அழகியசிங்கர்/காத்திருந்தேன்

  19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை  3
                           
                                எங்கே நீங்கள்
        இருந்தீர்கள்?
    நான் அங்கிருந்து வந்தேன்
        உங்களைக் காண
    நீங்கள் இல்லை.
    திகைத்தேன்
    பொழுதைப் போக்க
    வழி தெரியாமல்
    உங்கள் வரவிற்காகக் காத்திருந்தேன்
    ஆர்ப்பரித்துப் பெரும் அலைகளுடன்
    எதிரே தெரிந்தது கடல்
    காண மறுத்தது மனம்
    உயரமாய்க் கிளைகள் பரப்பி
    பக்கத்தில் நின்ற மரமோ
    பரவசப்படுத்தவில்லை என்னை
    ஆகாயத்தில் திட்டுத் திட்டாய்
    வெண்ணிறப் பறவைகளின் கூட்டம்
    என் கவனத்தில் ஏனோ இல்லை
    இங்கும் அங்கும் சென்ற
    மனிதர்கள் வாகனங்களூடே இரைச்சல்
    எதுவும் உயிரற்றுத் தோன்ற
    எங்கே இருந்தீர்கள் நீங்கள்?
    உங்களைத் தேடி வந்தேன் நான்.

https://daily.navinavirutcham.in/?p=30659

அழகியசிங்கர்/ சாவு நிச்சயமென – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/காத்திருந்தேன்”

Comments are closed.