இந்துமதி நடராஜன்/இருமுகம்

  நான் அறியாத  உன்  இன்னொரு  முகம்  இன்னிக்கு  பார்த்து  அதிர்ச்சியாகிட்டேன் க்ஷைலு என்றான் அவள்  கணவன் சிவா .

அப்படி என்ன புதுசா பார்த்தே நீ?
நம் குழந்தைகளை அன்பால் குளிப்பாட்டும் நீ , வீட்டு வேலைக்காரி குழந்தை கிட்ட ஏன் அவ்வளவு கடுமையா வன்முறையா நடந்தே ?
அந்தப் பெண் நான் நிறைய ஆண்டுகளா ஆசையா வைச்சிருந்த, என் முகம் வரைந்த, டீ குடிக்கும் அழகான விலை உயர்ந்த கப்பை தூள் தூளா உடைச்சா கோபம் வராம பின்னே கொஞ்சவா முடியும் ?
அதுக்காக முதுகில் ஓங்கி அறைஞ்சு வெளியே தள்ளி விட்டதை என்னால் ஏத்துக்க முடியலை. இதுவே நம் குழந்தை உடைச்சிருந்தா இப்படிச் செய்வியா?
அவங்க ஏன் உடைக்கப் போறாங்க?
நம் குழந்தைகள் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டு , அந்தக் குழந்தை அவங்க அம்மாவுக்கு உதவியா கழுவும் போது கை தவறி உடைஞ்சா அடிப்பியா? . அந்தக் குழந்தை மனசு உடைஞ்சு அழுதா அது பாவம் க்ஷைலு.
நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவங்க கிட்ட பேசி அந்தக் குழந்தையும் படிக்க ஏற்பாடு பண்றேன் சிவா.

ஸ்ரீராம்/என்னாச்சு எனக்கு – விருட்சம் நாளிதழ்

One Comment on “இந்துமதி நடராஜன்/இருமுகம்”

Comments are closed.