திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

வணக்கம் முகநூலில் உங்கள் அனைவரையும் சந்தித்து நாட்களாயிற்று.இப்போதெல்லாம் மாதம் 15 நாட்கள் சென்னையில் சாந்தி அபார்ட்மென்டிலும் மீதி நாட்கள் கோயம்புத்தூரில் மகன் சங்கர் வீட்டில் பேரன் சமர்த்துடன் தங்குவது வழக்கமாகிவிட்டது.

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

தெருவும் அமைதியாக இருக்கும். மரங்கள் நிறைந்த தெரு வீடுகளின் வாசலில் மரங்களும் செடிகளும் உள்ளன.விதவிதமான பறவைகளின் சப்தங்கள் தெருவை நிறைத்திருக்கும்.குழந்தைகளின் குரலும் சூழ்ந்திருக்கும்.தெருவின் ஒரு கோடியில் மைதானத்தின் வேலி இருப்பதால் வாகனப் போக்குவரத்து இல்லை.

தெருவில் இரண்டு சாரியிலும் சேர்த்து‌ மொத்தம் முப்பது வீடுகள்.சங்கரின் வீடு கோடியிலிருந்து இரண்டாவது வீடு. தெரு. வடக்கு தெற்கு இவன் வீடு மேற்கு பார்த்திருக்கிறது.

நுழைந்ததும் பெரிய ஹால் அதில் கிழக்கு மேற்காக சுவரோரம் பெரிய ஜன்னலுக்கு கீழே திவான் . 6/2.1/2 அடியில் உயரம் மெத்தையை சேர்த்து இரண்டரை அடி .பகல் வேளைகளில் உட்கார்ந்து பேசவும் T V பார்க்கவும் பயன்படும்.இரவில் தரையில் படுக்க முடியாத என்னைப் போல் வயதானவர்கள் பகலில் சிறிது நேரம் மற்றும் இரவில் தூங்கவும் வசதியானது.

நான் அதில்தான் விரும்பி படுப்பேன்.வசதியாக இருக்கும்.சம்பவத்துக்கு வருகிறேன்.போனமாதம் போயிருந்த போது ஒரு நாள் இரவு பிருந்தா ஹாலில் தரையில் படுக்க நான் திவானில் படுத்திருந்தேன். நல்ல தூக்கம் ஏதோ கனவு திடிரென்று சப்தம் கேட்டது பார்த்தால் நான் கீழே விழுந்து கிடக்கிறேன்.

நல்ல வேளை யாரும் பார்க்க வில்லை.சங்கர் பூரணி ரூமிலும் பிருந்தா ஹாலிலும்

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். மணி 2.

நான் மெதுவாக எழுந்து கை கால்களை நன்றாக உதறிக்கொண்டேன்.நல்லவேளையாக அடி எதுவும் படவில்லை. சிரிப்பு வந்தது கொஞ்ச நேரம் தனியாக சிரித்தேன். காலை அவர்களிடம் சொன்னால் முதலில் சிரிப்பார்கள் பிறகு அடி எதுவும் இல்லையே என்று கேட்பார்கள்.

தூக்கம் கலைந்து விட்டது.எப்படி விழந்திருப்பேன் என்று யோசித்தேன். இத்தனை வருடங்களில் நான் இப்படி தூக்கத்தில் உருண்டு விழுந்ததில் லை. வலது கால் பாதம் மட்டும் லேசாக வலித்தது. யோசித்துக்கொண்டே தூங்கி விட்டேன்.

காலை பிருந்தா எழுந்து ராத்திரி பூரா தூக்கமே இல்ல என்றாள். நான் விழுந்த சம்பவம் இவளுக்கு தெரிந்திருக்குமோ ? இருக்காது அப்படி என்றால் அப்போதே ஏதாவது சொல்லி யிருப்பாளே.

“பிருந்தா நான் ராத்திரி பெட்டிலிருந்து கீழே விழுந்து விட்டேன்’ என்றவுடன் “ஐயோ அடி எதுவும் படவில்லையே” என்றாள்.

“இல்லை பிருந்தா”

என்றேன்.

ஊர்லயே மெட்டல் ஓரமா ஒண்டின்டு படுப்பேள்.அதே பழக்கம் இங்கேயும் அதான் விழுந்திருக்கேள்.கொஞ்சம் இடைவெளி விட்டு விழுந்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருந்த போது சங்கரும் பூரணியும் வெளியே வந்தவர்கள் பிருந்தா சிரிப்பதைப் பார்த்து என்னம்மா? என்னாச்சு? என்றான்.

பிருந்தா “அது ஒன்னுமில்லை அப்பா திவான்லேர்ந்து கீழ் விழுந்துள்ளார் டா” என்றாள்.நான் இன்னும் திவானிலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்

ஓடி வந்து அருகில் உட்கார்ந்து என்னப்பா? எப்ப? எப்படி விழுந்தே ? என்றான். பூரணி பக்கத்தில் வந்து நின்று “அச்ச்சோ என்ன ஆங்கிள் ஏன்” என்றாள்.

அது ஒன்னுமில்லை தூக்க கலக்கத்தில் ஜன்னல் பக்கம் புரளறதா நினைச்சுண்டு இந்த பக்கம் புரண்டுட்டேன் போல இருக்கு என்றேன்.

இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரே சமயத்தில் சிரிக்க ஆரம்பித்தார்கள்.நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு சிரித்தேன்.

பல் தேய்த்து பூரணி காபி கொடுத்தாள்.அப்போது பேரன் சமரத் எழுந்து வந்தான்.பிருந்தா அவனிடம் “சமர்த் தாத்தா ராத்திரி திவான் தேர்ந்து கீழே விழுந்துட்டார்” என்றாள்.

அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என்ன தாத்தா என்றான்.

இல்லைடா சமர்த் ராத்திரி தூங்கறச்சே திவான் தேர்ந்து விழுந்துட்டேன் என்றேன். எப்படி என்றான். நான் திவானில் படுத்து இப்படி என்று மறுபடியும் பத்திரமாக விழுந்து காண்பித்தேன். அவன் முறைக்கு அவனும் சிரித்தான்.

அங்கு வலி தெரியவில்லை நடந்தேன்.

ஒரு வாரம் இருந்து விட்டு சென்னை வந்தேன் அடுத்த வாரம் ஆந்திரா ராஜம் பேட்டையில் பெரியப்பா பேரன் குருசரனுக்கு கல்யாணம் போனவாரம் என் தம்பி மகள் டாக்டர் அஞ்சனாவுக்கு ஆரணிக்கு பக்கத்தில் சத்திய விஜய் நகரில் நிச்சயதார்த்தம் இரண்டுக்கும் அவசியம் போகவேண்டியிருந்ததாலும்,வலி அவ்வளவாக இல்லாததாலும் ஆர்த்தோ டாக்டர் பார்ப்பதை ஒத்திப்போட்டேன். அவர் ஒரு வேளை X Ray எடுத்து Fracture என்று மாவு கட்டு போடச்சொன்னால் எல்லோரும் விஜாரிப்பார்களே என்று யோசித்து தள்ளி வைத்தேன்.

வியாழன் நிச்சயதார்த்தம் முடிந்து வந்தேன். சனிக்கிழமை சங்கருடன் சைதாபேட்டை BORA HOSPITAL மத்யானம்12.30 மணிக்கு போனோம். கவுண்டரில் 500/- பணம் கட்டி உட்கார்ந்து கொண்டேன். டாக்டர் கூப்பிட்டார் ஸ்டூலில் உட்கார்ந்து காலை தூக்கி காட்டினேன். எப்படி என்றான் விபரம் சொன்னேன் X Ray எடுங்க என்றார் வெளியே வந்து மறுபடியும் கவுண்டரில் 500 கட்டி நர்ஸ் வழிகாட்ட XRay ரூமுக்கு போனேன்.

நர்ஸ் ஒரு ஸ்டூலைப் போட்டு “மெதுவா ஏறுங்கய்யா” என்றாள். ஏறி உட்கார்ந்தேன் காலை நீட்டுங்க என்று சொல்லி மிஷினை அட்ஜெஸ்ட் செய்து ஃபிலிம் கொண்டு வந்து இரண்டு படம் எடுத்தாள்.கொஞ்சம் இருங்க என்று உள்ளே போய் சரி பார்த்து விட்டு வந்து என் கையைப் பிடித்து மெதுவா இறங்குங்க என்றாள்.இறங்கி வெளியே சேரில் உட்கார்ந்து கொண்டேன்.

டாக்டர் கூப்பிட்டார் உள்ளே போனேன் நர்ஸ் X Ray கொண்டு வந்து ஸ்டாண்டில் போட்டு லைட்டை போட்டு வைத்தாள்.டாக்டர் அதை பார்த்தார் நான் டாக்டரைப் பார்த்தேன். +2 ரிசல்ட் எதிர்பார்க்கும் பையன் மனநிலையில் இருந்தேன்.

டாக்டர் கொஞ்ச நேரம் கழித்து என்னைப் பார்த்து No fracture இது sprain தான் வீட்டுல grape band இருக்கா நான் மலர்ச்சியுடன் இல்லை என்றேன் .

மாத்திரை எழுதி தரேன் 5 நாள் காலை நைட் சாப்பிடுங்க என்றார். தேங்க்ஸ் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியே வந்தோம்.

நர்ஸ் பக்கத்து ரூமில் உட்காரவைத்து சங்கரை பார்த்துக்க என்று சொல்லி கட்டி விட்டு கிளிப்போட்டு விட்டாள்.

வெளியே வந்து மறுபடியும் கவுண்டரில் 689/- கட்டி மாத்திரை வாங்கிக் கொண்டோம்.ஒரு மாத்திரை சாப்பாட்டு முன்ன இன்னொன்னு சாப்பாட்டுக்கு அப்பறம் என்றாள்.

வெளியே வந்து சங்கர் வலது கால் செருப்பு கிளிப் தளர்த்தி வண்டியில் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

மெதுவாக படியேறி வந்தேன் பிருந்தா கவலையுடன் கேட்டாள். “Fracture இல்ல பிருந்தா.” அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

நான் Easy chairல் உட்கார்ந்து சங்கரை இரண்டு போட்டோ எடுத்து FB யில் பதிவு போட்டு லைக், க்ஷேர், கமெண்ட்டுக்கு கால் கட்டுடன் காத்திருக்கிறேன்.

8You and 7 others

9 Comments