செல்லம் சேகர்/பூட்டிய வீட்டிற்குள் பூவாசம்

மத்திய அரசு ஆசிரியர் சுந்தர், மனைவி மற்றும் எட்டு வயது மகள் சங்கீதாவுடன் தென்காசி அருகே பூர்வீக கிராமத்திற்கு வந்தார். தெருவின் கடைசி வீடு பச்சை கதவினால் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்ததால், அனைவரும் அதை “பேய் வீடு” என்றனர். எந்த நேரமும் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/பூட்டிய கதவு

காலத்தின் தடங்கள் படிந்திருந்த அந்த பழைய வீட்டின் சாயம் உதிர்ந்த பச்சை நிறக் கதவு மட்டும் ஏனோ எப்போதும் பூட்டியே இருந்தது. சுவரில் மங்கியிருந்த பழைய தபால்பெட்டி விழுகவா வேண்டாமா என்று ஊசாலாடிக் கொண்டு இருந்தது. வாசலில் காவலாளியைப் போலப் படுத்திருக்கும் …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/வெள்ள அபாயம்

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கவிதா கண் கலங்கினாள்.அந்தக் கோர விபத்து மக்களை கொத்துக் கொத்தாய் மண்ணுக்குள் அமுக்கியது. நேபாளத்தில் மண்ணை வாரி இறைத்து, சேற்றை அள்ளிக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு வந்த வேகத்தில் வாகனங்களை அடித்துச் சென்றது. கதிகலங்க வைத்தக் …

>>

இரா. கலைச்செல்வி/காத்திருந்த கருவூலம்

​அந்தப் பழைய வீட்டின் பச்சைக் கதவு பலவருடங்களாகப் பூட்டப்பட்டிருந்தது. சுவரில் தொங்கும் பழைய மின்சாரப் பெட்டியும், பின்னிக் கிடக்கும் கம்பிகளும் அந்த வீட்டின் மர்மத்தை அதிகரித்தன. ஊர் மக்கள் அதைத் ‘தீய சக்தி உள்ள வீடு’ என்று ஒதுக்கித் தள்ளினர்.​ஆனால், ஒரு …

>>

கஸ்தூரி குருசாமி/பேராசை

கோவிந்தன் தன் இரு மகன்களையும் சிரமப்பட்டு படிக்க வைத்து, இன்று இருவரும் சென்னையில் வேலை பார்க்கிறார்கள். கோயம்புத்தூரில் சூலூர் கிராமத்தில் கோவிந்தன் பள்ளி ஆசிரியராக இருந்தார்.அவரும் மனைவியும் ரொம்ப சிக்கனமாக இருந்து பணம் சேர்த்து நிலங்கள் வாங்கினார்கள். கோவிந்தன் மனைவி நாச்சியார் …

>>

மரு.ச.கந்தசாமி/பார்வதி பவனம்

முத்துசாமி ஸ்கூல் ஹெட் மாஸ்டர் ஆக இருந்து ரிட்டையர் ஆனவுடன் வந்த பணத்தில் கட்டிய வீடு பார்வதி பவனம். மாத பென்ஷன் , சாப்பாடு செலவு போக மிச்ச பணத்தில் வாழ்க்கை ஓடியது. மனைவி பார்வதி கை சாமார்த்தியத்தில் தாக்குப்பிடித்தது. இருவருக்கும் …

>>

சுஶ்ரீ/மூடிய கதவு

வேணுகோபாலன் கொஞ்சம் கண்டிப்பானவர்தான்.மனைவி வத்சலா,மகள் பத்மலோசனி இருவருக்கும் அவரைக் கண்டாலே ஒரு நடுக்கம்தான்.நேராகப் பாத்து பேச மாட்டார்கள். அம்மா வத்சலா,”பத்மா, உன் அப்பாவை உனக்கு நல்லா தெரியும்,அப்படியும் எப்படிடீ இந்த மாதிரி துணிச்சலா ஒரு காரியத்தை செஞ்சே” சட்னு பூஜை அறையிலிருந்து …

>>

அர்ஜுனன்/தபால்

பல வருடங்கள் கழித்து சொந்த ஊர் சென்றிருந்தேன். நான் பார்த்தவற்றில் என்னை மிகவும் பாதித்தது, அருணாச்சலம் ஐயா வீடு தான். சுவர்கள் பெயர்ந்து, சிதிலமாகி நின்றது. பூட்டிக் கிடந்த அந்த வீட்டுக்கு நாய் ஒன்று காவலாக படுத்திருந்தது. அவர் இறந்தபிறகு, அவரது …

>>

கௌரி சங்கர்/கார்த்தியின் நம்பிக்கை

தெருவின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது அந்த வீடு. ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ராமசாமி வசித்து வந்த வீடு.ஒரு கால் ஊனமுற்ற போதிலும், அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருக்க, அருகில் ஒரு முக்காலியில் ஒரு சொம்பில் தண்ணீர், இரண்டு மணிக்கு …

>>

அழகியசிங்கர்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

அழகியசிங்கர்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள் கூட்டமாய் நோயாளிகள்கூடியிருந்தவர்கள்எங்கும்அவர்கள் முகங்களில்ஒருவித அச்சம்எதிர்காலம் என்னவென்றுதெரியாமல் இருந்தார்கள் ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள் அந்தப் பெண்என்னை எப்படியாவதுகாப்பாற்றி விடுங்கள்உருக்கமாக இரைஞ்சினாள்ஆனால் விதியின்விளையாட்டைமாறவில்லை ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள் இதயத்தைக் கொண்டாடும்இன்றைய நாள்இதய நோயாளிகள்ஒன்றுகூடி கொண்டாடுவோம்ஜாக்கிரதையாய் இருப்போம்ஜாக்கிரதையாய் இருப்போம் ஒரு துடிப்பையும் …

>>

தி.வள்ளி/கானல் நீர் காதல்

பாழடைந்து போன அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். ஒரு காலத்தில் கலகலவென தாத்தா, பாட்டி ,மாமா ,அத்தை, சித்தப்பா, சித்தி,பிள்ளைகள் எனநிறைய ஆட்கள் இருந்த வீடு. இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது. கீழே படுத்திருந்த கருப்பு நாய் தலையை தூக்கிப் …

>>

சுஸ்ரீ/கனவு மெய்ப்பட வேண்டும்

பேரன்பின் சுகந்தம்(முதல் தொகுப்பு) WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு கனவு மெய்ப்பட வேண்டும்(சுஸ்ரீ) சம்பத் சொன்னான்,”அப்பா எப்பப் பாத்தாலும் கத்திட்டே தான் இருப்பாரு, விடுங்கண்ணே.” இப்படி மொட்டையா ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன …

