
நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு பொதுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் அதுதான் இந்த உலகம் அமைதியோடு வாழ்ந்து சிறக்க உதவும் !
O
Just as people should act morally aக்ஷnd responsibly as laid down in the codes of all religions, nations have to live in a like manner. They have to realize that their conduct is responsible for the peace and well being of the world.
எப்படி தனிமனிதர்களுக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் எல்லா மதங்களிலும் வகுக்கப்பட்டுள்ளதோ, அதுபோல உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு பொதுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் அதுதான் இந்த உலகம் அமைதியோடு வாழ்ந்து சிறக்க உதவும் !
O
யோகி உலகநாடுகளுக்கு வழங்கியுள்ள செய்தி இது…..
O
தினமும் ஆங்கிலப் பத்திரிகை படித்து உலக நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தவர் யோகி. உலக அமைதியையும், உலக நாடுகள் நல்லிணக்ககத்தோடு வாழ்வதையும் அவர் மிகவும் விரும்பியவர்.
O
இந்த உலகம் அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் இருந்தால்தான் தனிமனிதன் அன்போடும் அமைதியோடும் வாழ முடியும்.
அத்தகையச் சூழலில்தான் ஆன்மிகம் வளர்ந்து செழிக்கும்
O
இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, இந்த பிரபஞ்சம் ஒற்றை பேரிருப்பாகத் தான் உள்ளது. எதுவும் தனித்து இல்லை.
O
ஏதாவது ஒருபகுதி அமைதியின்மையில் பாதிக்கப்பட்டால் மொத்த இருப்பையும் அது பாதிக்கும்
O
ஆகவே எந்தச் சூழலிலும் உலக அமைதி கெட்டுவிடாமல் நாம் காத்து நிற்க வேண்டும்.
O
அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் தெய்வீகப் பண்புகள். அவை தனிமனிதனிடமும், ஒவ்வொரு நாட்டிடமும் பாதுகாக்கப்பட வேண்டியவை
என்பதை யோகி வலியுறுத்துகிறார்.
O
அத்தகைய பொறுப்புணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. இதை நாம் உணர வேண்டும் என்பதை யோகி முன்னிறுத்துகிறார்
O
அமைதியும்
நல்லிணக்கமும்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
உலக நாடுகளுக்குள்ளும் மலர
யோகியின் நாமத்தால் பிரார்த்திப்போம் !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
O
மீள் பார்வை -29/3/2018
