
மொட்டை மரச்சுளுக்கை
மெழுகித் திரையில்
கட்டங்கள் இட்டுக்
கலரடித்துக் காட்டினான்
சித்திரக்காரன் !
……………..
சாம்பலான வினாடித்துகளில்
ஜனித்து மரித்த
ஒலியை,
குருட்டிருளில்,
கொக்குப் போல்,
இரும்புக் கம்பி
கவ்வி,
சத்தக் கலவையை
அன்னம் போல் பிரித்து
மின் விசைச் சுருளாக்கி
உயிரூட்டி
ஓசையாய் உலவவிடும்
பிறக்கும் வினாடிக் கோடித்துகளில்!
இறந்த, நிகழ், எதிர்
காலக் கணக்கு,
அணுவில் அணுவாய்
அகண்டத்தில் அகண்டமாய்
எப்படி ஆயினும்
உண்டு ;
ஆனால்
முளை இலை கிளை மலர்
காய் கனி வேர் இவை
காணக்
கண் இரண்டும்
ஒன்று பின்னும்
மற்சென்று முன்னும்
சுழன்றால்
சித்திரத்தின் உயிர்தெரியும்.
………………
நீ
கம்பியைக் காட்டிலும்
குருடா?
மதிப்பு-1/ தி சோ வேணுகோபாலன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “மதிப்பு-2/தி சோ வேணுகோபாலன்”
Comments are closed.