>>

அழகியசிங்கர்/வேண்டாம்

வீட்டுத் தரகர் இந்த வீட்டைக் காட்டியதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வைத்திருக்கும் போஸ்டல் காலனி வீட்டில் எல்லா அறைகளிலும் புத்தகங்கள். வீடை இடித்துக் கட்டப் போகிறார்கள். பிரமோட்டர் எல்லோரையும் காலி செய்து தரும்படி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். அவனுக்குத்தான் புத்தகங்களை எடுத்துக் …

>>

சுந்தர மணிவண்ணன்/பூட்டிய கதவும் பூத்த நினைவுகளும்

. அது அந்தக் காலத்து வீடு. பாழடைந்து நிக்கிறதைப் பார்த்தாலே தெரியும்.எல்லாம் இடிஞ்சு விழுற மாதிரி இருக்கு. இன்னொரு மழைக்கு தாங்குமா தெரியல. அந்தக் கதவு மட்டும் இன்னும் கனமாத்தான் இருக்கு. செல்லுப் பிடிச்சு சிதறாம நிக்குது. அது மட்டும் கொஞ்சம் …

>>

கமலாமுரளி/மீண்டும் புதிதாய்

குட்டியானையில் வந்திறங்கினான் தங்கராஜு. சாயம் இழந்த பூட்டிய கதவு. வேண்டாமென ஒதுக்கிய உடைந்த பழைய நாற்காலி. எஜமான விசுவாசத்தை வாலை  ஆட்டித் தெரிவித்த டிங்கு. அவன் வந்ததும் ஓடி வந்து கட்டிக் கொள்ளும் செல்ல மகள் தியாவும், வசை  பாடிக்கொண்டே மோர் …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/காத்திருந்த நாய்!

மனோகர், மனைவி மேகலா மகள் ரேகா மூவரும் இந்த வீட்டில் வசித்து வந்தனர். பள்ளிக்கூட மாணவியான ரேகா பள்ளியில் இருந்து வரும்போது வழியில் அடிபட்டு கிடந்த நாயைப்பார்த்து வீட்டுக்கு தூக்கி வந்து அதன் காயங்களை குணமாக்க, தன் வாலை ஆட்டி அந்த …

>>

ஆர்.வெங்கடேஷ்/நீரிழிவுக்கு உண்மையான மருந்து

நான் பல ஆண்டுகால நீரிழிவு குறைபாடு உள்ளவன் என்பதை என் கட்டுரைகளைப் படித்துவருபவர்கள் ஏற்கெனவே தெரிந்துகொண்டு இருப்பீர்கள். பல சமயங்களில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். கடந்த ஞாயிறன்று, மீண்டும் எச்.பி.ஏ1சி, வெறும் வயிறு மற்றும் சாப்பாட்டுக்குப் பின்னான நீரிழிவு அளவுகளை பரிசோதனை …

>>

வானவில் கே. ரவி/வார்த்தைக்குள் அடங்குமா?

நடக்கும் போதென் காலடியில்நிலமும் நகர்ந்து செல்வதை நான்உணர முடிகிறதா? – ஒன்றைக்கடக்கும் போதே அதுவும் என்னைக்கடந்து செல்வது தெரிகிறதா?நினைக்கும் போதே இழையிழையாய்வடிவம் நெய்து பார்க்கின்றகலையை நெஞ்சம் கற்றதெங்கே?உனக்கும் எனக்கும் இடையினிலேபாலம் அமைத்துச் செல்வதற்குப்பழகச் சொல்லித் தந்தவர்யார்?நீயார் எனக்குக் காதலியா – என்னைவாசிக்கின்ற …

>>

ஹெமிங்வே/வேறொரு நாட்டில்

(பெண்கள் இல்லாத ஆண்கள் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு) இலையுதிர் காலத்தில் போர் எப்போதும் அங்கேதான் இருந்தது; ஆனால் நாங்கள் இனிமேல் அங்கே செல்வதில்லை. மிலானில் இலையுதிர் காலம் குளிராக இருந்தது; இருள் மிக விரைவாகவே சூழ்ந்துவிடும். பின்னர் மின்விளக்குகள் எரியத் தொடங்கும்; …

>>

பேரன்பின் சுகந்தம்/புதியதோர் உலகம் செய்வோம் – ச.மணிவண்ணன்

(முதல் தொகுப்பு) WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு 01 அது ஒரு சிறிய கிராமம். கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. மாலை சூரியன் மறையத் தொடங்கி விட்டான். இன்னும் சற்று …

>>

நாபா.மீரா/கடைசிக் கடிதம்

பூட்டியிருக்கும் அந்தப் பழைய வீட்டின் கதவுகளைச் சாவி பொருத்தித் திறக்கும்போது அன்று ஏனோ பூபதிக்கு மனம் கனத்துப்பேனது.உள்ளிருந்து இருமலும், முனகலும் விரவிய சத்தம்.வாசல் பிறையில் இருந்த தபால் பெட்டியை வெறித்தான்.கண்கள் யதேச்சையாகக் கையில் இருந்த தந்தியையும், அதிலிருந்த வாசகங்களையும் தொட்டு மீண்டது.“பூபதியா, …

>>

உமா ஸ்வாமிநாதன்/”பூட்டிய கதவும், படுத்த நாயும்…”

மத்தியான வெயில் தகித்துக் கொண்டிருக்க, அந்தப் பழைய பச்சைக் கதவு இறுக்கமாகப் பூட்டப்பட்டு கிடந்தது.கதவுக்குப் பக்கத்தில் கவிழ்ந்து கெடக்குற நாற்காலி, அதன்மேல் யார் உட்காருவாங்கன்னு நெனைக்க வச்சுச்சு.“ஏண்டா, இந்த வெயிலில் இங்க படுத்திருக்க?” அப்படின்னு அந்த வழியா போறவங்க எல்லாம்,நிழல்ல தூங்குற …

>>

பாலசாண்டில்யன் /உயிலோடு விளையாடி

மழை நீர் உட்புகும் அந்த 450 சதுர அடி வீட்டில், கொசுக்களோடும் நோயோடும் கழிந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கைக்குப் பிறகு, ரத்தினமும் சாரதாவும் மருத்துவமனையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தனர்.வீட்டுப் பீரோவில் இருக்கும் உயிலை எடுக்க நினைத்த விஜி, அப்பா அரணாக் கயிற்றில் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ பழங் கோவில்

டில்லி, பம்பாய், கல்கத்தா என வேலை பார்த்துவிட்டு, பணி ஓய்வில் 15 வருட வாசம் சென்னையில். சொந்த கிராமம் கச்சனா விளை, வன திருப்பதி பக்கம். முப்பது வருடங்கள் முன்பு பெற்றோர் சொந்தக் கிராம வீட்டிலேயே தங்கள் இறுதி மூச்சை விட்டனர். …

