
(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை)
பெட்டி திறந்து கொண்டது
உள்ளே இருந்தவை
கண் சிமிட்டின
எடுத்துக்கொள்
எடுத்துக்கொள்
என்று ஆவலாய்ப்
பெருங்குரல்
கொடுத்துக் கத்தின
எதை என்பது
தெரியாமல்
பெட்டியை மூடியாயிற்று

One Comment on “அழகியசிங்கர் / பெட்டி”
Comments are closed.