ப.மதியழகன்/ரகசியம்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை

எங்கள் இருவருக்கும்
மட்டும் தான் தெரியும்
அந்த ரகசியம்
அது வெளிப்படாதவாறு
அதன் சிறகுகளை
முறித்துவிட்டிருந்தோம்
அது கசியாதவாறு
ஐஸ்கட்டி போன்று
இறுகச் செய்திருந்தோம்
அது அம்பலமாகாதவாறு
மனதை பூட்டி வைத்திருந்தோம்
தற்செயலாக போட்டு
உடைத்துவிடுவோமோ என அஞ்சி
வார்த்தைகளை வடிகட்டி
பேசிக் கொண்டிருந்தோம்
ரகசியம் பிறர்
அறியப்படாமல் போக
நாங்கள் இருவரும்
இல்லாமல் போக வேண்டும்
என முடிவெடுத்து
எங்களை நாங்களே
கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டிருந்தோம்.

ப.மதியழகன்/உன்னிடம் எப்படிச் சொல்வது – விருட்சம் நாளிதழ்

One Comment on “ப.மதியழகன்/ரகசியம்”

Comments are closed.