
15.08.25 – 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,5 ஆம் கவிதை.
பயணம் முடித்து
இரயில் நிலையம் வந்திறங்கி
வீடு திரும்பியாச்சு.
வந்த நாளிலிருந்தே
விருந்து தொடங்கும்.
ஒரு நாள் பொங்கல்,
ஒரு நாள் கார்த்திகை,
ஒரு நாள் பதினெட்டாம் பெருக்கு என
தீபாவளி விடுமுறையில்
வந்தாலும்,
தினமொரு விருந்து
செய்து வைப்பாள் அம்மா.
“வீட்டுல பிள்ளை இருந்தா
விழாதான்” சொல்லியபடி,
நானில்லாமல் கழித்த
நாட்களை மறக்கக்
கொண்டாடுவாள் அம்மா.

One Comment on “மதுவந்தி/விருந்து”
Comments are closed.