
15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று, நான் வாசித்த 10 கவிதைகளில்,4 ஆவது கவிதை
அலைபேசி அலாரம்
எழுப்பியதும் ஆரம்பிக்கிற
ஓட்டத்திலும்,அவசரத்திலும்
தொடங்குகிற நாட்களில் இந்த
சமயலறை ஜன்னல் ஒரு
வரமெனத் தோன்றும்.
சில்லென்ற காற்றைத் தவிர,
கொஞ்சூண்டு வானம்
தலையசைக்கும் வேப்பமரம்
கூடுதல் பரிசுகள்.
இன்று, தலை சாய்த்துக்
கரைகிற காகத்தை
ஆச்சரியமாய் பார்க்கிறேன்.
தொண்டை வரள அவர்
கூவியபின்னும் நேற்று ஏன்
வரவில்லையெனத் தெரியவில்லை.
“நாளை நம்ம தாத்தாவின் திதி” என
அண்ணா அழைத்து நேற்று சொன்னது
சட்டென நினைவு வர ,
“இன்று உனக்கு இரு கவளம்”
எனச் சொல்லி காகத்திற்கு வைக்கிறேன்.
குழந்தையும் , தெய்வமும் மட்டுமல்ல
காகமும், மூத்தோரும் கூட
கொண்டாடும் இடத்தில்தான்.
-
https://daily.navinavirutcham.in/?p=30239

One Comment on “மதுவந்தி/ நீத்தார் நினைவு”
Comments are closed.