
19/9/25
இணையக் கவியரங்கம்
எஸ்ஸார்சி வாசித்த கவிதை
தூணிலும் இருப்பது
துரும்பிலும் இருப்பது
ககனத்துக் கடவுள்
கதைத்தது பழங்கதையே
தொட்டவிடமெல்லாம்
துட்டுக்கு வாய் பிளக்கும்
மட்டி அர்ச்சகரின் முட்டாள்
பார்வையிலோ
காசு கடவுளையும் நெடுங்கிடையாய்
தண்டனிட
பிறப்பிக்கும் கட்டளை
ஆகக் காசா லேசா
கடவுள் கதைச்சரடே.

One Comment on “எஸ்ஸார்சி/காசும் கடவுளும்”
Comments are closed.