
ஏமாங்கத வளம்
சீவக சிந்தாமணியில் வரும் ஏமாங்கத நாட்டு வளத்தைக் காட்டும் பாடல் இது. ஏமாங்கத நாட்டில் உயரமான தென்னை மரத்திலிருந்து விழும் முற்றிய தேங்காய் நேரே கீழே விழாமல் கமுகின் தேன் போன்ற குலையைக் கீறி சாற்றை இரைத்தும் பின் பலாப்பழங்களைப் பிளந்தும் இனிய மாங்கனிகளைச் சிதறச் செய்தும் பின்னர் வாழைப் பழங்கள் சிந்தச் செய்தும் கீழே விழும் என்கிறார் திருத்தக்க தேவர்.
தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும் இப்பாடல் குறிப்பாகச் சுட்டுகிறது.
“காய்மாண்ட தெங்கின்
பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன்
தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிண
தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென்று இசையால் திசை போயது உண்டே.”
