சாந்தி சந்திரசேகரன்/பொறுப்பு..!

குழந்தையாக வளர்த்த மகளுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்பதை ராதாவால் இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“என்னம்மா செய்யுற..? நான் வேணும்ன்னா அப்பாவுக்கு காய்ச்சல் சரியானதும் உதவிக்கு வரவா?” ராதாவின் குரலில் சற்று வருத்தம்.
“எனக்கென்னம்மா.. நல்லாருக்கேன். உங்க காலம் மாதிரி நானே எல்லா வேலையும் செய்யுற சூழுல் மாறிடுச்சி. அவரும் உதவறாரும்மா. நேத்தே மாவாட்டிட்டேன். அவரு வேலைக்கு போறதுக்கு முன்ன எனக்கும் தோசை சுட்டு வச்சிட்டாரு. பாப்பாவை தலைக்கு குளிப்பாட்டி தூங்க வச்சிட்டேன். துணி துவைக்கப் போறேன். பத்து மணிக்கு அலுவலகத்துக்கு ஒரு மெயில் மட்டும் அனுப்பனும். மதியானத்துக்கு மேல அவரு சாப்பிட வரும் போது அவரு குழந்தையை பாத்துக்கிட்டா சேர்ந்து வீட்டை சுத்தம் பண்ணிடுவோம். என்னையப் பத்தி கவலைப்படாம.. நீ அப்பாவ நல்லா பாத்துக்கம்மா. முடியும் போது ஊருக்கு வாங்க சரியா?” நித்யா.
வேலை மும்முரத்தில் சாப்பிட்ட தட்டைக் கழுவாமல், அலைபேசியில் நாள் முழுவதையும் தொலைத்த மகள் திருமணமாகி தாயானவுடன், இத்தனைப் பொறுப்புடன் மாறியதை எண்ணி மகிழ்ந்து போனாள் ராதா.

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நோ பிராப்ளம் – விருட்சம் நாளிதழ்