நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …19/அழகியசிங்கர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது. இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.
முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும்.
திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும். ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். ஒன்று விற்க முயற்சி செய்வேன். அல்லது நானே வாங்குவேன். இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும். ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.
புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது. ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று.
அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார். இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது. ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
‘இந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.’
புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன்.

>>

ஏழு புத்தகங்களின் அறிமுகம்/அழகியசிங்கர்

இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஏற்கனவே பிறமிளை பற்றியும், ஞானக்கூத்தன் பற்றியும் புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ என்ற புத்தகத்தை 2018ஆம் ஆண்டு கொண்டு

>>

க.நா.சு: ஓர் இலக்கிய இயக்கம்.

பிரஞ்சு நாவல் இலக்கிய உலகத்திலே
உருவத்திற்கும் நடைக்கும் சிறப்பான
முக்கியத்துவம் உண்டு .இதில் முக்கிய
மான நாவலாகக் கருதப்படுவது “குறுகி
ய வழி” ஸ்டெந்தால்,பால்ஸாக்,ஃப்ளோ
பேர்,முதலிய மேதைகளுக்கு இணையா
னவர் “குறுகிய வழி” எழுதிய ஆந்த்ரே
ழீடு என்பது உண்மை.
நாவல் என்றால் என்னென்ன இலக்கண
ங்கள் அவசியம் என்று பண்டிதர்கள் சொ
ல்கிறார்களோ அத்தனை இலக்கணங்க
ளையும் மீறி அற்புதமான நாவலை நமக்
குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் ஆந்த்
ரே ழீடு.நாட்குறிப்புகள்,கவிதை,இலக்கிய
சர்ச்சைகள் எல்லாவற்றையும் புகுத்தி
இலக்கணப் பண்டிதர்களைத் திணற அடி
த்திருக்கிறார்.உலக இலக்கியங்களிலு
ள்ள எல்லா கௌரவங்களையும் அவர்தம்
ஆயுட்காலத்திலேயே பெற்றவர்.ஒரு முப்
பது நாற்பது வருஷங்கள் பிரஞ்சுமொழி
யில் தலைசிறந்த ஆசிரியராக ஸ்தானம்
வகித்தவர்.அவருக்குப் போட்டியே இல்
லை.நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது
உலகில் அதுபற்றி ஆனந்திக்காத இலக்
கிய ரசிகர்கள் இல்லை என்றே சொல்ல
வேண்டும்.அவர் எழுதிய பல நூல்களை
நாவல் என்றே சொல்ல முடியாது.ஆனால்
“குறுகியவழி” என்ற நூல்தான் அவர் எழு
திய நூல்களிலே நாவல் என்ற பதத்தின்
லட்சிய உருவம்.
ழீட் நடையை மொழிபெயர்ப்பது சிரமமா
ன காரியம் என்பதை நன்கறிவேன்.
எட்டியவரையில் செய்ய முயன்றிருக்கி
றேன்.எந்த மொழிபெயர்ப்புமே ஓர் அள
வில் குறிக்கோளை எட்ட முடியாதுதான்.
ஓரளவிற்கு மூல நூலில் உள்ள சாராம்சம்
வந்துவிட்டால்போதும் என்று விட்டுவிட
வேண்டியதுதான்.ழீடின் இந்தநாவலில்
உள்ளது பூராவும் என் மொழிபெயர்ப்பில்
வந்திருக்க முடியாது என்று எனக்கு நிச்ச
யமாகத்தெரியும்.ழீடின் சிந்தனைகளை
யும்,கலையையும் ஓரளவிற்குக் காட்டியி
ருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்குண்
டு.நம் வாழ்க்கையே இந்தமாதிரி நாவல்
களால் வளம்பெறும் என்ற நம்பிக்கையி
ல் இந்தச் சிரமமான மொழிபெயர்ப்புக்
காரியங்களை மேற்கொண்டிருக்கிறேன்.
க.நா.சு

>>

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி : சுஜாதா

ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.

>>

வேட்டி தினம்! /திருப்பூர் கிருஷ்ணன்

தெருவெல்லாம் வேட்டிகளே தென்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆண்கள் உடை என்றால் அது வேட்டிதான். பான்ட், டிரவுசர் போன்ற

>>

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு/அழகியசிங்கர்

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான்

>>

புதுமைப்பித்தனின் ‘ கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ‘ கதை/-நாகேந்திர பாரதி

திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும்விதமாகக் கேலியும் கிண்டலும் கலந்து இந்தக் ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .

>>

புதுமைப்பித்தனின் ‘உம்….உம்’ கதைகள்/இராய செல்லப்பா

தமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.

>>

சுஜாதாவின் சாகாவரம் பெற்ற இளைமை துள்ளும் நடைக்காக/ராம் ஸ்ரீதர்

”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும்

>>

சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்/அழகியசிங்கர்

இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.

>>

ஞானக்கூத்தன்- இந்திய இலக்கியச் சிற்பிகள்- நூல் ஆசிரியர் அழகிய சிங்கர்/பானுமதி.ந 

ஞானம் என்பது தெளிந்து அமைவது. தில்லை அம்பல வாணன் ஞானத்தில் கூத்தாடுபவன்; அவன் அதே சமயம் கல்லால மரத்தின் கீழே மௌனமாக அமர்ந்து சின்முத்திரையில் ஞானத்தைக் கடத்துபவனும் கூட.

>>

‘துளிகள்’/அதங்கோடு அனிஷ்குமார்

நவீனவிருட்சம் இதழினைமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் அழகியசிங்கர் கதை ,கவிதை,நாடகம்,விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.அவர் எழுத்துக்களைப் பின் தொடர்வோருக்கு அவரது சாகசம் வியப்பைத் தரக்கூடியதாகும்.அவரது ச

>>

ஒரே பாடலில் ஒரு சொல் இரு பொருள்களில்/வளவ. துரையன்

இப்பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, கண்ணபிரான், பலதேவன் ஆகியோர் எழுப்பப்படுகிறார்கள். முதல் இரண்டு அடிகளில் நந்தகோபன் எழுப்பப்படுகிறார்.

>>

ஓய்வு ஊழியர்களின் நாள் இன்று /அழகியசிங்கர்

ஓய்வு ஊதியக்காரர்களில் நானும் ஒருவன். ஓய்வுபெறும்போது எப்படா ஓய்வு பெறப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

>>

பாரதியின் குயில் பாட்டு /முபீன்

தோழி மதுமிதா, பாரதியின் இலக்கியம் குறித்து எழுதுமாறு கேட்டபோது பாரதியின் குயில் பாட்டு பற்றி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

>>

நான்மணிக்கடிகை/மா கோமகன்

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு

>>