>>

வி.கே.லக்ஷ்மி நாராயணன்/அம்மா

இருபது வருடம் முன்னால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அம்மா, தனசேகர் ஞாபகத்தில் வந்தாள். பெண்டாட்டி பேச்சைக் கேட்டு ஏசி உதாசீனம் செய்யப்பட்டதால் அம்மா இப்படிச் செய்தது தனசேகர் அறியாதது இல்லை. பெண்டாட்டி மாரடைப்பில் சமீபத்தில் காலமாகிவிட இப்போது அம்மாவின் …

>>

வி.வி.கலைச்செல்வி/தங்கத்திற்கு மாற்று தங்கம் தான்

பதிலுக்குப் பதில் பேசுகிற பொம்மையைசட்டென்று கைதவறிப்போட்டுடைத்து விடுகிறாள் அத்விகாப் பாப்பாஉடைந்த பொம்மையிலிருந்துஅறையெங்கும் சிதறிவிழுகிறதுஇத்தனை நாட்களாய்பேசிய அத்தனை சொற்களும்.உடைந்தால் மறுபடி ஒட்டாது என்பதும்ஒட்டினால் பழையபடி நிற்காது என்பதும்அவள் ஒட்ட வைக்கும் போதுதான் தெரிகிறது.உடைந்த பொம்மைக்கு அழுகிறாள் அத்விகா பாப்பாஅத்விகாவால் சிதறிக் கிடக்கிறது பொம்மைபோலத்தான் …

>>

பார்வதி/பிரார்த்தனை

திருமணம் ஆகி முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒரு திருமணத்திற்காகப் பிறந்த ஊர்ப்பக்கம் செல்ல வேண்டியிருந்தது.திருமணம் முடிந்து, பிறந்த வீட்டுக் குல தெய்வத்தைத் தரிசித்து வரலாம் எனப் புறப்பட்டேன்.அந்தத் தெருவில் நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் தாண்டித் தான் கோயிலுக்குச் செல்ல …

>>

நாகேந்திர பாரதி/மஹாலட்சுமி  

பொங்கலுக்கு   , கூட்டுப்பட்டிக்கு வருவதை நிறுத்தவில்லை மஹா .  இந்த வருஷம்  ,  காதலன் சுந்தர்  சொன்ன விஷயத்தைச்  சரி பார்க்கணும் .  ‘நேரு தொப்பி மாமா’  மாட்டு வண்டியிலே,கூட்டுத் தடத்திற்கு வந்திட்டார்.   ஊத்துத்தண்ணியை மண்ணுப் பானையில் சுமந்துக்கிட்டு அவரு சம்சாரமும். …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/ஆச்சரியமான நங்கை!

வனிதா சிங்கார சென்னை வாசி பிறந்தது முதலே சென்னையை விட்டு வெளியூர் சென்றதில்லை.வனிதாவின் தோழி சசிரேகா திருமணம் மும்பையில் ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அதற்காகச் சென்னை யிலிருந்து மும்பை பிறகு குக்கிராமம் செல்ல மாட்டு வண்டி வாகனம்.நல்ல வேளையாக வனிதாவுக்கு ஹிந்தி …

>>

எம் .எல்.பிரபா/மாயா

அன்று மாயா தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்து இறங்கினாள்.பஸ் ஸ்டாப்பில் இருந்து அவள் வீடு ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அவளை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. மணியோ ஆறாகியது. பெட்டியை எடுத்துக் கொண்டு …

>>

சுந்தர மணிவண்ணன்/தொலைந்த பாதை… தொடரும் தேடல்

இறக்கைகள் முளைத்த பறவையாய் தேச எல்லைகளைத் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறேன்.​கணினித் திரை எனக்கு அளித்த வரமா ? எனை ஈன்ற தாய் தந்தை இறைவனிடம் பெற்ற வரமா?​அதிசயங்களை ஏழையும் கண்டு களித்தேன்; அதில் கிடைத்ததா சுகம்? சொகுசு காரில் அமர்ந்து,படகு சவாரிபோல் …

>>

செல்லம் சேகர்/மண் மீது நேசம்

கந்தன் குலதெய்வ பக்தி உடையவன் . எப்போதும் தன் வயலில் விளையும் நெல் அறுவடை முடிந்த வாரத்திலேயே குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துடுவான். அந்த முறையும் எல்லா ஏற்பாடுகளும் பண்ணி தயார் நிலையில் இருக்கும் போது பட்டணத்தில் விவசாய படிப்பு படிக்கும் …

>>

 பி.ஆர்.கிரிஜா/ஊடல்

மாடசாமி சத்திரப்பட்டியிலிருந்து பக்கத்துக் கிராமம் பாப்பம்பட்டிக்குத் தம்பியைப்  பார்க்க மனைவி வள்ளி, மகள் செல்வியோடு புறப்பட்டார். காலையில் கிளம்பும்போதே சண்டை ஆரம்பிச்சாச்சு. வள்ளிக்குப் பிடிவாதம் ஜாஸ்தி. ” நான் நடந்தே வரேன். நீயுமாச்சு, உன் வண்டியுமாச்சு” ” உன் திமிருக்கு அளவே …

>>

கஸ்தூரி குருசாமி/கந்தன் அருள்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் பார்க்கச் செங்கண்ணனும் சரஸ்வதியும் குழந்தை அழகம் மையும் காயாமொழியிலிருந்து தங்கள் ஒற்றை மாட்டுவண்டியில் திருச்செந்தூர் நோக்கிக் கிளம்பினர். திருச்செந்தூர் காயாமொழி 8 கி. மி தூரம்.சரஸ்வதி நடந்து வருவதாக வேண்டிக் கொண்டாள். சூரசம்காரம் நேரத்தில் உணவு விடுதியிலும் கூட்டம் …

>>

ஜெ.பாஸ்கரன்/மாயக் கண்ணன்!

ஆற்றங்கரை மணலில் கால்கள் பதிய, கொலுசுகள் குலுங்க, தூரத்தில் நிற்கும் பின்ன மரம் நோக்கி விரைகின்றாள் ராதா. தேமதுரப் புல்லாங்குழல் இசை அவளை இழுக்கின்றது.‘கண்ணா’குவிந்த உதடுகளின் ஓசை காற்றில் கரைய, மேகலை துவள, மேலாடை நழுவ, காற்றில் மிதப்பதுபோலச் சென்றவள், கண்ணனின் …

>>

வி.கே.லக்ஷ்மிநாராயணன்/வேண்டுதல்

மாட்டு வண்டி விரைவாக ஓடிக்கொண்டிருந்தது. முத்தையன் வண்டியில் உட்கார்ந்தபடி மாட்டை விரட்டிக் கொண்டிருந்தான். பக்கத்தில் மகள் ராணி.முத்தையனின் மனைவி பொன்னி பானை நிறையக் கூழை நிரப்பி தலை யில் சுமந்தபடி மாட்டு வண்டிக்கு இணையாக வேகமாக நடை போட்டுக்கொண்டிருந்தாள். தங்களின் கிராமமான …

>>

பாலசாண்டில்யன்/செல்லக்கோபம்

மணப்பாறை சந்தையில் புதுப் பானை வாங்கியதில் கோவிந்தனுக்கும் செல்லம்மாளுக்கும் வாக்குவாதம் மூண்டது.“உன் வண்டியே வேணாம்!” எனச் சினந்த செல்லம்மாள், பானையைத் தலையிலேந்தியபடி மாட்டு வண்டியின் அருகிலேயே விறுவிறுவென நடந்து வந்தாள். வண்டியில் அப்பாவும் மகளும் அமர்ந்திருக்க, அம்மா பிடிவாதமாகப் பக்கத்திலேயே பத்து …

>>

சாந்தி சந்திரசேகரன்/வாழ்க்கை பயணம்..!

