லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

கனவும் ஞானமும்!

எதிரிப் படைகளிடம் தோற்று ஓடிய ஜனகர் ஊரை விட்டே துரத்தப் பட்டார். நடந்து
நடந்து அந்த நாட்டின் எல்லையைத் தொட்டார் ஜனகர்.
பசி, தாகம், களைப்பு என்று அவரை நடக்க விடாமல் முடக்கியது. கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது அவருக்கு.
அப்போது, எதிரில் சிலர் கையில் உணவுத் தட்டுடன் வந்து கொண்டிருந்தனர்.
அவரைக் கண்டு பரிதாபப்பட்டு, “அங்கே அன்ன தானம் நடக்கிறது. போய் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றனர்.
அவரும் வேக வேகமாக அங்கு சென்றார். உணவு வழங்கப் பட்டது. ஆர்வமாக ஒரு கவளத்தைக் கையிலெடுத்தார் ஜனக மஹாராஜா. வாயில் போடப் போகும் போது, அருகில் சண்டை போட்டுக் கொண்டிருந்த இரண்டு காளைகள் தள்ளியதில் உணவுத் தட்டு கீழே விழுந்தது.
பதறி கண் விழித்தார் ஜனகர். அது கனவு என்று புரிந்தது. ஆனால், அது முதல் அவரது நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டது.
எதையோ பறி கொடுத்தாற் போலிருந்தார். “அது உண்மையா? இது உண்மையா” என்ற கேள்வி அவரை ஆட்டிப் படைத்தது.
மறு நாள் சபையில், அவரது போக்கைக் கண்டு மந்திரிகள் ராணியிடம் சென்று “அரசருக்கு மனதில் ஏதோ சஞ்சலம் இருக்கிறது. எங்களால் நேரடியாகக் கேட்க இயலவில்லை” என்று முறையிட்டார்கள்.
ராணியும் அதனை ஆமோதித்து, ஆம். நானும் கவனித்துக் கொண்டு வருகிறேன். மதி மயங்கிய நிலையில் ஒரு குழப்பத்துடன் இருக்கிறார் மன்னர். இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னார்.
மறு நாள், அச்சபைக்கு ஒருவர் வந்தார். அவர் நுழைந்தவுடன், அவரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். அவர் உடல் எட்டு இடங்களில் வளைந்து அஷ்ட கோணலாக இருந்தது.
அனைவரும் கேலி செய்தனர். என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது என்னை இல்லை” என்றார் அவர்,
உடனே அவர்கள், “நீங்கள் வந்த காரணம் என்ன?’ என்றனர்.
“அவரோ, நான் மன்னனின் மன சஞ்சலத்திற்குத் தீர்வு சொல்ல வந்தேன்” என்றார்.
இது எப்படி இவருக்குத் தெரிய வந்தது என்று அவர்கள் ஆச்சரியப் பட்டனர்.
ஜனகர் வந்து அவரை வரவேற்றார்.
அவரிடம், “உன் கனவில், இந்த சபை, மந்திரி, ராணி, சொத்து, பதவி, பட்டம், பணம் எல்லாம் இருந்ததா?” என்றார்.
“இல்லை” என்றார் ஜனகர்.
“அங்கு கண்ட தோல்வி, வலி, களைப்பு, தாகம், பசி எல்லாம் இங்கு இருக்கா?’ என்று கேட்டார் அஷ்டவக்கிரர்.
“இல்லை” என்றார் அவர்.
அப்போ, அதுவும் உண்மை இல்லை. இதுவும் உண்மை இல்லை” என்றார் அஷ்டவக்கிரர்.
“அப்போ எது உண்மை?” என்று கேட்டார் ஆச்சரியத்துடன் ஜனகர்.
உனக்குள் இருந்து இது எல்லாவற்றையும் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும் உன் ஆத்மாதான், மன சாட்சிதான் உண்மை” என்றார் அவர்.
உடனே அவரை நமஸ்கரித்து “என்னை தங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார் ஜனகர்.
பதில் ஏதும் பேசாமலிருந்தார் அஷ்டவக்கிரர்.
அப்போது, ஒருவர் சபைக்குள் நுழைந்தார். என் மகனின் உபநயனத்திற்குப் பொருளுதவி வேண்டும் என்று பிட்ஷை கேட்டார்.
தர்மப் பிரபுவான ஜனகர், ஏதும் பேசாமலிருப்பதைக் கண்ட அஷ்டவக்கிரர், இத்தனை பொன்னும் பொருளும் இருக்கே, தர்மம் செய்” என்றார்.
அப்போது, ஜனகர்,”நான், தங்களுக்குச் சரணாகதி செய்து விட்டேன். இனி “நான்” என்பது இல்லை. நான் எப்படி தர்மம் செய்ய முடியும்?” என்றார்.
அதனைக் கேட்டு மகிழ்வுற்ற அஷ்டவக்கிரர், “நீ ஜெயித்து விட்டாய்” என்று சொல்லி ஜனகரை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.
ஒரு சிறு அறை. அங்கு மாணவர்கள் பத்து பேர் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திடீரெனவிளக்கு அணைந்து விட்டது.கும்மிருட்டு. அருகில் யார் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால், அவரவருக்குத் தன்னைத் தெரியுமே!
அதற்கு எந்த விளக்கும் தேவையில்லையே. அது தெரிவது உள்ளிருக்கும் ஜோதியால். அந்த சித் ஸ்வரூபம் இருப்பதால், உன்னை நீ தெரிந்து கொள்கிறாய். நீ பார்க்கிறாய். நீ சுவைக்கிறாய். நீ முகர்கிறாய்.
இதைத்தான், நான் ஆத்ம ஸ்வரூபமாகவே உனக்குள் நீயாகவே இருக்கிறேன்” எனும் பொருள் பட “அஹம் ஆத்மா குடா கேஸ” என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். இதையே,உத்தவர்: கிருஷ்ணா நீ யாரு?
கிருஷ்ணா: நீதாம்ப்பா. நீதான் நான்.
நீ உனைப் புரிந்து கொண்டால், என்னைப் புரிந்து கொண்டு விட்டாய்” என்று பாகவதத்தில் சொல்கிறார்.
இப்படி, ஓயாமல் பிரகாசித்துக் கொண்டே இருக்கிற இந்த “சித்” தை அறிந்து கொண்டால் என்ன கிடைக்கும்?

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்”

Comments are closed.