வண்ணதாசன் கவிதை

யோசித்துப் பாருங்கள்.
மிகுந்த சஞ்சலத்தில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு முறையும்
உங்கள் வீட்டின் மற்றொரு அறையில்
யாரோ ஒரு டம்ளரைத் தவற விடுகிறார்கள்.
கெட்டியான தரையில் உலோகச் சத்தம் தலை சுற்றி ஆடுகிறது.
நீங்கள் மறுநொடி விடுபட்டு விடுகிறீர்கள்.
இப்போது நீங்கள் நிற்பது அந்த உலோகச் சத்தத்து ஆற்றின் கரையில்.
%
2019