ஆர். வெங்கடேஷ்/மகத்தான அறிவியல் புரட்சி!

குளத்துபாசியின் ஒளியுணரும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ‘ஆப்டோஜெனடிக்ஸ்’ என்ற புதிய மருத்துவத் துறையையே உருவாக்கிய கார்ல் டெஸ்சராத், பீட்டர் ஹெக்மான், ஜார்ஜ் நகல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி படித்திருப்பீர்கள்.எவ்வளவு மகத்தான கண்டுபிடிப்பு …

>>

அதிரன்/கடைசி பஸ்

பூச்சிகளின் சத்தத்தில்அந்தி முழு இரவுக்குதயாராகிக் கொண்டிருந்தது. நிலவை முழுவதும் உண்டமேகங்கள் மெல்லநகர்கின்றன. கூரையற்ற அந்தநிறுத்தத்தில்அவள் மட்டும்தனியாய். இரண்டில் ஒன்றுகடந்து விட்டது என்பதைகுறிப்பில் உணர்ந்தவளுக்குமேலும் பயம். தூரத்தில் தெரிந்ததுஇன்னொன்று வருவது.அதுவும் கடந்து விட்டால்?? சுழலுகிறதுஅடிவயிறு. சரியாக வந்துநின்றது.விரைந்து ஏறியவள்மட்டுமே பேருந்தில். நகரம் தாண்டிதெருவிளக்கற்ற …

>>

தி.வள்ளி/ கொலுசு

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வள்ளி எழுதிய “கொலுசு என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – “அம்ம்ம்ம்மாடீடீடீடீடீ… ஆராச்சும் வாங்களேன்,” வேலாயியின் அலறல் கேட்டு ‘சங்கரன் மெஸ்’ஸில் வேலை …

>>

அழகியசிங்கர்/ஒரு பறவை

அவள் தினமும் அந்த இடத்திலேயே அமர்ந்திருப்பாள். அன்று அவள் சிகப்பு புள்ளிப்போட்ட உடைகளை அணிந்துகொண்டு அமர்ந்திருந்தாள். கூடவே ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் எங்குச் சென்றாலும் புத்தகத்தைக் கையில் வைத்திருப்பாள். அன்று என்னவோ ஒரு சிவப்புப் பறவை அவள் பக்கத்தில் …

>>

கி. பார்வதி/தீர்மானம்

நீண்ட நாட்களாக வீட்டுக்குள்ளேயே  புதைந்து கிடந்த  அஞ்சனா , இப்போது தான் வெளியில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறாள். பூங்காவின் இருக்கையில் அமர்ந்து  தனக்குப் பிடித்த புத்தகங்களைப் படிப்பாள். யாருடனும் பேசமாட்டாள். அவளை ஒருதலையாய்க் காதலித்தவன், தன்னை வஞ்சித்துவிட்டதாக நினைத்து, அவள் முகத்தில் …

>>

இரா. கலைச்செல்வி/விலங்கொடித்த விடிவெள்ளி

பழமைவாதக் குடும்பத்தில் பிறந்த மல்லிகாவுக்கு,  சட்டம் படிக்க வேண்டும் என்பதுதான் அடங்காத ஆசை. ஆனால், “பெண்களுக்கு எதுக்குடி சட்டப் படிப்பு? படித்தது போதும்” என்ற பெற்றோரின் சொற்களால் அவள் சிறகுகள் தினமும் வெட்டப்பட்டன.  ஒரு மாலை வேளையில், வீட்டின் திண்ணையில் அமர்ந்து, …

>>

எம்.எல்.பிரபா/பரிசு

‘கமலி’ அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அவளது முகம் சிவந்த தாமரை போல் அழகாக இருக்கும். அவளுக்குச் சிவப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்றும்  சிவப்பு நிற ஆடை உடுத்தி வீட்டின் பக்கத்தில் உள்ள, பூங்கா அமர்வில் உட்கார்ந்து புத்தகம் …

>>

சுவாமி நாதன்/அடையாள அட்டை

இன்று காலை பள்ளி கிளம்பும் போது திடீரென்று ‘அம்மா, என் பள்ளி அடையாள அட்டையைக் காணோம். நவீன் வீட்ல குளிக்கும் போது எங்கேயோ கழட்டி வெச்சுட்டேன் போல இருக்கு. தயவு செஞ்சு தேவி நவீன் போகும் போது கொஞ்சம் தேடிப் பார்க்கச் …

>>

கரந்தை இந்து / அம்மாவின் தலைகோதல்

அந்த பூங்காவில் ஒரு ஓரமாக அமர்ந்து சிவப்பு ஆடை அணிந்திருந்த இளம்பெண் தேவி ஶ்ரீ கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி சோகமாக இருந்தாள்.“ அம்மா, உனக்குப் பிரியமான நீ செய்ய முடியாமல் போன கதை எழுத வேண்டும் …

>>

கஸ்தூரி குருசாமி/தனிமை

வெண்ணிலா தனிமையில் உட்கார்ந்து தன் எதிர்காலத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இப்போதும் ஒரு வரனின் புகைப்படம் அனுப்பி உள்ளனர். ஆனால் அவள் நவ நாகரிக மங்கை. திருமணமான பின் எந்த கட்டுப்பாடுமின்றி வாழ அனுமதிக்கும் வரனை …

>>

எம் ஷங்கர்/ஜோடி

நீரஜா பூங்காவின் அமர்வில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் நினைவெல்லாம் அந்த நிகழ்ச்சியைச் சுழன்று வந்தது.  நீரஜா அரவிந்த்தின் 4 வருடக் காதலுக்குப்பின் நடந்த திருமணம் ஒரே வருடத்தில் முறிந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் : “ …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/வராத கடிதம்

மீனா தினமும் மாலை மொட்டை மாடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கடிதம் எழுதுவாள். அவள் எழுதும் கடிதங்களை யாருக்கும் அனுப்புவதில்லை. ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும், “ஒருநாள் நீ இதைப் படிப்பாய்” என்று எழுதுவாள்.அவளுடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு …

>>