
19-9-25 அழகிய சிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 6
காலா என்னருகே வாடா என்ற
கவிஞனுக்கு யானை உருவில் வந்தான்.
குழந்தை கை நோகுமே என
எண்ணித்தான் பொற்றாளம் தந்தான்
கிடக்க வேண்டாம் போ என்ற கவிக்குரலுக்குப்
பெருமாள் புறப்பட்டுப் போனான்
உனக்கது கிடைக்கும் போ என்று
மதுரையில் பொற்கிழி அறுத்தருளினான்
கவிஞன் குரலை மெய்யாக்க அமாவாசையில்
வானத்தில் பௌர்ணமி வந்ததாம்
எனக்கது எல்லாம் வேண்டாம் என் வழி இங்கே
நல்ல கவிதை ஒன்று தா

One Comment on “வளவ.துரையன்/அதுவே போதும்”
Comments are closed.