
O
” யோகி ராம்சுரத்குமார் ” என்பது இந்தப் பிச்சைக்காரனின் பெயரல்ல. அது என் தந்தையின் பெயர் என்ற பரவச நிலையில் பேசியவர் யோகி.
O
இந்தப் பிச்சைக்காரன் பெயர் தெரியுமா? எனக் கேட்டு ” யோகி ராம்சுரத்குமார் ” என்று பதில் சொல்ல வைத்த யோகி, சில நேரங்களில் பரவச நிலையில் ” தான் ” என்னும் பாவனையும் நீங்கிய நிலையில் தனக்கு எந்த அடையாளமும் இன்றித் திகழ்ந்துள்ளார்.
O
1952 லேயே பப்பா ராமதாசரின் திருவடிகளில் இந்தப் பிச்சைக்காரன் இறந்து விட்டான். இங்கே எதுவுமில்லை. ஒரு பேராற்றல் இவனை நடத்திச் செல்கிறது. அதுவே இங்கு செயல்படுகிறது என்று கூறிய யோகி, ” நான் ” அற்ற நிலையில் இயங்கினார்.
O
ஞானிகளை நாம் அடையாளப் படுத்த முடியாது. எல்லா அடையாளங்களையும் துறந்தவர்கள் அவர்கள்.
O
” எல்லாம் இழந்த நலம் சொல்லாய் சுரபூபதியே ” என்று அருணகிரி நாதர் பரவசமுற்றிருந்த நிலையையே யோகியும் வெளிப்படுத்தி நின்றார்.
O
யோகி அனைத்தும் கடந்து நின்ற முடிவிலி (Infinite). கால தேச வர்த்தமானம் கடந்து நின்ற சாசுவதம் – என்றுமானது – ( Eternal ). அழிவற்றவர் யோகி
O
யோகி நேற்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார். நாளையும் இருப்பார். அவரது பேரரருள் எப்போதும் வழிந்த கொண்டிருக்கிறது. யார் எப்போது வேண்டுமானாலும் அவரை நெருங்கலாம். யோகி ராம்சுரத்குமார் என்னும் திருநாமத்தால் அவர் அருகில் செல்லலாம்.
O
Dont limit this beggar with this physical frame. He is everywhere ….
இந்தப் பிச்சைக்காரனை இந்த உடலாகக் கருதி விடாதீர்கள்..அதையும் கடந்து எங்கும் என்றும் இருப்பவன்..
என்று தெளிவாகக் குறிப்பிட்டார் யோகி.
O
யோகி இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் ஆனவர்…
O
யோகியின் இந்த அகண்ட தரிசனம் நம்மை ஆழப்படுத்தும்… அகலப்படுத்தும்..
O
யோகி ஒரு பேரனுபவத்திற்கான பெரும் அழைப்பு ! நாமம் அதற்கான பாதை…
O
நாமம் பாடும் இனிய சுவையில் நாவும் மனதும் மயங்கி என்றும்
தேகப்பற்று அற்ற அந்த தேவராகலாம்…வாரீர் !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
