
நீட் எழுதி ரேங்ல வந்து மெடிகல் காலேஜ்ல சேரறது இருக்கே அது பெரிய பிரம்ம பிரயத்னம்.எனக்கு அதிர்ஷ்டம்னே வச்சிக்கங்களேன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிலயே இடம் கிடைச்சது.மிடில் கிளாஸ் பொண்ணுக்கு மெடிகல் சீட் கனவுதானே அதுவும் ஜெனரல் கேடகிரில.
ஆத்தர் செளராசின்றவர் எழுதின ஹ்யூமென் அனாடமி புஸ்தகம் வாங்கணும் மூர் மார்க்கெட்ல கிடைக்குமானு இன்னிக்கு சாயந்திரம் பாக்கணும்.
பக்கத்துலதானே சாயந்தரம் நடந்து போனேன்.அப்ப..மூர்மார்கெட்ல புஸ்தகங்களோ புஸ்தகம், ஆனா நான் தேடின புக் கிடைக்கலை. அந்த மூலைக் கடை நம்பர் 43ல கேளும்மா அங்கே கிடைக்கும்ன்னார் ஒரு கடைக்கார பாய்.
அங்கே போனேன் மலைத்துப் போனேன் லட்சக் கணக்கான புஸ்தகங்களைப் பாத்து.கடைல யாரும் தட்டுப் படலை, ஒரு மர சேர் மட்டும் இருந்தது, மத்தபடி புஸ்தகங்கள்தான்.
பின்னால இருந்து ஒரு குரல், “என்ன வேணுமோ நாமளேதான் போய்த் தேடணும் ஷம்சுதீன் பாய் அப்பப்ப வருவார்”
திரும்பிப் பாத்தேன், சிரித்த படி நின்ற அந்த இளைஞன், “நான் வெங்கடேஷ் மெடிகல்தான் 3rd year, வழி விட்டால் நான் எனக்கு வேண்டியதை தேடுவேன்”
ஒதுங்கி நின்னேன்,அவன் ,”என்ன செளராசியோட அனாடமியா? எங்கயும் கிடைக்காது. என் கிட்ட இருக்கு வாங்கிக்கிறீங்களா,70%பிரின்டட் விலைல, ஓகேன்னா சொல்லுங்க நாளைக்கு கொண்டு வரேன்”
நான் தயக்கத்துடன், “சித்ரா ,முதல் வருஷம், நாளைக்கு கொண்டு வாங்க”
“ஓகே சித்ரா நாளைக்கு பஸ் ஸ்டாப் பக்கம், கேஷ் வேணும் நோ கடன் சரியா பை”
அப்படி ஆரம்பித்ததுதான்.இதோ இன்னிக்கு எங்க முதல் வெடிங் அனிவர்சரி. என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? நாங்க முத முத சந்திச்ச பழைய புஸ்தகக் கடை ஃபோட்டோ பெரிசா என்லார்ஜ் பண்ணி கொடுத்திருக்கார்.

ஆகா அருமை சூப்பர் கிப்ட்
எப்பொழுதும் போல் நகைச்சுவையில் கலக்கியிருக்கீங்க
Eppadivaayathu kalyanam panni Vachiduvaru
படம் எப்பிடி இருந்தாலும் அதுக்கு உங்க ஸ்டைல்ல எழுதிட்டீங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க. ஒரு குட்டிக் கதையை கூட அழகா அலங்காரமா சொல்லிட்டீங்க. அருமை சார்.