எஸ்ஸார்சி/படைப்புலகம்

19/9/25
இணையக் கவியரங்கம்
எஸ்ஸார்சி
வாசித்த கவிதை 4

எழுத்துச் சத்தியத்தை
நட்டநடுவே நிறுத்தி
பிச்சை கேட்க வைத்து
பீற்றி அலைகின்ற
பித்தர்களின் கூட்டத்தை
படித்துப் படித்து
படித்ததற்கு எதிராய்
இடித்து இடித்து
நடி த்து நடித்து நரியாகி
நாள் போக்கும்
அஞ்ஞான அசிங்கத்தை
ஆய்ந்து ஆய்ந்து
ஆய்ந்ததை அறிந்ததை
சுமக்கமொரு தாங்கி‌ மட்டுமேயாய்
சிந்தையில் தெளிந்ததை
பந்தியில் கொணராத
பகல் வேஷக்காரர்களின்
சாயச்சங்கதியை
உறுவது உலகிற்கு உணர்த்தாது
எழுத்தென்னும் வேள்வியை வணிகமாக்கி
கலையை வேசியர் தொழிலாக்கும்
கொள்ளையரின் முழுமுதலை
சுட்டெரிக்கும் சுடுகனலை
எழுத்துச்சுடரொளியை
கருச்சுமக்கும்
திருக்கூட்டம் என்றுபெரும்
எம் படைப்புலகம்.

எஸ்ஸார்சி /அவனவன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/படைப்புலகம்”

Comments are closed.