ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும்

ப்ளாட்பாரத்தில் பூட்ஸ் சத்தம் கேட்கிறது. கிழவன் ரயில் ஜன்னலோடு ஒண்டிக் கொள்கிறான். மேற்கே நகரும் சூரியன் ஒளி அவன் முகத்தின் துயரத்தை போட்டோ பிடிக்கிறது. üüஅப்பனே” என்று அவன் முனகுகையில் குரல் ஒடுங்குகிறது. கால் கம்பார்ட்மென்ட் தரையில் வெற்றுக் கோலம் போடுகிறது.
பூட்ஸ் சத்தம் தேய்கிறது. சன்னமான பார்வையை இடுக்கிய கண்களுடன் ப்ளாட்பாரம் பக்கம் திருப்பி üüஅப்பாடா” என்று பெருமூச்செறிகிறான். அந்த üüஅப்பனே”யில் கனத்த சோகம் இதில் வெளிக் கிறம்புகிறது. üüபிகில் அடிக்க மாட்டேங்கறங்களே பாவிக” என்று சபிக்கிறான். இத்துடன் இது பத்தாவது தடவை.
முண்டாசை உதறுகிறான். அவனுடைய நீண்ட கால் நடைப் பயணத்தில் சேர்ந்த ஒரு குப்பைமேடு அந்தக் கம்பார்ட்மென்ட்டில் சிதறுகிறது. மற்றொரு முறை புகையிலை ஒடித்து ஒரு துண்டம் போட்டுக் கொள்கிறான். தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அந்த நிமிடம் வரை முளைத்துச் செழித்த வறண்ட பயமும் மன அரிப்பும் காய்ந்த தொண்டைக்கு சமாதானம் சொல்ல, ஏதோ நினைத்து புரையேறி üதூýவென புகையிலைச் சக்கையைத் துப்புகிறான். காரம் உள்ளிறங்குகிறது. காரத்திற்கு மட்டுமே அவனிடம் இடம் உண்டு.
மறுபடியும் பூட்ஸ் சத்தம்போல் ஏதோ கேட்கிறது. இறங்கிய காரணம் அடிவயிறெங்கும் கரைகிறது. அவன் எதையும் செய்ய எத்தனிக்குமுன் நால்வர் üதிபுதிபுý வென்று கம்பார்ட்மென்டில் ஏறிவிடுகிறார்கள்.
üüயோவ் கிளவா, எத்தினி நாள் இந்த வேலை?” ஒருவன் தடியால் மர இருக்கையில் அடிக்கிறான். அது அவன் நெஞ்சில் அதிர்ந்து அடங்குகிறது.
üüபுழுங்கல்போல…” மற்றொருவன் üபரபரýவென்று மூட்டையை சீட்டுக்கு வெளியே இழுத்துச் செல்கிறான்.
கிழவன் கண்களில் சிவப்பு பாய்கிறது. üüவேலை செஞ்ச வூட்டிலேதாங்க கொடுத்தாங்க” என்கிறான் மெதுவாக.
üüஇந்த உடம்பை வச்சுக்கிட்டு அரை மூட்டை அரிசி சம்பாரிக்கும்படி என்னய்யா வேலை செஞ்சே?”
üüஅய்யா… என் உளைப்பை பரியாசம் பண்ணாதீக.”
üüதா… என்னய்யா பேசிக்கிட்டே போறே? நடய்யா டேஷனுக்கு”
இருவர் மூட்டையை இறக்க முயற்சி செய்ய கிழவன் அவர்கள் காலைப் பிடிக்கிறான். கைச்சதை பிடிப்பில்லாமல் தொளதொளவென்று ஆடுகிறது. üüஅய்யா…தப்புதான்யா… இனிவரமாட்டேன். மூட்டையைக் கொடுத்திருங்கய்யா.”
மூன்றாமவன் சகாக்களைக் கண்டிக்கிறான். üüஎன்னய்யா நீ யொருத்தன்… அவன் பேசறதை கேட்டுக்கிட்டு… காரியத்தைப் பாப்பியா?”
üüஅய்யா… ராவு பகலா முதுகு ஒடிச்சு உளைச்சேன்… திருட்டு சொத்துல்லயா.”
üüம்… ஆவட்டும்… சீக்கிரம் üபுக்ý பண்ணு”
நான்காமவன் இப்பொழுது கிழவனைத் தனியாகக் கூப்பிடுகிறான்… üüயோவ்… உன்னைப் பாத்தா பரிதாபமாயிருக்குது – இந்தத் தடவை உட்டுடறோம்…”