சூரியன் மறையத் தொடங்கிய வேளையில், அந்த மாட்டுவண்டி புழுதி படிந்த மண் பாதையில் மெதுவாக நகர்ந்தது.வண்டியை ஓட்டியவர் ராமையா. அருகில் அன்பு மகன் ரகு. உடன், மனைவி லட்சுமி சில பானைகளைச் சுமந்தவாறு நடந்து வந்தார்.பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்/மாட்டு வண்டி

      கவினின் கிராமம் முறப்பநாடு. தாமிரபரணி தரணி. நெல்லையிலிருந்து 15 கிமீ.  மனைவி கவிதா சென்னைவாசி. இருவருமே சென்னையில் கணிணித் துறையில் டீம்லீடர்கள்.  கல்யாணத்துக்கப்புறமாக சென்னையிலேயே தனிக்குடித்தனம். கிராமத்தில் பெற்றோர் சொந்த வீட்டில். படிப்பு, மருத்துவம் எல்லாவற்றுக்குமே நெல்லை உகந்த இடமாயினும் …

>>

அழகியசிங்கர்/தீர்மானம்

அசிக்காடிலிருந்து மறையூர் கிராமம் 5 கிலோமீட்டர் தூரம் கூட கிடையாது.வேலவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அசிக்காடு கிராமம்தான்.ஆனால் அங்கிருந்து கிளம்பும்படி ஆகிவிட்டது வேலவனுக்கு.அசிக்காடு கிராமம் வறட்சி ஆகிவிட்டது. யாருக்கும் ஒண்ணும் கிடைக்காது. அதனால் மறையூர் கிராமம் போகலாமென்று கிளம்பி வந்துவிட்டான். குடும்பத்தோடு.மறையூரில் …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு VII நவம்பர் மாதத்தின் ஒரு சனிக்கிழமை. ஆன்டன் ரூபின்ஸ்டீன் ஒரு சிம்பொனி இசைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருந்தார். அரங்கம் மிகவும் கூட்டமாகவும் புழுக்கமாகவும் இருந்தது. லாப்தேவ் தூண்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய மனைவியும் கோஸ்த்யா கோச்செவோயும் வெகு …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/சந்தேகம் தீர்ந்தது!

         அருண் ஒரு ஐடி கம்பெனி ஊழியர் அவன் கம்பெனியில் பணிபுரியும் ஸ்ரேயா வை காதலித்து திருமணம் முடிந்தது. எல்லாம்நன்றாகப் போய்க் கொண்டு இருந்த போது  ஒரு சிக்கல்.    அதாவது ஸ்ரேயாவுடன் படித்த பள்ளி மாணவன் அதே கம்பெனியில் வேலைக்கு …

>>

ருக்மணி வெங்கட்ராமன் /கனவு உலகம்

காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. வேலைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு சவால் தான்.பள்ளி லீவ் என்றால் குழந்தைகளை தனியே விட்டு விட்டு செல்ல முடியாமல் ‘டே கேரில்’ குழந்தைகளை விட்டுச் சென்றனர்.நதியாவை டே‌ கேரில் விட்டு விட்டு சென்றார் அவள் …

>>

சசிகலா விஸ்வநாதன் /அன்பின் அணப்பு

எதிர்பாராமல் வேலை போய் விட்ட விரக்தியில் பகலில் கடற்கரைக்கு வந்திருந்தாள், சியாமளா. நேற்றுதான் அவளுடைய பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் வருகைக்காக நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தாள்.இந்த விஷயம் தெரிந்தால் அவர்கள் எத்தனை வருத்தம் அடைவார்கள்! வேலையில்லாமல் அமெரிக்காவில், ஒரு நாள் கூட …

>>

அர்ஜுனன் /மாறியது உறவு

நேபாள எல்லையோரம் இருந்த அந்த புனல் மின்சார நிலையத்தில் பணிபுரியும் ரிஷியும், மேக்னாவும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லை.அன்று தோன்றிய திடீர் வெள்ளத்தில் அந்த மின்சார நிலையமே தகர்ந்து விழத்தொடங்க, எல்லோரும் உயிர் பாதுகாப்பு தேடி வெளியே …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 167

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 167 – வெள்ளி (25.09.2026) மாலை 6.30 மணிக்குகு.ப.ராவின் 3 கதைகளை எடுத்து 6 படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள். அவர்கள் பேசிய காணொளியைக் கண்டு களியுங்கள்.

>>

அழகியசிங்கர்/நடிப்பு

இந்துவுக்கு அந்த நடிகனுடன் நடிக்கவே பிடிக்கவில்லை. நெருக்கமான காட்சிகளில் அவன் வரம்பு மீறி நடிப்பான். அவனுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால் கசப்பாக இருக்கும். அந்த நடிகனோ அவள்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்று சிபாரிசு செய்வான். வேண்டா வெறுப்பாக அவனுடன் நடிப்பாள். ஒருமுறை …

>>

மரு.ச.கந்தசாமி/வெள்ளித்திரை

“என்ன விலை அழகே, உன்னை விலைக்கு வாங்க முடியுமா? எனக் கதாநாயகன் நரேன் கூற ,கதாநாயகி தாரா,” அழகுக்கே விலையா? என்னையே தந்து விட்டேனே” என்று டயலாக் பேசினாள். இயக்குநர் சங்கர் ” கட் , கட், என்னம்மா ரெண்டு பேரும் …

>>

அன்டன் செகாவ் — மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு VI அடுத்த நாள் காலை 11 மணியளவில் — அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது — லாப்தேவும் அவரது மனைவியும் ஒரு இலகுரகக் குதிரை வண்டியில் பியாத்நிட்ஸ்கயா தெருவில் சென்று கொண்டிருந்தனர். வரவிருந்த சந்திப்பை லாப்தே விரும்பவில்லை; ஏனெனில் …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 9

