அடடா ஓ! “அடானா”/நா.விச்வநாதன்

அடானா இசைப்பவரையும் கேட்பவரை
யும் ஒரே நேரத்தில் குதூகலப்படுத்தும்.
இசை வாத்தியங்களில் அடானா உருக்
கோ உருக்கென்று உருக்கிஉருட்டும்.சட்
டென இனங்கண்டுகொள்ளும் எளிய
ராகம். தீரசங்கராபரணத்தின் குழந்தை.
முன்னிரவில் மட்டுமே பாடவேண்டிய ராக
மென இலக்கணம் வகுத்தனர்.எந்த நேர
த்திலும் இசைக்கலாம் என்பது என்போன்
ற சாமான்யனின் கணக்கு.எமக்கும் என்
னொத்தபாமரனுக்கு ருசிதான்பிரதானம்.
இதன் ருசிக்குக்காரணம் எளிய ஸ்வர
வரிசை.ஜாஜ்வல்யமான ஜ்வலிப்பு.யாரு
ம் பாடவில்லையென்றால் அதுவே தனக்
குத்தானே பாடிக்கொண்டிருக்கும் சிநேக
சூத்திரம்.ஸ்வரங்களை உருட்ட வித்வான்
களுக்குத் தோதான ராகம். ஷட்ஜமம்,சது
ஸ்ருதி ரிஷபம்,அந்தரகாந்தாரம்,சுத்த மத்
திமம்,பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,கை
ஷிகி நிஷாதம்,காகலி நிஷாதம்………..
பமபரீஸ் நிஸ்தா-தரிஸ் நிஸ்தா-தநிப பம
பா–பபரிஸ் ஸ்ஸ்ஸ்ரஸா ஸ்நிரிஸ்தா..என
நிறையப் பயப்படுத்தலாம்.

நான் கேட்கும் ஜாதி. வெட்டவெளியில்
யாருமற்ற பெரிய மைதானத்தில் இந்த
அடானாவை ஒருகை பார்ப்பது,துணைக்
கழைப்பது ஆபத்தில்லாதது.’ஏல நீ தய
ராதூ….’ இது கர்ஜம்.கர்ஜிக்கலாம் என்
பது என் துணிவு.ஏல நீ தய ராதூதூஊ…’
ரெண்டொரு ஆடுகள்,நாலு குருவிகள்,
விசுக்கென்று பயந்து ஓடும் ரசனைய
ற்ற மாடு எனச்சூழ உலகத்தின் உயர்ந்த
சங்கீதம் எனதே என்று பிரகடனம் செய்
யும் கர்வம்.’தேவாதி தேவனே வா..உத்த
மனே வா..தாமரைக்கண்ணா வா..வா..
ரா ரா தேவாதி தேவ ரா ரா மஹானுபாவ
ரா ரா ராரா ராஜீவ நேத்ர ரகுவரபுத்ர…’

“என்னங்க…ஸ்கூல் கிரவுண்டிலே கத்தி
ண்டிருந்தீங்களாமே..என்று பார்யாள் வச்
சாபாருங்க விமரிசனம்.ஞானமற்றவர்க
ளுக்கு அடானா இல்லை.பரம ஸாம்ப வா
ரேஸ ருண்டனுசு பல்கு ராவணூடு தெலி
ய லேய போகே’உண்மைதெரியாதவங்க
ராவணகுலத்தினர் என்பது என்கட்சி.

