தமிழில் நூல்களின் தரம்/வாசு தேவன்

தமிழில் நூல்கள் அச்சு தரம், அட்டை வடிவமைப்புகள் அருமையாக உள்ளன. ஆழ்ந்த கற்ற எடிட்டர்கள் ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் தேவை. ஒரு நூல் ஏன் வரவேண்டும்? எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதற்கு முன் இதுமாதிரியான நூல்கள் வந்ததா? பிற பிராந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களோடு ஒப்பிட்டு மதிப்பீடுகள் நடக்க வேண்டும். சூழலை கருத்தில் கொண்டு நூல்கள் வெளிவரவேண்டும். இது மொழிபெயர்ப்புக்கும் பொருந்தும். Professionalism தேவை. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் நூல்கள் வெளிவருகின்றன. எதை வாசிப்பது எதை ஒதுக்குவது என விழி பிதுங்க வைக்கிறது. Knopf, Avon, Routledge Classic, Faber and Faber, Farrar,Strauss and Giroux போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களை எழுதிய ஆசிரியர் பின்புலம் தெரியவில்லை என்றாலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். அவர்களுடைய எடிட்டர்கள் தேர்வு செய்வதெல்லாம் ஆகச்சிறந்த நூல்கள். தமிழில் எழுத்தாளர்களும் / பதிப்பகங்களும் பெருகிவிட்டன. எந்த நூல்களை வாசிப்பது என்பது சிக்கலாகி வருகிறது. மேலும் பதிப்பகங்கள் எழுதிய ஆசிரியர்களிடம் எவ்வளவு நூல்கள் விற்பனை ஆயின என்பதை சொல்வதே இல்லை. இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. பல நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்கும் இதே நிலைமைதான். ஏன் இந்த ஒளிவு மறைவு விளையாட்டு எனப்புரியவில்லை. நான் பணத்திற்காக எழுதுவதில்லை. என்னைப்போல் பலர் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறார்கள். ராயல்ட்டி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் எவரிடமும் உண்மையான விற்பனை எண்ணிக்கையை சொல்வதில்லை. தமிழ் பதிப்பக துறையில் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது.