ஆரோக்கியம் பேணுங்கள்/மருத்துவர் ம.ஜீவரேகா

இந்த இரண்டு வருடங்களில்
பரவலாய் நிறைய அகால மரணங்களைக் கேள்விப்படுகிறோம்.
அதுவும் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத இளம் வயதினர் திடீரென்று மாரடைப்பு வந்து இறக்கிறார்களென்பது எத்தனை கொடுமையான விஷயம்.
மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்தலென்பது மிகவும் கொடுமை.

யாராயிருந்தாலும் அவ்வப்போது தங்களின் உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

எல்லோரிடத்தும் அன்பாய் இருங்கள்.

தேவையற்ற கோபம்,வன்மம் ஆகியவற்றைத் தவிருங்கள் ,

மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்

நாற்பது வயதுக்கு
மேற்பட்டவர்கள் உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைபிடியுங்கள்,

உடல் எடையினைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

சீரான உடற்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்,

இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,
கொழுப்பின் அளவு போன்றவை எப்போதும் கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் .

இவ்வுலகில் உயிர்தான் பிரதானம்,அது இல்லையெனில் எதற்கும் ஒரு அர்த்தமுமில்லை.
அரிதினும் அரிதான உயிரைப் பாதுகாப்போம்.ஆரோக்கியமாய் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.