நம்ம மதுரை சோமுப்பிள்ளை அடானா
கேட்க்கனும்.லட்சம்தடவை கேழ்க்கலாம்
ஓர் அடானா சோமுப்பிள்ளையிடம் லட்
சமாகப்பரிமளிக்கும்‌.’ராம நாமமு..ஜன்ம
ரட்சக மந்ரம்ம்ம் ‘ ‘கேட்கறதுங்கற வாக்ய
ம் பிழை.சோமுப்பிள்ளை கச்சேரியைப்
பார்கனும்கறதுதான் சரி. ஒரு கம்பீரம்,
குழைவு,ஓர் அலட்சியம், ஒரு பக்தி,அதீத
மான பரவசம்.இந்தா பிடிச்சுக்கோ என்று
ரசிகர்களிடம் விட்டெறியும் சாகசம்.இந்த
அடானா ராகத்தைக் கவனம் பண்ணிய
து சோமுப்பிள்ளைக்காகவே. ‘சோம..சூர்
ய நேர்ந்துடைன சோம சூர்ய.’பிள்ளை
யின் முக கம்பீரம் பாட்டோடுவரும் அழகு.
கன்றுக்குட்டியைக் கயிற்றைப்பிடிச்சு
இழுத்துவரமாதிரி.முரட்டுக்களை கயிற்
றை விட்டுவிட்டு ஜல்லிக்கட்டுக்கு விரட்
டுகிறமாதிரி சோமுப்பிள்ளை ஆணை
யை மகிழ்ந்துகேட்கும். உனக்கே அடை
க்கலம் என்பதுமாதிரி ராமச் சந்ராதிதி..தி
பக்கவாத்யக்காரர்களைப் படுத்தி எடுத்து
விடுவார்.கச்சேரிக்கு மேடைபோதாது
மைதானம் வேண்டும்.மேடைவிளிம்புக்
கு வரும்போதெல்லாம் பக்கவாத்யக்காரா
தடுத்தாட்கொள்ளவேண்டும்.கை கால்
தோள் தொடை நெஞ்சு என்று எந்த இடத்
தில் வேண்டுமானாலும் தாளம்போடு
வார்.கீர்த்தனை இலக்கணங்களையெல்
லாம் உதறிவிடும் அழகு பிள்ளையிடம்
பார்க்கலாம்.அசுரசாதகம் அசுரபலம்.
சின்நேரம் ‘சபாஷ்.’சின்நேரம் ‘குருநாதா’
சின்நேரம் கண்ணீர்,அவருக்கு அவரே
சின்நேரம் ரசிகர். பிடில்காரர்தான் அடிக்
கடிமாட்டிக்கொள்வார்.இடையில் கொடுக்
கும் இழைவான சப்த சௌந்தர்யங்கள்.
உறுமல்,கைகளை மேலே உயர்த்தி துப்பு
ரு நாரதரை மல்லுக்கழைக்கும் கர்வம்.
சிலநேரம் சட்டென்ற மௌனம். மேடை
நிசப்தம்.ரசிகாள் நிசப்தம். அதுதான்
பிள்ளையின் உச்சசங்கீதம்.’தட்சிணாமூ
ர்தீம் ஸதா சிந்தையே ஹம்’ தீக்ஷதரை
பிள்ளை பாடினால் மத்தாப்புச் சிதறல்.
அப்புறம் இருக்கு உருக்கம்’என்ன கவி
பாடினாலும்..

அடானா குணம் ரௌத்ரம்தான். ஏற்றதா
ன கமகத்துடன் மேலே எழுப்பி ஆரம்பித்த
ஸ்வர்த்திற்குள்ளே வந்தடங்குவது குண
விசேஷம்.பூமராங் வேட்டைக்கருவி மாதி
ரி.அடானா விற்கும் இதுதான் பொருள்.
அடானா ஒருகாலத்தில் அக்ரகாரங்களில்
நவராத்திரி கொலுப்பாட்டாய் இருந்து.
புதுக்கணக்கப்பிள்ளை சீமந்த புத்ரி
அம்புஜம்- டைப்ரைட்டிங் ஹயர்,ஷார்ட்
ஹாண்ட் லோயர்-பாடறேன் மாமி என்று
‘அனுபவ குணாம்புஜீஜீ…’ என்று இழுப்பா
ள்.கரகரத்த குரல்.அடானாவைச் குதறிப்
போட்டாளென்ன ரம்மியமாக இருப்பாள்.
ஒரு கை சுண்டலை வாங்கிக் கொண்டு
என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு
போய்ட்றேன்மாமி நாளைக்குவரேன்’
நாளைக்கும் அனுபவ குணம்புஜி அதனா
லென்ன அம்புஜம் அடானாவைக்குதறி
னாலும் அதற்கு ஒன்றும் ஆயிடாது.அம்
புஜம் ஒஸ்தியாப்படறாதான். பயந்து
பயந்து லவ் பண்றதிலே இருக்கு சாகசம்.
இன்னும் அந்த ரெட்டைஜடை ஞாபகம்.

