
19-9-25 விருட்சம் நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை 7
நலமா என்றேன்
நலம்தான் என்றாள்
பார்ப்பது இல்லை என்றேன்
பார்ப்பவைகளைப் பார்ப்பேன் என்றாள்
என்னைத் தவிர்ப்பது ஏனோ என்றேன்
குற்றம் உன்னிடம் என்றாள்
என்ன குற்றம் கண்டாய் என்றேன்
என்னைப் பார்ப்பதுபோல்
பார்க்கிறாய் எல்லோரையும்
என் வயது என்றேன்
நீ வண்ணத்துப் பூச்சியாய்ப் பறந்து போ
நீ விரும்பும் பூ அல்ல நான் என்றாள்

One Comment on “அழகியசிங்கர்/ நலமா?”
Comments are closed.