மஹாளய பக்ஷத்திற்கு அறிவியல் விளக்கம் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் பித்ரு லோகத்தில் இருந்து நமது முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரை பார்த்து ஆசி வழங்கி வருவதற்கு தேவலோகத்தில் உள்ள தெய்வங்கள் வரம் அருளி உள்ளது .மஹாளய …

>>

சுந்தர மணிவண்ணன்/அந்த முகம்

நான் அவன் வீட்டில் நுழைந்து கூடத்தின் சுவரை உற்றுப் பார்த்தேன்.அதில் தொங்கிக் கொண்டிருந்தஅந்தப் படமும் பெயிண்டிங்கும் என்னை பிரமிக்க வைத்தது.“யார் வரைஞ்ச படம் இது”“கண்டு பிடி”கீழ கிறுக்கிவச்ச மாதிரி ஒரு கையெழுத்து போட்டிருக்கு.“எல்லாம் நல்லா தான் இருக்கு. அந்த முகம் மட்டும் …

>>

முனைவர் என் பத்ரி/கண்ணோடு கண்ணோக்கின்!

கல்பனா ஓர் ஐடி ஊழியர். கண்ணனும் ஒரு ஐடியா ஊழியர். இருவரும் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார்கள். ஒரு கிராமத்துப் பெண். கண்ணன் முழுக்க முழுக்க நகரத்தில் பிறந்து வளர்ந்து படித்து பணியில் சேர்ந்தவன். எதிரெதிர் துருவங்கள் குணங்களில். இருந்தாலும் அவர்களுக்குள் …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/அணைப்பு

அந்த இதமான, பாசமான அணைப்பு அனுஷாவுக்குத் தேவையாக இருந்தது. மகிழ்ச்சியில் மகிழ்ந்தாள்.காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் உயர் அதிகாரிகளிடம் எதுவும் பேச முடியாமல் தவிப்பாள் அனுஷா.கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும். விடுப்பு எடுக்கக் கூடாது. சாக்கு போக்கு சொல்ல முடியாது.முதல் …

>>

ரிக் பாஸ்/‘தீ’

BIG SKY JOURNAL-லிருந்து சில ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்திலேயே வெப்பம் வந்துவிடும். ஏப்ரலில் எப்போதும் காற்று வீசும்; அதிர்ஷ்டம் இருந்தால் வெப்பமும் இருக்கும். பொதுவாக வறட்சி நிலவும். அதனால் வயல்கள் காய்ந்து கிடக்கும்; காற்றும் தெற்கிலிருந்துதான் வீசும். பள்ளத்தாக்கில் உள்ள அனைவரும் …

>>

நாகேந்திர பாரதி /புதிய தென்றல்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் செயற்கை அறிவின் (AI ) ஆக்கிரமிப்பால் மனிதன் மாறிவிட்ட காலம் பழைய சஞ்சித , பிராரப்த பதிவுகள் மாறி புதிய ஆகாமியத்தில் ஐக்கியமான நேரம் .குடும்பம் இருந்தது , குழந்தைகள் இருந்தனர், சண்டை இருந்தது, சமாதானம் இருந்தது. …

>>

கு.ப.ரா/விடியுமா?

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோலிருந்தது.“சிவராமையர்-டேஞ்ஜரஸ்” என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னை யிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் …

>>

கு. ப. ரா. /நூர் உன்னிஸா

1 நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒரு வாரம் இருக்கும். ஒரு நாள் காலையில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப் போகிறதோ என்று யோசனை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கைக் கொண்டு …

>>

கு.ப.ரா /சிறிது வெளிச்சம்

அப்பா! அவள் துன்பம் தீர்ந்தது என்று ஒரு சமயம் தோன்றுகிறது.ஐயோ! தெரிந்தே அவளைச் சாவுக்கிரையாக விட்டுவிட்டு வந்தேனே என்று ஒரு சமயம் நெஞ்சம் துடிக்கிறது.நான் என்ன செய்ய முடிந்தது? அவள் இடமே கொடுக்கவில்லையே!அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவை …

>>

லண்டனைச் சேர்ந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் நீண்ட காலம் வாழ உதவும் 5 தினசரி பழக்கங்களைப் பட்டியலிடுகிறார்

உடற்பயிற்சியும் உணவுமுறையும் மட்டுமல்ல இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர், ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்பதை அவரது அன்றாட வாழ்க்கைமுறை தீர்மானிக்கக்கூடும் என்கிறார். ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு புதிய போக்குகள் அவ்வப்போது தோன்றி …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/21L

வேளச்சேரியிலிருந்து பாரிமுனை செல்லும் பஸ். காலையில் அலுவலக நேரத்தில் குறிப்பிட்ட பஸ்ஸூக்கு ஒன்றாக பயணிப்பர் சிலர். நான் 8.40 பேட்ச். தினமும் பயணிப்பதால் நிறைய பேசுவோம். நானும் அவளும் நெருக்கமானதும் அதே பஸ்ஸிலேதான். திடீரென முன்னால் போன 45B ப்ரேக் போட, …

>>

பாலசாண்டில்யன்/விரிசல்

கண்ணன் வீட்டிற்குள் நுழையும்போதே ஒருவித படபடப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. காதலித்த காலத்தில் அவன் காத்திருந்த அந்த வாசல், இன்று ஒரு ‘விசாரணைக் கூண்டு’ போலத் தோன்றியது. ​”இவ்வளவு நேரமா? உங்களுக்கு எப்பவும் ஆபீஸ்தான் முக்கியம். நான் இங்கே ஒருத்தியா செத்துப்பிழைக்கிறேன்!” கவிதாவின் …

>>

எல்.ரகோத்தமன்/கோப்பை – தேநீர்

கோப்பை – தேநீர் யாரோ எங்கோகுண்டு வைக்கிறார்கள்என் கோப்பையில்தேநீர் அதிர்கிறது! யாரோ எங்கோபெண்ணை சீரழிக்கிறார்கள்என் போப்பையில்தேநீர் சுவை இழக்கிறது! யாரோ எங்கோஊழல் செய்கிறார்கள்என் கோப்பையில்தேநீர் மேலும் கொதிக்கிறது! யாரோ எங்கோஎதற்காகவோ போராடுகிறார்கள்என் கோப்பையில்தேநீர் நிறம் மாறுகிறது! யாரோ எங்கோஅரசியல் பேசுகிறார்கள்என் கோப்பையில்தேநீர் …

>>

மரு.ச.கந்தசாமி/தாகம்

லாஸ் ஏஞ்சல்ஸில் இரவு 10 மணி. கிளாரா தன் வொர்க் அட் ஹோம் முடித்துவிட்டு பெட்ரூம் வந்தாள் .அங்கே தன் ஒரே மகள் ஜூலி அவளைப் பார்த்தவுடன்,’ மம்மி இப்போ ஸ்டோரி டைம்” என்ன ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். …

