விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம் 4th poem
அசையாத நீரில்
சுழலும் கிண்ணங்கள்
எழுந்தவுடன் தெரிந்தது
அவர் பணியிலிருந்து
ஓய்வு பெறும் நாளென்று
சப்தம் தெரியாத
ஒற்றைக்குரல்
கழுத்தைத் திருப்பும்
நரை முடித் தலை
என்றும்போல்தான்
இந்தப் பகல்பொழுது
சில காக்கைகள்
காலை சாதத்திற்கு
வழக்கமான இடத்தில்
அவர் எப்போதும்
அந்த இடத்தில்
சில சந்தர்ப்பங்களில்
அவர் இல்லாமலிருந்தாலும்
அவர் அமரும் விதத்தில்
அசையாத நீரில்
சுழலும் கிண்ணங்கள்
ஒன்றையொன்று உரசாமல்
சுற்றிய வண்ணம்.
பார்த்தது பழக்கமானது
ஏதோ ஒரு தருணத்தில்
எங்கோ ஒரு புள்ளியில்
அலுவலக விதியை
சந்திக்கும் சந்தர்ப்பத்தில்
சிறுசிறு உரசல்கள்
இனி ----
நழுவத் தொடங்கும் நாட்கள்
அழகியசிங்கர்/காத்திருந்தேன் – விருட்சம் நாளிதழ்
One Comment on “அழகியசிங்கர்/அவர்”
Comments are closed.