
கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்
சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.
அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்
இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்
றி வசனம்பேசினர். களிப்புமட்டுமே
முறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்
தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்
கொண்டிருப்பதெல்லாம் சகஜம்.சுவாமி
கள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழு
ங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்
தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்
அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்
தது.
40 நாடகங்கள் எழுதினார்.நம் மரபுப்படி
பல காணமற்போய் 18 மட்டுமே கிடைத்
திருக்கிறது.உப்பு ஸ்டோர்ஸில் வேலை
பார்த்ததை உதறிவிட்டு வண்ணச்சரபம்
தண்டபாணிசுவாமிடம் இசைபயின்றார்.
தீவிரமுருகபக்தராகி இடுப்புவேஷ்டியில்
உலவி தான் துறவி என்றறிவித்தார்.
புதுக்கோட்டை கஞ்சிரா வித்வான் மான்
பூண்டியாப்பிள்ளையிடம் வந்து சேர்ந்தா
ர்.மான்பூண்டியாப்பிள்ளை கஞ்சிரா வாசி
க்க சுவாமிகள் பாடுவாராம்.புதுக்கோட்
டை தட்சிணாமூர்த்திப்பிள்ளை போன்ற
வித்வான்களின் இசைச் சதஸ் கோலாக
லமானது என்பர்.
வேலு நாயர்,ஜி.எஸ் முனுசாமி நாயுடு,
ஜெகந்நாத நாயுடு என இசையாளர்
கள் தொடர்பில் சுவாமிகள் இசைந்தி
ருந்தார்.ராமுடு ஐயர்,கல்யாணராம
ஐயர்,சாமி நாயுடு போன்றோர் நாடகக்
கம்பெனிகள் வைத்திருந்தனர்.அவர்
கள் நட்பும் நாடகக்கலையில் ஈடுபாடு
கொள்ளவைத்தது.’ மதுரை தத்துவ மீன
லோசனி வித்துவ பாலசபை என்ற நாட
க சபாவை ஆரம்பித்தார். சிறார்களுக்
கென்றே ‘பாலர் சபா’வை ஏற்படுத்தினார்.
தமிழ்முதல் நாடகமான காசிவிஸ்வநா
த முதலியாரின் டம்பாச்சாரி என்ற நாட
கத்தை அறிந்திருந்தார்.அதையொட்டிய
நாடகப்போக்கை விலக்கி ஏற்கெனவே
மக்கள் மத்தியில் சிறப்பாக புழங்கிக்
கொண்டிருந்த உருக்கமானகதைகளை
யே தேர்ந்தெடுத்தார்.இராமநாடகக் கீர்
த்தனைகள்,காவடிச்சிந்து ,கதாகாலட்சே
பப்பாடல்களைத் தேர்ந்தெடுத்தார்.இசை
நாடகங்கள். இசைக்கு விளக்கமாகவே
வசனங்கள் அமைந்திருந்தன.மக்களைக்
கட்டிப்போட்டது.நாடகமேடையை ஒரு புனி
தக்கோயிலாக மாற்றினார்.
அபிமன்யூ,பவளக்கொடி,சுந்தரி,நல்ல
தங்காள்,லலிதாங்கி போன்ற நாடகங்
கள் பிரசித்தமானவை.இவரது நாடகங்
களில் இசைதான் முதன்மைப்படுத்தப்
பட்டது.நாடகமே இசையாலானதுதான்.
நல்லநடிப்பாற்றல்.பொலிவான தோற்ற
ம் கொண்டிருந்ததால் யமன்,இரணிய
ன்,கடோத்கஜன் போன்ற பாத்திரங்களி
ல் நடித்தார்.இவரது உச்சபட்ச ஆவேச
நடிப்பைக்கண்ட பெண் ரசிகை ஒருத்தி
நாடகக்கொட்டகையிலேயே மயங்கி
விழுந்து கர்ப்பம் கலைந்ததால் அன்றி
லிருந்து நடிப்பையே விட்டார். நாடகங்
கள் பாடல்கள் எழுதிப் பயிற்சி கொடுக்க
ஆரம்பித்தார்.ஒரே இரவில் முழு நாடகத்
தையும் அழகாக எழுதிவிடும் ஆற்றல்
பெற்றிருந்தார்.
சுவாமிகளால் நிறையப்பாடல்கள் புதுப்
பொலிவைப்பெற்றன.”எத்தனை நேரமா
க…” தன்யாசி,”சத்யவான் மீ துனக்கு
ஆசை ஏன்?பீம்ளாஸி,”கழுத்தில் விழுந்த
மாலை..” இந்துஸ்தானி காபி,”தேங்காய்
உடைந்துபோச்சே..”முகாரி,”சத்வ குண
போதன்..”எப்போ வருவாரோ..”காதல்
கனிரசமே” போன்றபாடல்கள் எங்கும்
ஒலிக்க ஆரம்பித்தன.சங்கரதாஸ் சுவாமி
கள் புயல் எனலாம்.சுதந்திரப்போராட்டத்
தில் ஈடுபடவில்லையாயினும் இவரது
பாடல்கள்–அதற்குத்துணையாக பிறர்
பாடினர்.”கதர்க் கொடி கப்பல் தோணு
தே..” பாடலை விஸ்வநாததாஸ் பாடிய
தைப்போல. ஞானபழத்தைப்பிழிந்து..”