>>

பி. ஆர். கிரிஜா/எதிர்பாராதது

பாண்டியனுக்கு வேலை போய் விட்டது. இந்த ஐம்பது வயதில் இன்னொரு வேலை கிடைப்பது அத்தனை எளிதல்ல. தனிக்கட்டை. ஊரில் இருக்கும் அம்மாவிற்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் அனுப்புவான். இந்த மாதம் அம்மாவிற்கு எப்படி பணம் அனுப்பப் போகிறோம் என்ற கவலை மனதை …

>>

நாகேந்திர பாரதி/விஜி சம்பத் அவர்களின் ‘பெரிதினும் பெரிது கேள்’

முதல் கதையின் உணர்வுகளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் அடுத்த கதை சொல்ல வேண்டும்.இது விஜி சம்பத் அவர்களின் ‘பெரிதினும் பெரிது கேள்’ சிறுகதைஉயர்ந்த லட்சியங்களோடு வாழவேண்டும் என்று உணர்த்தும் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி வரிகள் . அதறகு உதாரணமாக இருக்க வேண்டிய …

>>

நாகேந்திர பாரதி/விக்னேஷ் பரமசிவம் அவர்களின் ‘ நரம்பின் குரல் ‘

வித்தியாசமான கதைக்களம். கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் , மூளையின் முக்கிய பகுதி செயல் இழந்து, ஒரு வருடமாகக் கோமாவில் இருக்கும் இளைஞனின் கடைசி விருப்பத்தை அறிந்து நிறைவேற்றும், செயற்கை நுண்ணறிவின், AI யின் மொழியற்ற உரையாடல் அவனின் மூளையைத் தூண்டி. சரியான தலைப்பு …

>>

சாரதா ஸ்ரீநிவாசன்/லிஸா

அம்மா அப்பாயி வீட்டுக்கு எப்ப . போவோம் , நான்காவது முறையாக ஓடி வந்து கேட்ட சாராவிடம் இன்னும் மூன்று நாட்களில் நம்ம அப்பாயி வீட்டுக்குப் போய்விடுவோம் ஓகேயா என்ற உடன் சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு வெளியே ஓடினாள்.ஒன்றிரண்டு நிமிடங்களில் …

>>

கௌரி சங்கர்/அன்பு அனைத்தையும் வெல்லும்

வளர்மதி சிறிய பெண்.தெருவில் வாழ்ந்து வரும் மற்ற குழந்தைகள் – என்ன காரணம் என்று தெரியவில்லை. அவளை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுவதில்லை. வளர்மதியும் அவர்களுடன் இணைந்து விளையாட முயற்சி செய்வதில்லை. பல முறை முயற்சி செய்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அவள் ஒதுங்கிக்கொண்டாள்.இருந்தாலும், அந்த …

>>

அன்டன் செகாவ் — மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு V மாஸ்கோவில் இருந்த லாப்தெவ் குடும்பத்தினர், மொத்தமாகத் துணி அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பின்னல் நாடாக்கள், துணி நாடாக்கள், அலங்கார விளிம்புகள், குரோஷே பருத்தி நூல், பொத்தான்கள் போன்ற பொருட்களையும், அவற்றைப் போன்ற …

>>

அல்பெர்டோ மொராவியா/ஒரு விளையாட்டு

இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கஸ் டேவிட்சன் மொழிபெயர்த்தது என் வருங்காலக் கணவர் விட்டோரியோவும் நானும் சேர்ந்து ஒரு விளையாட்டை உருவாக்கியிருக்கிறோம். அதற்கு நாங்கள் வைத்த பெயர் “மொந்தையான சொற்றொடர்களை வேட்டையாடுதல்”. அது இப்படித்தான் தொடங்கியது.ஒருநாள், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, திடீரென்று நான் …

>>

வி.கே.லக்ஷ்மிநாராயணன் /மீனாவின் எதிர்காலம்

சடாரென்று புல்லட்டில் வந்த ஒருவன் ஒரு போட்டோவை எடுத்து டீ கடைக் காரரிடம் காட்டினான். “ இந்தப்போட்டோவிலிருக்கும் பெண்ணை பார்த்திருக்கீர்களா?” என கேட்க, பார்த்த கடைக்காரர் அதிர்ச்சியுற்றார்.அது வேறு யாருமல்ல. நேற்று பக்கத்து ஊர் ரவுடிகளிடமிருந்து தப்பித்து வந்த அநாதைப் பெண் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன் /சிட்டு

நெடும் போரின் விழுதாக புராதன வள்ளி புரம் நகரே ஊசலாடிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கே பழமையான நகரம் அது. பிறக்கும் குழந்தைகள் எல்லாவற்றுக்கும் கண், காது, மூக்கு, தலை ஏதாவது ஒன்றில் குறைபாடு. அணுக்குண்டுகளின் தாக்கம். அந்தப் பகுதியிலே பொண்ணு மாப்பிள்ளை …

>>

அன்டன் செகாவ்/மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு IV யூலியா செர்கேயெவ்னாவின் அறைக்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த லாப்தேவ், முந்தைய நாளில் தான் அனுபவித்த அவமான உணர்வு மீண்டும் தன்னை ஆட்கொள்வதை உணர்ந்தான். நடந்தவற்றுக்குப் பிறகும் தன் சகோதரியை இவ்வளவு இலகுவான மனநிலையுடன் சந்திக்க வந்து, அவள் …

>>

நாகேந்திர பாரதி/அன்றும் இன்றும்

‘ பாப்பாவோடு ஒரு கண்ணு பட்டப்பகல் சூரியன் மாதிரி ஜொலிக்குது இன்னொரு கண்ணு அமாவாசை சந்திரன் மாதிரி கருக்குது . பாப்பாவோட மகிழ்ச்சியும் , அழுகையும் கலந்து காட்டுயிருக்கே . உனக்கு பிடிச்ச அந்தப் பறவைக்குக் கிரீடம் சூட்டி அழகு பார்த்துருக்கே …

>>

அர்ஜுனன்/பூக்களை பறிக்காதீர்கள்

ஐந்து வயது தீபா, ஒரு பூங்காவுக்குச் சென்றிருந்தாள். எங்கெங்கு காணினும், வண்ணமய பூக்கள்.தனக்கு பிடித்த பூ ஒன்றைப் பறிக்க முயன்றபோது, ‘பூக்களை பறிக்காதீங்க’னு குரல் ஒன்று வந்தது.ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் அவள் துணிந்து பறித்துவிட, அவள் காதில் ஒரு வண்டு …

