என்னைக்கடந்துபோகாதவர்கள் – தமிழ்வாணன்/ஜெயராமன் ரகுநாதன்

அதிகக்குளிரில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட எழுந்தபோதே அம்மா கிச்சனில் லைட் எரிய சமைத்துக்கொண்டிருப்பாள்.

விடிந்தப்பப்புறம் கிச்சனில் லைட் என்றால் என் மனசுக்கு உடனே வெளியே மழை என்று புரிபட்டு குதூகலமாகிவிடும். முதலில் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாள். லீவு விடாட்டாலும் “ அதெல்லாம் கிடையாது, போப்படாது” என்று அதே தீர்க்கமான டெசிஷன்.

“இந்த மழைக்கேல்லாம் ஒண்ணும் ஆகாது அல்லி! இத்தன குழந்தைகள் வரச்சே,என்ன, ரகுவ அனுப்பு! இன்னிக்கு டெஸ்ட்” என்று பிருந்தா டீச்சர் பாதி சிரிப்பு பாதி கண்டிப்பாகச்சொன்னாலும்,

“இல்ல பிருந்தா! நீ இன்னொரு நாள் இவனுக்கு தனியா டெஸ்ட் வெச்சுடு, நா அனுப்ப மாட்டேன். வழில குண்டும் குழியுமா இருக்கு, ஒயர் ஏதானும் அறுந்து கெடந்தா..”

எட்டு மணி வரைக்கும் ஏதானும் புஸ்தகத்த வெச்சுண்டு பாவ்லா பண்ணி விட்டு திண்ணைக்கு வந்து விடுவேன். மொத்தம் ஏழோ எட்டோ வீடுகள் மட்டும் இருந்த எங்கள் தெருவில் மழைத்தண்ணீர் சுழித்துக்கொண்டு ஓடும். காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு இன்ப ஆறு மோஹனமாக நெளியும். மழையின் அலைக்கழிப்பில் செம்பருத்திப்பூவின் மெல்லிய காம்பு அல்லாடும் பரிதாபம். தென்னை மரத்திலிருந்து சொட்டும் நீரில் சொர்க்கம் தெரியும். சில சமயம் எப்போதோ தொலைத்த கலர் பென்சில், ஷார்ப்பனர் என்ற பள்ளி சமாச்சாரங்களும் பல மாலைகளுக்கு முன்னர் சாப்பிட்டு எறிந்த காட்பரீஸ் சாக்லெட் பேப்பரும் மிதந்து வரும்.

திருட்டுத்தன மழை நீர் அளைச்சலுக்குப்பிறகு குளித்து சாப்பிட்டபின் மழை விட்டு தூவானமாக இருக்கும் நேரம் வாழ்க்கையின் அதீத சந்தோஷ கணம்.

மூன்றாவது வீட்டில் சங்கரும் அடுத்த வீட்டு பாபுவும் வாசலுக்கு வந்திருப்பார்கள்.

அம்மா சாப்பிட்டு விட்டு கண்ணயரும் வேளையானதால் கொஞ்சம் தைரியமாக வாசலுக்கு வரலாம். சத்தமில்லாமல் மாடிப்படி அருகே இருந்து விகடன் குமுதம் பத்திரிகை பேப்பர்களை எடுத்து கிழிப்பேன், கப்பல் பண்ண!

கல்கண்டு தோதுப்படாது. அம்மாவை நம்ப முடியாது. திடீரென்று போன ரெண்டு வார கல்கண்டை எடுத்துப்படிக்க ஆரம்பிப்பாள்.

“அதில் என்னதான் இருக்கிறது என்று ஒரு ஐந்தாம் கிளாஸ் அரைப்பரிட்சை லீவில் எடுத்துப்பார்த்தேன்.
கேள்வி பதில் பகுதி கண்ணில் பட, படித்தேன்.

“உலகத்திலேயே சிறந்த அறிவாளி யார்?”

“நான் தான்!”

