19-9-25 நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை 6
நானமர்ந்த இடம் அப்படித்தானிருந்தது
கற்பனை செய்தபடி இல்லையென்று
திட்டவட்டமாய்த் தெரிந்தது
யாரும் எதிர்பார்த்தபடி இருக்கவில்லை
ஆனால் வந்திருந்தார்கள் என்பதுறுதி
நானும் அவர்களுடன்தான் இருந்தேன்
அவர்கள் எனக்கு
முன்னாலோ பின்னாலோ
அமர்ந்திருந்தார்கள்
யாரோ ஏதோ சொன்னார்களென்று
சிலர் சிரிக்க
எல்லோரும் சிரித்தவர்களைக் கேட்டுச்
சிரித்தார்கள்
நான் வினோதமாய்ப் பார்க்க
என்னைப் பார்த்தார்கள் வினோதமாய்
நான் எழுந்து போகலாமென்று யோசித்தேன்
யாரோ என்னைப் பார்த்து ஏதோ சொல்ல
தொடர்ந்தது சிரிப்பலைகள்
தூரத்தில் தென்பட்டவர்களும் திரும்பிப்
பார்த்தார்கள்
வாடிக்கையாக இது இருந்ததாவென்று
சொல்லத் தெரியவில்லை
சில சமயங்களில்
இவர்களோடு இருக்கும்போது
நடப்பதுண்டு
அழகியசிங்கர்/ கோணல் கையெழுத்து – விருட்சம் நாளிதழ்
One Comment on “அழகியசிங்கர்/ நடப்பதுண்டு”
Comments are closed.