>>

சுந்தர மணிவண்ணன்/கணக்கின் ரகசியம்

“ஸ்ருதி மாடியில் உட்கார்ந்து என்ன பண்ணிகிட்டிருக்க?”நாளைக்குக் கணக்கு பரீட்சை. ஞாபகம் இருக்கா? இல்லியா.”கிச்சனிலிருந்து அம்மாவின் குரல்.“ஞாபகம் இருக்குமா. மேத்ஸ் தான் போடறேேன் மா.”” பதிலில் சுரத்தில்லை.”அம்மாவுக்கு சந்தேகம்.மாடிக்குப் போனாள்.அம்மாவின் வருகை ஸ்ருதிக்கு சங்கடமானது.கையிலிருந்த பேப்பரை மடித்து வைத்துக் கொண்டே,“ஏன் மா இப்படி …

>>

கஸ்தூரி குருசாமி /இனிய நினைவுகள்

ஆரா சிறுவயதிலேயே எந்த காகிதம் கிடைத்தாலும் அதில் மிக அருமையாக விதவிதமாக படம் போட்டு கலர் கொடுப்பாள். மகள் சேட்டை பண்ணாமல் ஒரு இடத்தில் இருந்து பொழுது போக்குகிறாளே என நினைத்தனர் பெற்றோர்.அவளும் வளர்ந்து கல்லூரி போகும் வயதாகி விட்டது. காலம்தான் …

>>

பார்வதி/வருங்கால பிக்காசோ

படிப்பில் பின் தங்கிய மாணவன் துருவ். ஆனால் படம் வரையச் சொன்னால், அதீத கற்பனையில் செமையாக வரைவான்.படிப்புல புத்தி போகமாட்டேங்கிது. எப்பப் பார்த்தாலும் எதையாவது கிறுக்கிட்டே இருக்க. படிப்புலயும் புத்தியச் செலுத்து. அப்பா ஆதங்கப் பட்டார்.பத்து வயசு தான் ஆகுது. ஆனா …

>>

அழகியசிங்கர்/பவித்திராவின் ஓவியங்கள்

பவித்திரா எப்படி யார் மூலம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டாள் என்பது தெரியவில்லை.அவளுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. இந்தச் சின்ன வயதிலேயே விதம்விதமாய் ஓவியங்கள் வரைகிறாள். முதலில் என்னிடம்தான் காட்டுவாள். பள்ளியில் நடக்கும் ஓவியப் போட்டிகளில் அவள்தான் முதல். ஓவியம் வரைந்த பிறகு …

>>

தி.வள்ளி/சானா

ரொம்ப நேரம் வானத்திலேயே பறந்து கொண்டிருந்த அந்த மரங்கொத்திப் பறவை சானாவுக்கு அலுப்பாக இருந்தது.சானாவுக்கு எப்போதுமே தன் அழகின் மீது ஒரு கர்வம் உண்டு இளம் பச்சை நிற இறக்கையுடன் தலையில் கிரீடம் வைத்தது போன்ற சிறகும், நீளமான மூக்கும், குட்டை …

>>

சாந்தி சந்திரசேகரன்/கனவுலகத்தின் ரகசியம்..!

ஒரு நாள் மாயா என்ற சிறுமி அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த காட்டிற்குச் சென்றாள். அப்போது, சிறிய தங்கக்கிரீடம் அணிந்த ஒரு வண்ணப்பறவையைப் பார்த்தாள்.“மாயா என்னுடன் வா!!” என்றது அப்பறவை .அது பேசிய அதிர்ச்சியிலிருந்து அவள் மீள்வதற்குள், அவள் புது உலகத்திலிருந்தாள். …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 8

பிள்ளையார் சுழிக்கு அறிவியல் விளக்கம்அந்த காலத்தில் எந்த ஒரு கடிதமோ அல்லது ஒரு பேப்பரில் மளிகை சாமான் லிஸ்ட் போடும்போது ஒரு சுப விஷயங்கள் ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம் . இந்த கணனி கால மயக்கம் தொலைந்து போன …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/கைவண்ணம்

அனன்யாவின் மனமெல்லாம் பூரிப்பு. பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட ‘செய்தித்தாள் பெயிண்டிங்’கில் தான் மட்டுமே மிகவும் அழகாக கட்டிங், பெயிண்டிங் செய்திருப்பதாக மிகவும் மகிழ்ச்சியில் இருந்தாள்.இரவெல்லாம் தலையணைக்கருகிலேயே ஒரு பெரிய கவரில் கசங்காமல் வைத்துக் கொண்டாள்.தூக்கத்தில் இவளது கிராஃப்ட்டுக்கு முதல் பரிசு கிடைத்ததாகவும் , …

>>

அன்டன் செகாவ் — மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு III லாப்தெவ் எதிர்பாராத விதமாகத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தது யூலியா செர்கேயெவ்னாவுக்கு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அவளுக்கு லாப்தெவை ஓரளவுக்குத்தான் தெரியும்; தற்செயலாகத்தான் அவள் அவனைச் சந்தித்திருந்தாள். அவன் ஒரு செல்வந்தன்; நன்கு அறியப்பட்ட மாஸ்கோவைச் சேர்ந்த …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 166

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 166 வெள்ளி (18.09.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த மூன்றாம் பரிசுப் பெற்ற மிச்சமிருக்கிற 7 கதைகளை நான்குபடைபாளிகள் சிறப்பாக …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு II அது ஒளிமயமான, பண்டிகை உணர்வு நிறைந்த ஒரு காலை. சுமார் பத்து மணியளவில், பழுப்பு நிற உடை அணிந்து, தலைமுடியை நேர்த்தியாக வாரிக்கொண்டிருந்த நினா ஃபியோதரோவ்னாவை வரவேற்பறைக்கு அழைத்து வந்தார்கள்.அவள் அறைக்குள் சிறிது நேரம் நடந்துவிட்டு, …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு I இன்னும் இருட்டாகவே இருந்தது. ஆங்காங்கே வீடுகளின் ஜன்னல்களில் தெரிந்த விளக்குகளும், தெருவின் வெகு தொலைவிலுள்ள முனையில் இருந்த படைவீரர் தங்குமிடங்களுக்குப் பின்னால் எழுந்துகொண்டிருந்த வெளிறிய நிலவும் மட்டுமே அந்த இருளைச் சற்றே கலைத்தன.லாப்தெவ் தன் வீட்டுக்கு …

>>

எம்.எல்.பிரபா/சிக்கும், சித்துவும்

சித்து பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். படபடவென இறக்கை அடித்துக் கொண்டு வந்து விழுந்தது ஒரு பறவை. அதற்கு வயிற்றில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. சித்து பார்த்துவிட்டு தன் அம்மாவிடம் ஓடிச் சென்று நடந்ததைக் கூறினாள்.அம்மாவும், அவளும் அதற்கு மருந்து …

