உ.வே. சாமிநாதையர்/புதியதும் பழையதும்
தமிழ்நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுள்ளே பூமி தேவிக்கு ஹ்ருதய கமலமென்று சிறப்பிக்கப் பெறுவது திருவாரூர். சிவபெருமான் புற்றிடங்கொண்டு பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கப் பெற்றதாகிய பெருமையை உடையதும் அதுவே. அங்கே திருக்கோயிலில் ஸ்ரீ முசுகுந்த சக்கரவர்த்தியால் தேவலோகத்திலிருந்து கொணர்ந்து பிரதிஷ்டை செய்யப்பெற்ற ஸ்ரீ தியாகேசப்பெருமான் விளங்குகிறார். அம்மூர்த்திக்குத்தான் …
>>