üüசந்தோஷம்யா… இனி சத்தியமா இம் மாதிரி…”
üüபோவுது… ஆமா கையில எவ்வளவு வச்சிருக்கே?”
கிழவனின் கை அவனையுமறியாமல் இடுப்பைத் தொடுகிறது. üüநம்ம அய்யரு ஊட்டுப் பணந்தானே? சமாதானம் சொல்லிக்கலாம்…”
நால்வரும் அடுத்த கம்பார்ட்மென்ட் ஏறுவதும் கிழவன் வேலையில் ஈடுபட்டிருந்த üவாயாடிப் பெண்கள் வழக்காடுவதும் தெளிவின்றிக் கேட்டது.ý
குற்றத்திற்கான தண்டனை பெற்ற கிழவன் நிம்மதியாய் இருக்கையில் சாய்ந்து கொண்டான். சஞ்சலப்படும் போதெல்லாம் üüதப்பு செஞ்சோம்… தண்டனை கிடைச்சுது” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டான்.
üபிகில் அடிக்கிற பாவிý ஊதினான். வண்டி அசைந்து கொடுத்தது. கிழவன் கண்களை மூடினான்.
மெதுவாக வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. வேகம் குறைந்து கொண்டே வந்து அடுத்த ஸ்டேஷன் அடையுமுன் நின்றுவிட்டது.
வண்டி நிற்கும்போது குலுங்கியதில் கிழவன் விழித்துக் கொண்டான். üஎன்ன, ஏதுý என்று அறியுமுன் ஒரு ரயில்வே போலீஸ் அந்தக் கம்பார்ட்மென்டில் ஏறினான்.
üüஉள்ள யாருமுண்டா?” என்று கேட்டு வந்தவன் கண்கள் ஸீட்டடியில் சுழன்றன.
üüஉங்களுக்கெல்லாம் பாவ புண்ணியமே பார்க்கக் கூடாது… வாய்யா என் பின்னால” மூட்டையைத் தூக்கிக் கொண்டு இறங்கினான். கிழவன் ஏதும் புரியாமல் தொடர்ந்தான்.
இருபத்தைந்தாம் நிமிடம். முண்டாசைக் கழற்றி முக வியர்வையை அழுந்தத் துடைத்துக்கொண்டே வெறுங்கையுடன் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தள்ளாடி நின்றான் கிழவன். வயிற்றெரிச்சலடன் அவன் முன்னால் போன வாயாடிப் பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
üüஇன்னாடி இது? மூட்டையை டேஷன்ல தரமாட்டேனுட்டாவ?”
üüநம்மைப்போல நிறைய சனம் எறங்கிடிச்சு இல்ல?” அதான் போலீசு ரூல் கொண்டாந்திருச்சு.
üüஇவக என்னாடி ரூல் பேசறது? செத்த நேரம் முன்னால நாலு பேர் நம்ம கிட்ட துட்டு பறிச்சுக்கலை?”
üüபுரியாம பேசாதே… அந்தக் குண்டனுங்க போலீஸ் இல்லை. பொறுக்கிப் பயலுக… எனக்கே அப்பால தான் தெரிஞ்சுது.. அறியாத ஜனங்களை ஏமாத்தறது இவங்க வேலை.”
சோர்வில் கிழவன் மயங்கினான். üüஒரு தப்புக்கு ஒரு தண்டனை என்பது தானே நியதி… நான் நினைத்துக் கொண்டிருப்பது… ஆனால் என்ன இது? ஒரு தப்புக்கு ஒரு பக்கத்துல ரெண்டு தண்டனை கிடைக்க இன்னொரு பக்கம் தப்பு செஞ்சவன் வெகுமதி பெறுகிறான்… என்ன நியாயம் இது?” என்ற குழம்பினான்.

ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும் – விருட்சம் நாளிதழ்

3 Comments on “ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும்”

  1. கிழவனின் தப்புக்கு இரண்டு தண்டனை, ஆனால் இது மிக மிக மோசமான ஒன்று. எப்பவுமே ஏமாற்றப்படுவது வறியவர் மட்டுமே இது எழதாத விதி

Comments are closed.