பேராசை பெரும் அனர்த்தம்/ஸ்ரீதர்-சாமா

மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் மஹேஸ்வரருக்கும் பார்வதி அன்னைக்கும் இடையே நடந்த உரையாடலில் இப்படி வருகிறது.

“உமையவளே! பூமி முழுவதையும் ஒரு அரசன் தன் குடையின் கீழ் ஆள்கிறான் என்று வைத்துக்கொள். அவனும் கூட ஒரே ஒரு நாட்டில்தான் வசித்துக் கொண்டிருப்பான். அந்த நாட்டிலும் கூட அவன் இருப்பது ஒரே ஒரு நகரத்தில்தான். அந்த நகரத்திலும் கூட ஒரே ஒரு வீடுதான் அவன் தங்குமிடம். அந்த வீட்டிலும் கூட ஒரு அறையில்தான் அவன் புழங்கிக் கொண்டிருப்பான். அந்த அறையிலும் ஒரு படுக்கையில்தான் அவன் படுக்கப் போகிறான். அந்தப் படுக்கையும் கூட அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. பூமி முழுவதும் தன்னுடையது என்று எண்ணும் மனிதன் அனுபவிப்பது இறுதியில் இதுதான் ஆகையால், பெரும் செல்வத்தை ஈட்டி, அதில் பற்றுக் கொண்டு வாழ்பவன் அனுபவிப்பதோ, அதில் ஒரு மிகச் சிறிய பகுதியைத்தான்.”