>>

விஜி ஆர் கிருஷ்ணன்/பொம்மை படம்

“ஏங்க வெளில பாப்பா விளையாடிட்டு இருக்கா, கொஞ்சம் கூப்பிடுங்க”அடுப்படியில் இருந்து குரல் கொடுத்த மஞ்சுவிடம்” மகி அப்போவே வந்து படம் வரஞ்சிட்டு இருக்கா” என்றான் மகேஷ்.எப்போ பாரு நியூஸ் பேப்பர் கிழிச்சு, கிழிச்சு கலர் அடிக்கிறா, அத வெள்ள பேப்பர் ல …

>>

முனைவர் என் பத்ரி/கண்காணிப்பு கேமரா

கௌஷிக் ஒரு கல்லூரியில் படிப்பு படிப்பவள். கிராமத்துப் பெண். இன்று மாலை நகரத்தில் உள்ள தன்னுடைய தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல வேண்டும். எப்படியோ அப்பா, அம்மாவிடம் அனுமதியும் பெற்று விட்டாள். துணைக்கு யார் வருவார்? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/எங்கள் தெருவிலும் பிள்ளையார்

1.மங்காத சொல்லெடுத்து பாடுவார் உண்டுதங்காத செல்வம் வேண்டுவார் உண்டுபொங்காதப் பொங்கல் படையல் உண்டு எங்கள் தெருவிலும் பிள்ளையார். 2.செந்தாமரை, செண்பக மாலைகள் உண்டுவந்தாரை வரவேற்கும் மனம் உண்டுமங்காத தீபங்கள் ஏற்றுவதும் உண்டு, எங்கள் தெருவிலும் பிள்ளையார். மஞ்சள் உண்டு, சந்தனம் உண்டுகொஞ்சும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/விநாயகா! எனக்கென் குறை?

(1) பூலகத்தில் யாவருக்கும் பொன்னைய தெய்வமிது.பேராதரவாய் மாதா பிதா குரு வெனஎன் மனதில் நீர் குந்தியிருக்க; விநாயகா! எனக்கென் குறை? (2)நல்லோசை தரும் வாணி, நீர்தலை அசைக்க,நாவிலே அமர்ந்தாள்!நான்முகனும் தலையெழுத்தை மாற்றி எழுத; விநாயகா! எனக்கென் குறை? செந்திருவும் செல்லாதிருப்பாள்;என்னில்லம் விட்டு.செஞ்சடையான் …

>>

தங்கேஸ்/ஹேப்பி பர்த்டே டூ யூ விநாயகா

ஹேப்பி பர்த்டே டூ யூ விநாயகப் பெருமானே ! எத்தனையோ கடவுள்களுக்குபிறந்த நாள் வந்தாலும்உங்கள் பிறந்த நாளைத்தான்ஊரெல்லாம் விழாவாக கொண்டாடுகிறது சினிமா நடிகர்களைப் போலவிதம் விதமான தோற்றங்களில்வண்ண வண்ணச் சிலைகள் காதை துளைக்கும்குத்துப் பாடல்கள்திசைகளை அதிர வைக்கும்மேளதாளங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்பானை …

>>

மு. இராமசாமி/விநாயகா! எனக்கென் குறை?

1. மாங்கனி பெறவே மயில் மீதேறிஉலகைச் சுற்றித் தம்பி திரும்புமுன்பெற்றோரைச் சுற்றிக் கனியை வென்ற விநாயகா! எனக்கென் குறை? 2.ஆனைமுகம் ஐந்துகரம் அகிலத்தைக் காத்திடும்சேனைத் தலைவனுக்கு முன்னவனாய்த் திகழ்ந்துஞாலம் நலமுற நல்லோன் நீயிருக்க விநாயகா! எனக்கென் குறை? பரமனது இரதத்தின் அச்சை …

>>

செல்லம் சேகர்/பசுமை பாதுகாப்பு

மாயா பதினோர் வயது சிறுமி .  வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இங்கு வந்து வந்து செட்டில் ஆனவள் .  இயற்கையை நேசிப்பவள் . புத்தக பிரியை. ரசனை மிக்கவள் . பசுமையான இடங்களைக் கண்டால் தன்னை மறந்த நிலையில் குருவி பட்டாம்பூச்சி …

>>

பாலசாண்டில்யன் /பூமியின் சுமைதாங்கி

கானகத்தின் அந்தி வெளிச்சத்தில் அசையாமல் நின்றிருந்தாள் இனியா. மனிதர்களின் கண்களுக்குப் பொட்டல் காடாய் விரிந்திருந்த அந்த இடம், அவளுக்கு ஒரு மாயக் கூடாரமாகத் தெரிந்தது.அவளது தலைமீது ஒற்றைக் காலூன்றி மெல்லிய எடையோடு அமர்ந்திருந்தது காட்டின் மரகதப் பறவை. அதன் தலையிலிருந்த சிறு …

>>

லால்குடி.வெ.நாராயணன்/கலையும் கதையும்: ஒரு உலகத்தின் பயணம்

​ அவள் காகிதத்தால் ஆன ஒரு சிறுமி. செய்தித்தாளின் பக்கங்களில் இருந்து அவளது உடல், உடை மற்றும் சிந்தனைகள் வெட்டியெடுக்கப்பட்டுத் தைக்கப்பட்டிருந்தன. அவள் வாழும் உலகம் வர்ணங்களும் வார்த்தைகளும் கலந்த ஒரு ஓவியம்.​ஒரு நாள், அவளது உலகின் இருண்ட வானத்தில் இருந்து …

>>

எம்.எல்.பிரபா/ஓய்வு

அப்பாடா!! என்னோட கடமை,பொறுப்பு எல்லாம் முடிஞ்சுது. ‘பசங்க ரெண்டு பேரையும் கரை சேர்த்துட்டேன். வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டாங்க. இனி நான் நிம்மதியா ஓய்வெடுத்து பொழுது கழிச்சிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டே சுவரோரம் இருந்த நாற்காலியில், கையை தலைக்கு மேலே தூக்கி வைத்து கொண்டார் …

>>

அழகியசிங்கர்/எங்கள் தெருவிலும் பிள்ளையார்!

மூன்று ஆண்டுகளாய்பிள்ளையார் வருகிறார்ஒரு வாரம் எங்களுடன் இருக்கிறார்காலை பொங்கல்மாலை விதம்விதமாய் எங்கள் தெருவிலும் பிள்ளையார் ஒவ்வொரு வீட்டிலிலும் விதம்விதமானதின்பண்டங்கள்தினம் தினம்பிள்ளையார் முன்தெருவில் உள்ளவர்கள்பக்தியுடன் படைக்கிறார்கள்பரவசத்துடன் வேண்டுகிறார்கள் எங்கள் தெருவிலும் பிள்ளையார் தெருவில் உள்ளவர்களைஇந்தத் தருணத்தில்அறிய முடிகிறதுபேச முடிகிறதுகாரணம் எல்லாம்பிள்ளையார் ஒருவரால் எங்கள் …

>>