
“இன்னிக்குமா” தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது முரளிக்கு.
“அக்கா இன்னிக்கே வந்து மாமாவை கேக்கறேன்” என்ற தம்பியை அடக்கினாள் அக்கா.
“ அதென்ன கோவம் வந்தா கை நீட்டறது!!!, வாயால பேச தெரியாதா? நீயும் திருப்பி ரெண்டு போடுக்கா !!”
“வேண்டாண்டா இப்போ விட்டுவோம் . எனக்கும் பொறுத்துக்கொள்ள ஒரு எல்லை உண்டு அன்னிக்கு இருக்கு பாரு. என்னிக்காவது ஒரு நாள் இந்த பழக்கம் நிற்கதான் போகுது.”
“ நீ திருப்பி அடிச்சிடுவயாக்கா “
அக்கா சிரித்து கொண்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து மாமாவை பார்த்த தம்பிக்கு அதிர்ச்சி.
முகத்தில் பிளாஸ்ரி கையிலும் தலையிலும் கட்டு, அடடா!!! இந்த முறை அக்கா திரும்ப வெளுத்து விட்டாளா!!
தள்ளி போய் செல்லை எடுத்து “ஹலோ, அக்கா, என்னக்கா!!! இந்த தடவை திருப்பி கொடுத்துட்டயா?”
“இல்லடா அந்த தப்ப பாவத்தை, என்னிக்குமே நான் பண்ணமாட்டேன். “
“பின்ன மாமா தலைல, கையில கட்டோட காயத்தோட இருக்கார்!! என்ன ஆச்சு!! “
இன்னிக்கும் வழக்கம் போல பேசிட்டு இருக்கும் போதே கோவப்பட்டு, கோவத்தோட வேகமா அறைய வந்தார், சினிமா ஸ்டண்ட் மாதிரி டக்னு குனிஞ்சிட்டேன் , போய் வாச கதவுல மோதி, இடிச்சி, செம்ம அடி, அநேகமா இன்னியோட அறையெல்லாம் நிறுத்திடுவார்.”

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!!!!!
நல்ல வேளை ரெண்டு காலையும் தூக்கிட்டரோ என்று நினைத்தேன்