அழகியசிங்கர்/விற்று விட்டான்

அவன் அந்த அறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் புத்தகங்கள்.
அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.
இன்னும் சில தினங்களில் இங்குள்ள புத்தகங்கெல்லாம் அவனுக்குச் சொந்தமில்லை.
இன்னொருவருக்குச் சொந்தம் ஆகப் போறது.
ஆமாம். அவன் விற்றுவிட்டான். மனைவியின் தொல்லை தாங்காமல். இந்த வயதில் இனிமேல் முடியாது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டான். அதற்கு ₹ ஐந்து லட்சம் கிடைத்தது.
அந்த இளைஞன் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தான். கடைசியாக ஒரு கட்டை எடுத்துக் கொண்டு போகும்போது அவன் வெட்கத்தை விட்டு அழ ஆரம்பித்தான்.
அந்த இளைஞன் அவனிடம் வந்து,
“பெரியவரே கலங்க வேண்டாம். நான் ஆரம்பிக்கப் போகும் லைப்ரரியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்…நான் மாத ஊதியம் தருகிறேன். ” இளைஞன் சொன்னதைக் கேட்டவுடன், அவன் காலில் விழுந்து நமஸ்கரித்தான்.

S. அர்ஜுனன்/காலச் சக்கரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/விற்று விட்டான்”

Comments are closed.