அதிவேகப் ப்ரயோகங்கள் ஆந்தோள கமக டாலுகமகப்ரயோகங்கள் பிச்சுக்கும்
அசல் வித்வான்களிடம்.சங்கீதம் போஜன
விவகாரமாகமாறி கோவில்களிலிருந்து
ஸபாக்களில் வந்து உட்கார்ந்து சிட்ணி
மெர்ல்போன் அட்லாண்டா ,கலிபோர்னி
யா என விமானமேறிய போதும் அடானா
அதன் தனித்துவத்தை இழந்துவிடலை.
வயசான காலத்திலே செம்மங்குடி மாமா
ஏழெட்டுபேரோட இசையை திவ்ய நாம
பஜனையாக மாற்றியபோதும் அடானா
வை அசைக்கமுடியலே. குரல்போன
மாமாவிற்கு அனுசரணையாக நின்றது
நன்றியும்இரக்கமும் மீதுற பொல்லாத
அடானா.

‘அம்ப தர்ம’என்று தியாகராஜரும்,குஹஸ்
பதே என்று தீக்ஷதரும் உருகுவார்.பால
கனகமய நாட்டியத்திற்குத் தோது.அபிநய
த்திற்கு ஒத்துழைக்கும்‌.அடானாவைச்
சிலர் கண்களை மூடிக்கொண்டுபாடுவர்.
சிறப்புதான்.இசை செவிவழி மனசுக்குள்
குடிகொள்ளவேண்டிய அரியவஸ்துதான்.
அடானா சுப்பையர் என்று ஒருத்தர் இருந்
தார்.அடானாவை அடகு வச்சாரான்னு
தரவுகள் ஏதுமில்லை.தனக்கு புகழ்தரும்
ராகங்களை ராஜாக்களிடமும் ஜமீன்தார்
களிடமும் மிராஸ்தார்களிடமும் அடகு
வைத்து ஜீவனம் செய்யும் வழக்கம்
இருந்தது.அப்புறம் அந்த ராகத்தைப்
பாடக்கூடாது. மீட்டமிறகே பாடலாம் என்ப
தெல்லாம் சுவாரசியமானவை.

அடானாவில் க,த வர்ஜம்.பாஷாங்கராகம்.
காந்தாரமும் கைகிலி நிஷாதமும் அந்நி
ய் ஸ்வரங்கள்.த்ரிதிஸ்ருதி தைவதத்தில்
சதுர்ஸ்ருதி தைவதத்தில் நுட்பமாகப் பிடி
த்தால் அடானாவில் ரகளைபண்ணலாம்.
மோஸஹோ..புரந்தரதாசர் நாமா.கொஞ்ச
ம் நிரடல்.யாரும் தலைவைத்துப்படுக்க
மாட்டார்கள்.கதா காலட்சேபம் துவங்கு
பவர்கள் அடானாவை மத்திம காலத்தில்
பாடுவது வழக்கம்.நீலகண்ட சிவனின்
‘இன்னும் இரக்கமு’க்குக் கொடுப்பினை
இல்லை.பிரபலமாகாத உருப்படி.அஞ்சே
லன்றேன் பெரியசாமி தூரனை சிலர்
பாடுவர்.”மனக்கோயில் உனக்காகவே”
என்று கண்டசாலா தப்பான உச்சரிப்போ
டு பாடியிருக்கிறார்.தமிழ் நாக்கு அவருக்
குக் கடைசிவரை வாய்க்கவே இல்லை.
‘கதவைச் சாத்தடி கையில் காசில்லாத
வன்’ரத்தக்கண்ணீர் அடானா.எம்எல்வி.
நந்தனார்’மெத்தக் கடினம்..அடானாவின்
முழுரூபமும் வெளிப்படும்‌.யார்தருவார்
இந்த அரியாசனம்? சினிமா இசைக்கும்
அரியாசனம் தந்தார்கள்.

திருப்பாவையைக்கூட அடானாவில் மெட்
டிட்டுப்பாடுவர்’புள்ளின்வாய் கீண்டானை.
மாரிமலை முழைஞ்சில் மன்னி கிடந்து
அடானா சிக்கும்.”,யார்தருவார் இந்த
அரியாசனம் ‘என்று என்குரலில் கரகரத்
துவிட்டு அடானா வியாசத்தைப் பூர்த்தி
செய்வோம்.

(மீள்)