இந்தப்பதிலை அளித்த தமிழ்வாணன் ஏனோ எனக்கு மிகவும் பிடித்துபோனார். பின்னாளில் அவர் எழுதினதை தேடித்தேடிப்படித்திருக்கிறேன்.

தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னும் பின்னும் கேப் துப்பாக்கி வைத்து நாங்கள் விளையாடும்போது போலிஸ் டீமின் தலைவன் சங்கர்லால் தான். எட்டாவதிலோ என்னமோ ஒரு மதியம் அம்மாவை டீ போட்டுத்தரசோன்னேன்.

“என்ன இன்னிக்கு எந்த ராஜா பட்ணம் போறாரு! டீ கேக்கற?”

”குடும்மா! அதெல்லாம் உனக்கு ஏன்?”

கடைசி ரூமில் அப்பாவின் நாற்காலியை எடுத்துப்போட்டுக்கொண்டு எதிரே மோடாவை வைத்து காலைத்தூக்கி அதில் போட்டுக்கொண்டு டீ குடித்தவாறே தில்லானா மோகனாம்பாள் படித்தேன். சங்கர்லாலுல் மாது கொடுக்கும் டீயை வைத்துக்கொண்டு அப்படித்தானே உட்கார்ந்து ”பருத்த புத்தகத்தை” படிப்பார்! அப்போது எங்கள் வீட்டில் இருந்த நான் படிக்கும் லெவல் ’பருத்த புத்தகம்” தில்லானா தான்!

தமிழ்வாணன் எங்களை அந்த வயதில் அப்படி ஆக்கிரமித்திருந்தார்.

அவர் கதைகளின் தலைப்புக்கள் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் போல அபாரமாக இருக்கும். இன்னொரு செருப்பு எங்கே, மணிமொழி என்னை மறந்துவிடு, மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி, மர்ம மனிதன், கருகிய கடிதம், உன் மனம் காயோ? பழமோ?, மீனழகி, அப்புறம் பிடி 22..!

இந்தக்கடைசி கதை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

இந்த பிடி 22 ஜோசப் ஹெல்லரின் Catch 22க்கு எந்த விதத்திலும் ஸ்நானப்ராப்தி கிடையாது இது ஒரு மல்யுத்தப்பிடி. தமிழ்வாணனால் கண்டு பிடிக்கப்பட்டு மல்யுத்த மான்யுவலில் சேர்த்தார்களோ என்னமோ தெரியாது! தமிழ்வாணனின் சொல்படி ஒரு மல்யுத்த வீரன் இந்தப்பிடி 22 ஐ தன் எதிரிக்குப்போட்டுவிட்டால், போடப்பட்டவன் உயிரோடு தப்பிக்கவே முடியாது.

மல்யுத்தத்தின் கடைசி வார்த்தை இந்த பிடி 22. உலகத்திலேயே இந்த பிடி 22 தெரிந்தவர்கள் வெகு சிலரேதான். அதில் ஒருவர் தமிவாணன்.

Unbeatable என்று நான் கருதுவது, மேலே சொன்ன தமிழ் வாணனின் “பிடி 22” என்கிற தொடர் கதை. தமிழ்வாணன் துப்பறியும் இந்தகதையில் அவர் ஜப்பான் போயிருப்பார். அங்கு ஒரு கிளைமாக்ஸ் சண்டையில் வில்லனின் பிரதான கைக்கூலி, அதுதான் அந்த மல்யுத்த சாம்பியன், எதிர்பாராத ஒரு க்ஷணத்தில் தமிழ்வாணனை ஏமாற்றி அவருக்கு பிடி 22 போட்டு விடுவான். ஞாபகம் இருக்கட்டும், முன்பே சொன்னேன், இந்தப்பிடி 22 போடப்பட்ட ஆசாமி தப்பிக்கவே முடியாது.

ஆனால் அந்த வாரம் தொடரும் போட்டு விட்டார்,
எங்களுக்கு எல்லாம் மூச்சே நின்று விட்டது.