இன்றளவும் ஈர்க்கும் பாடல்.சதி அனுசூ
யா,சரஸ்வதி சபதம் போன்ற நாடகங்
களின் தாக்கத்தால் நாடகக் கூறுகளோ
டு சினிமாவாக வந்தன.
பாரம்பரிய வட்ட அரங்கை ஒருபக்க அரங்
காக சுவாமிகள் மாற்றினார்.பம்பல் சம்
பந்தமுதலியாரின் மனோகரனுக்கு பாட்
டெழுதினார்.உடுமலைச்சரபம்முத்துசாமி
கவிராயர்,குடந்தை வீராசாமி வாத்தியார்
மதுரகவி பாஸ்கரதாஸ், பாலாமணி
என ஏகப்பட்ட சக நண்பர்களோடு சதா
நாடகங்களை மேம்படுத்துவது பற்றி
உரையாடினார்.”தேவரும் மகிழும் நாடகம்
சீர்கெடுப்போச்சு..என்ற வசை வரக்கூடா
தென்று கவலையுற்றார்.
தமிழ்மொழியை முன்னெடுத்தார்.கோ
யில்களில் தமிழ் முழங்க வேண்டும்
என்றார்.”பவள சேனா மந்திரி/ இப்பாரி
னிலே/ உள்ள ஆலயங்கள் தோறும்/பூஜி
க்கின்றனர்/ அந்தணர் யாரும் ஆறுகா
லம் தோறும்/ தந்த மேள வாத்ய கோஷ்
டியாய் எல்லோரும் / செந்தமிழ்த் தேவா
ரம் திருப்புகழ் அலங்காரம் செப்புமுறை
ஒப்பிடவே தப்பிதம் அல்லாமல்…”என்று
பாடினார்
இயற்கை ஒலிகளை எவ்வாறு தமிழாக்கி
அழகுபடுத்துகிறார்.பம் பம் பம்..தும்பியெ
ல்லாம் தும் தும் தும் என்று ஒலிக்கின்ற
ன.தாளவகை மல்லாரி கடிகைகளோ தீம்
தீம்..என்று சப்திக்கின்றன.இவை எல்லா
ஒலிகளையும் ஒன்று கூட்டி தும் பம் தீம்
தோம் – தும்பத்தீம்தோம் துன்பம் தந்தோ
ம் என்று பொருள் கொள்ள வைத்தார்.
கூந்தல் நீருண்ட மேகம் போலிருக்கும்
நீளம், கொஞ்சமல்ல பத்து பாகமிருக்கும்
என்று பவளக்கோடியில் வர்ணிப்பார்.
அம்மானைப்பாடல்களையும் தெருக்கூ
த்துப்பாடல்களையும் பழங்கதைகளாயி
ருந்தவற்றை நாடகங்களாகக் காட்சிப்
படுத்தினார் அவற்றின் பழமை மாறாமல்.
பவளக்கொடி,சீமந்தினி,சதி அனுசூயா,
பிரகலாதன், சிறுதொண்டர்,வள்ளித்தி
ருமணம்,சத்யவான் சாவித்ரி என நீளும்.
அரிச்சந்திரா மயான காண்டம்,பாதுகா
பட்டாபிஷேகம்,இராம ராவண யுத்தம்
வாலிமோட்சம் முக்கியமானவை.சினி
மா வந்தபிறகும் சுவாமிகளின் தாக்கத்
தோடுதான் ஆரம்பசினிமாக்கள் வந்தன.
மற்றவர்களைப்போல சுவாமிகள் காணா
மற்போகவில்லை.காரணம்அவ்வை சண்
முகத்தின் பிரவேசம். பேரா.வீ அரசு போ
ன்றவர்கள் -பேசும்போதெல்லாம் சுவா
மிகளை நினைவுகூறும் இசையறிஞர்
அரிமளம் பத்மநாபன் போன்றவர்களும்
காரணமாகின்றனர். காணாமல்போனதா
கச் சொல்லப்படும் பிரதிகளை மீட்டெடுப்
பது இவர்களின் பணியாகும்.
“அபசாரம் செய்யும் பகைவனும் வீடுவந்
தால் உபசாரம் செய்யவேணும்” என்று
பாடுவார் சுவாமிகள்.ஒரு சகாப்தமாக
வாழ்ந்த சுவாமிகளுக்கு இன்னும் கௌரவமளிக்கும் வகையில் தமிழக
அரசு பெருவிழாக்கள், கருத்தரங்கங்
கள் நடத்தவேண்டும்.
*
