
15/08/25 அன்று கவியரங்கத்தில் படித்த கவிதை – 1
நாம் இருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்
அதை மறக்கக் கூடிய வாக்கியமாக வாழ்க்கையை
அமைத்து விட்டோம்.
இனி ஒரு முறை சொல்வோம்
நாம் இருக்கும் நாடு நமது என்று அறிந்து கொண்டே இருப்போம்
பொன் எழுத்துக்களில் வராத வீரர்களின் குருதியும்
மலை பல கடந்து வாழ வைக்க ஓடோடி வரும் நதிகளும்
பிற நாடுகளின் மீது பேராசை கொள்ளாத சாந்தமும்
இந்தியன் குருதியில் இணையும் தர்மமும்
பட்டொளி வீசி பறக்கட்டும்.

One Comment on “பானுமதி/கொடி”
Comments are closed.