அப்துல் காதர் அல்-ஜிலானி கவிதை

உங்கள் உடலில்
உள்ள இதயம்
கூண்டில் இருக்கும்
ஒரு பறவை போன்றது.
மேலும் அது;
பெட்டியிலுள்ள
ஒரு முத்தை ஒத்தது
அல்லது
பெட்டகத்தில் இருக்குமொரு பொக்கிஷம்.

எனினும் மதிப்பு
கூண்டுக்கு அல்ல
ஆனால் ஒரு பறவைக்கு
பெட்டிக்கு அல்ல,
ஆனால் ஒரு முத்துக்கு,
பாதுகாப்பான பெட்டகத்திற்கு அல்ல,
ஆனால்
உள்ளிருக்கும் புதையலுக்கு…

  • முக நூலில் பதிவு செய்தவர் : க.மோகனரங்கன்