
19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 7
படித்த ராமாயணத்தையே
படித்துக்கொண்டிருந்தனர்
கேட்பதையே கேட்பதற்கும்
ஆளிருப்பதால்
வழியே போன
ரிக்ஷாகாரன் சொன்னான்
இவர்கட்கு நாளை
சோற்றுக்கிறுக்குதே
அதனால்தான்
முன் தொகை ஐநூறு
முழுத்தொகையோ மும்மடங்கு
முதல் வகுப்புப்பயணித்து
மூக்குப் பிடிக்க உண்டு
கூத்தபிரான் கோவிலிலே
ஆயிரங்கால் மண்டபத்தில்
கூவியதே இம்முழக்கம்
அநித்யானி சரீரானி
விளங்காதுதான்
‘மனித வாழ்வு
நீர்மேல் குமிழ் அன்றோ
அறிதல் எப்போது
அறிவிலிகள்’ என்றபடி.

One Comment on “எஸ்ஸார்சி/பசி”
Comments are closed.