
காது கேளாதவன்
செவிப்புலன் வேண்டும்
என்று மன்றாடினான்
கண் தெரியாதவன்
கட்புலன் வேண்டும்
என்று மன்றாடினான்
ஊனமுற்றவன் கால்கள்
வேண்டுமென்று மன்றாடினான்
இதயக்கோளாறு உள்ளவன்
மாற்று இதயம் வேண்டுமென
மன்றாடினான்
பசியிலிருப்பவன்
உணவிற்காக மன்றாடினான்
ஏழையொருவன்
வறுமை ஒழிய மன்றாடினான்
விவசாயி ஆற்று வெள்ளத்தில்
பயிர் காக்க மன்றாடினான்
தேர்வில் முதலிடம் பெற
படிப்பவன் மன்றாடினான்
அரசியல்வாதி
முதல்வராக மன்றாடினான்
கவிதை நூல் விற்றுத்தீர
கவிஞன் மன்றாடினான்
நோய்மை தீர நோயாளி
மன்றாடினான்
எத்தனை மன்றாடுதல்கள்
எனக் குழம்பிய இறைவன்
குவிந்த பிரார்த்தனைகளிடம்
மன்றாடிக்கொண்டிருந்தான்.
