட்டும் போதாதே என்று நினைத்து நானும் எனக்கு
தெரிந்த இந்த சமையல் வேலைக்கு போறேன். கோதை அக்கா என்
சொந்த அக்காவுக்கும் மேல. அவங்களால தான் சமையல் வேலை
கிடைத்தது. ஏதோ காலத்தை ஓட்டிண்டு இருந்தோம் . இவ்ளோ வருஷம்
கழிச்சு என் ஆத்துக்காரரை இங்க சந்திப்பேன் ன்னு கனவில் கூட
நினைக்கவில்லை. அம்பாள் கண்ணை தொறந்துட்டா! எங்களுக்கு இவர்
5
திருப்பி கிடைச்சுட்டார். உங்களுக்கும் தினகரன் சாருக்கும் நான்
என்றென்றும் கடமைபற்றிருக்கேன். சங்கரிக்கு தெரிஞ்சா ரொம்ப
சந்தோஷப் படுவா.
“ சரி! நீங்க உங்க வீட்டுக்கு அவரை கூட்டிட்டு போங்க. ஆனால் நான்
இந்த மாதிரி பேஷண்ட்கள் எப்படிலாம் பிஹேவ் பண்ணுவாங்கரதை
விவரமாக சொல்லிவிடுகிறேன். உங்க பொண்ணு சங்கரிய கூடிய சீக்கிரம்
இங்க வர சொல்லுங்க”.என்றதும். செல்லம்மா உடனடியாக சங்கரியை
தான் வேலை செய்யும் வீட்டுக்கு வர சொல்லி, பந்தி வேலையை பார்க்க
ஆரம்பித்தாள். சாப்பாடு எல்லாம் முடிந்தது. அதற்குள் சங்கரியும் அங்கு
வந்து விட்டாள்.
செல்லம்மா சங்கரியிடம் விவரங்களை சொல்லவும் அவள் ஓ என்று
அழுதாள். “ அப்பா எங்க மா? இப்பவே அவரை பார்த்து காலில் விழுந்து
மன்னிப்பு கேக்கணும். நான் ஒரு பாவி! அவரோட இந்த நிலைமைக்கு
நான் தான் காரணம்” என்று புலம்பினாள் . டாக்டர் கார்த்திகேயன் அங்கு
வந்து சங்கரியிடம் “தோ பாரும்மா! நடந்தது நடந்தாச்சு. இனிமே நீ
உங்கப்பா கிட்ட போய் பழசெல்லாம் சொன்னா அவர் புரிஞ்சிக்கற
நிலமையில் இல்லை. உன்ன மாதிரி அவரும் உன் விருப்பத்திற்கு
ஒத்துகலை என்ற குற்ற உணர்வோடு இருக்கார்.
இப்ப நீ தான் அவருடைய செல்ல பொண்ணு சங்கரின்னு கூட ஞாபகம்
இருக்கா இல்லையான்னு தெரியாது. மேலும் அவருக்கு ஞாபகபடுத்த
முயற்சி பண்ணினா என்னவேணா விபரீதம் ஆகலாம். அவர் தன்னையே
அடிச்சுக்கலாம்.. அதுனால அவர் போக்கிலேயே விடுங்க . இப்ப
அவருக்கு 24 மணிநேரம் கவனிக்க துணை வேணும். டயத்துக்கு
மருந்தெல்லாம் குடுக்கணும். நீயும் அம்மாவும் வேலைக்கு போனா அவரை
யார் பாத்துப்பா? வேலைக்கு போகாம இருக்க முடியாது. அவர் இங்கயே
இருப்பது நல்லதுன்னு தோணுது எனக்கு. நீங்களும் தினகரன் பெர்மிஷன்
குடுத்தா இங்கயே இருந்திடுங்க”.
6
தினகரன் உடனே “என்னண்ணா! இப்படி பெர்மிஷன் அது இதுன்னு?
எனக்கு நீங்க எப்படியோ அதே மாதிரி தான் இந்த பஞ்சாபகேசனும்.
இவ்ளோ நாள் இங்க இருந்து எங்காத்து மனுஷா மாதிரி ஆயிட்டார். இப்ப
செல்லம்மா மூலமாக அவருக்கு ஒரு குடும்பம் இருக்குன்னு தெரிஞ்சுது.
இவாளும் இங்கயே எங்க கூட இருக்கலாம். என் பொண்ணு கல்யாணம்
பண்ணி போறாளே ன்னு நினைச்சேன். கடவுளா பார்த்து எனக்கு
இன்னொரு பொண்ண அனுப்பிடார். இனிமே இவா என் பேமிலி”.
படீரென செல்லம்மாவும் சங்கரியும் தினகரன் காலில் விழுந்தார்கள் அவர்
பேசரதை கேட்டு.
டாக்டர் கார்த்திக்கேயன் எல்லாரிடமும் மறுபடியும் பஞ்சாபகேசனின்
நிலமை குறித்து கவனமாக இருக்க அறிவுரை எல்லாம் சொல்லி விட்டு
கிளம்பினார்.
ஆசிரியர் குறிப்பு
வயது 61.
திருமதி சந்தியா ஷங்கர் சென்னை வாழும் ஒரு இல்லத்தரசி. பிறந்தது வளர்ந்தது எல்லாம் டில்லியில். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே கவிதை கட்டுரை மற்றும் கதைகள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுதும் ஆர்வம் உண்டு. எழுதி பரிசுகளும் வாங்கியுள்ளார்.
தற்போது எழுத்தின் மீது அதீத ஆர்வத்தினால் முகநுலில் சில குழுமங்களில் போட்டிக்கான கதைகளையும் கவிதைகளையும் எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
கல்கி ஆன்லைன் நடத்திய 55 வார்த்தைகளில் மினி கதை எழுதும் போட்டியில் இவரின் ‘தாயன்பு’ என்ற கதை வெற்றி பெற்றிருக்கிறது.
இவர் எழுதிய நிறைய தமிழ் மற்றும் ஹிந்தி கவிதைகள் பரிசு பெற்றிருக்கிறது.
இவர் ஒரு ஆன்மீக வாதியும் கூட.
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்/இப்படியும் சிலர் இருக்கிறார்கள்! – விருட்சம் நாளிதழ்

நல்ல கதை
அருமையான கதை. அருமையான நடை.