அழகியசிங்கர்/ காளீ

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை

                            

    கைகளில் ஆயுதங்களுடன்
    புத்தகத்திலிருந்து மனத்திற்குள் நுழைந்தாள்
    பார்க்கும்போது அவளுருவம்
    கிலிகொள்ள வைக்கும் 
    அவளைச் சாந்தப்படுத்த
    சிகப்பு உடையில் விசாலமான
    நெற்றியில் திலகமிட்ட பூசாரி

    இருட்டுடன் கூடிய தெருவில்
    வீற்றிருந்த கோயில்
    அந்தகாரத்தைப் பூசி நின்றது
    வண்டி நகர நகர
    கோயிலும்

    காலை நேரத்தில்
    காளீ
    பிரசன்னமானாள்
    உற்சாகம் பீறிட்டெழுந்தது
    வனப்பு மிகுந்த கோயில்
    அன்புடன் அழைத்தது
    ஹே காளீ ஹே காளீ
    என் மனம் ரீங்காரமிட்டது

அழகியசிங்கர் / புகை மண்டலம் : மூன்று – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/ காளீ”

Comments are closed.