‘அய்யோ! தமிழ்வாணன் எப்படி தப்பிப்பார். அவருக்கு என்ன ஆகுமோ என்று அந்த வாரம் அடிக்கடி நகத்தைக்கடித்துக்கொண்டும், பிருந்தா டீச்சர் கிளாஸில் கவனிக்காமல் ஸ்கேலால் அடி வாங்கிக்கொண்டும், பி டீ பீரியட் கிரிக்கெட்டில் குண்டு ரமணியின் போலிங்குக்கெல்லாம் அவுட் ஆகிக்கொண்டும் ஒருவித அவஸ்தையில் அடுத்த இதழ் கல்கண்டுக்காக தவமிருந்தோம்.

அது வெளியான அன்று ராஜன் காலை எட்டு மணிக்கே எங்களை ஸ்கூலுக்கு வரச்சொல்லிவிட்டான். எட்டு பத்துக்கு அவசர அவசரமாக அவன் வந்து, நெய் மரத்தடியின் நிழலில், அலுமினியப்பெட்டியை நான் பிடித்துக்கொள்ள, அவன் அதைத்திறந்து கல்கண்டை எடுத்து, மூச்சைப்பிடித்துக்காத்துக்கொண்டிருந்த நாங்கள் தலை மேல் தலை இடித்தவாறே படித்தோம்.

சி ஐ டி தமிழ்வாணன் இறந்துவிட்டாரா அல்லது தப்பித்தாரா?

அவர் இதை solve செய்திருந்த முறைக்கு ” நோபல் எல்லாம் உறை போடக்காணாது!! ரெண்டு வரி இடைவெளி விட்டு விட்டு எழுதுகிறேன், உங்களுக்கும் சஸ்பென்ஸ் effect கொடுப்பதற்காக!
|
|
|
|
தமிழ்வாணன் அந்த பிடி 22 இலிருந்து தப்பிவிடுவார். எப்படி?

அவர் அந்த வில்லனுக்கு பிடி 23 போட்டுவிடுவார்!

ப்ளீஸ் நம்புங்கள்!

பிடி 23 போடத்தெரிந்தவர்கள் உலகின் ரெண்டே பேர்தானாம். ஒருவர் சங்கர்லால். இன்னொருவர்…….
.
அஃப் கோர்ஸ், தமிழ் வாணன் தான்!

தமிழ்வாணன் இலக்கியம் படைத்தார் என்றோ சாகாவரம் பெற்ற கதைகள் எழுதினார் என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் என் தலைமுறைக்கு தமிழ் எழுத்தை படு சுவாரஸ்யமாக்கி எங்களுக்கு தமிழ் வாசிப்பை சுவாசம்போல பின்பற்றச்செய்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அவரை சந்திக்க முடியாமல் போனது எனக்கு மிகப்பெரிய வருத்தமே.

சில வருடங்களுக்கு முன்னர் ”தமிழ்வாணனின் கேள்வி பதில்கள்” தொகுத்து புத்தகமாக வெளியிடப்பட்ட நிகழ்ச்சிக்குப்போயிருந்தேன். அன்புடன் வரவேற்ற லேனா தமிழ்வாணன், கை பிடித்து விஜாரித்த ரவி தமிழ்வாணன் ஆகியோரைச்சந்தித்து பேசியதில் அந்த வருத்தம் கொஞ்சமே கொஞ்சம் குறைந்தது.

என் வாழ்க்கையின் மிக இனிமையான சந்தர்ப்பங்கள் பலவற்றைக்கொடுத்தவர்களில் தமிழ்வாணன் பெயர் டாப் டென்னில் உண்டு என்பதை உரக்கச் சொல்லுவேன்.

என்னைக்கடந்துபோகாதவர்கள் – தமிழ்வாணன்

One Comment on “என்னைக்கடந்துபோகாதவர்கள் – தமிழ்வாணன்/ஜெயராமன் ரகுநாதன்”

  1. அருமையான ‌பதிவு. தமிழ்வாணனை நேசித்து சுவாசித்த பரம்பரைக்கு தெரியும் அவர் அருமை.

Comments are closed.